Basil Joseph as Rajinikanth’s Son?
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தை முடித்த கையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்பதும் ஏற்கனவே கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிகாந்தின் மகனாக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பசில் ஜோசப் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பசில் ஜோசப், “நான் ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதன் விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது” என்று கூறியதும் இந்த தகவலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
மேலும், தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில் பசில் ஜோசப் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…