லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால் அதன் சுவையே மாறிவிடும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீ தூளை கலந்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் அரை எலுமிச்சம் பழ சாற்றைக் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயாராகிவிடும்.
லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
தினமும் காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் லெமன் டீயைக் குடிப்பதால், அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
உடலுக்கு ஒவ்வாத சில உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், லெமன் டீ அவற்றைக் கரைத்து, உடல் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
எலுமிச்சையில் குவெர்செட்டின் உள்ளது. இது ஃபிளாவனாய்டு ஆகும். இது கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது.
லெமன் டீயில் இஞ்சியைச் சேர்க்கலாம். ஏனெனில் இது ஒரு பயோஆக்டிவ் ஆகும். இது தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…