Categories: Health

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள்?

பூண்டு பெரும்பாலும் எல்லா சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது பூண்டில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி6, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, அயோடின், சல்ஃபர், குளோரின் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

பூண்டுகளில் ஒருதலை பூண்டு, மலை பூண்டு, தரை பூண்டு, நாட்டு பூண்டு, தைவான் அல்லது சைனா பூண்டு என்று பல வகைகளில் உண்டு.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் உடல் சோர்வு, உடல் பலவீனம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும். பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் உடலுக்கு மிகுந்த நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கிறது. இதனால் உடலும் மணமும் புத்துணர்ச்சி அடைகிறது.

தாய்பால் அதிகம் சுரக்க பூண்டை வேகவைத்து பாலில் கலந்து சாப்பிடுவார்கள். பாலில் பூண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிட்டால் தொப்பை படிப்படியாக குறைவதோடு கணிசமாக உடல் எடையும் குறையும்.

சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் சாப்பிட்டும் கட்டுக்குள் வராமல் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலின் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

இரத்தத்தில் நச்சுக்கள் சேரும் போது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். அவ்வாறானவர்கள் பூண்டை உணவில் சேர்த்து கொண்டால் இரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

admin

Recent Posts

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

22 hours ago

சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்

கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…

22 hours ago

குழந்தை பிறப்பை முன்கூட்டியே திட்டமிட்ட சமந்தா… வைரலாகும் பழைய பேட்டி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…

23 hours ago

‘தலைவர் 173’ படப்பிடிப்பு தொடக்கம்… அஸ்வத் மாரிமுத்துவுடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…

23 hours ago

‘கருப்பு’ படத்திற்கு விஜய் தான் முதல் காரணம்… சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…

23 hours ago

மீண்டும் இணையும் ‘பிரேமம்’ கூட்டணி… நிவின் பாலியின் 50வது படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…

23 hours ago