பாக்யா ரூமுக்குள் போலீஸ் வர அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா ஈஸ்வரி செல்வி மற்றும் இனியா ஆகியோர் ஒரு ஹோட்டல் ஒன்றை தேடி கண்டுபிடித்து அங்கே தங்குவதற்காக உள்ளே வருகின்றனர்.
வழியில் ஒவ்வொரு ஆண்களும் ஒவ்வொரு விதமாக இருக்க ஈஸ்வரிக்கு பயம் அதிகமாகிக் கொண்டே போகிறது. பிறகு உள்ளே வந்து இரண்டு ரூம் புக் செய்ய இன்னும் மேலே ஏறிச் செல்ல வேண்டும் என்பதால் ஈஸ்வரி கஷ்டப்பட பாக்யா கொஞ்சம் தூரம்தான் பொறுமையா வாங்க என்று சொல்லி அழைத்துச் செல்கிறார்.
ரூமுக்குள் போனது கொஞ்ச நேரத்தில் யாரோ வேகவேகமாக கதவைத் தட்ட பாக்கியா கதவை திறந்து பார்க்க போலீஸ் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு இவர்களிடம் யார் நீங்க எங்கிருந்து வந்தீங்க எதுக்கு வந்தீங்க என கேள்வி கேட்டு விசாரணை நடத்துகின்றனர்.
அதன் பிறகு இவர்கள் கிளம்பி செல்ல செல்வியும் ஈஸ்வரியும் பக்கத்தில் இருக்கும் ரூமுக்கு தூங்க செல்கின்றனர். கோபி போன் செய்ய ஈஸ்வரி இங்கே நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் சொல்ல அவர் டென்ஷன் ஆகி பாக்கியாவை திட்ட பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராதிகா அலறி எழுந்து கொள்கிறார்.
பிறகு கோபி அம்மாவிடம் பேசிவிட்டு போனை வைக்க ராதிகா நான் பேக் பண்ணி தரேன் நீங்க கிளம்புங்க என்று சொல்ல கோபி எங்கே என்று கேட்க கேரளாவுக்கு தான் உங்களுக்கு தான் நினைப்பு முழுக்க அங்கேயே இருக்கே, அப்படியே போயிடுங்க திருப்பி வராதீங்க என்று சொல்லி பேரதிர்ச்சி கொடுக்கிறார். கோபி இவளும் விரட்டி விட்டா நடு ரோட்டில் தான் நிக்கணும் என புலம்புகிறார்.
அதைத் தொடர்ந்து இனியா அப்பா திட்டிட்டே வந்தார், பாட்டி பயந்துட்டு இருந்தாங்க. டிரைவர் ஓடி போய்ட்டாரு உனக்கு இவ்வளவு தூரம் கார் ஓட்டிட்டு வர பயமே இல்லையா என்று கேட்க ரொம்ப பயம் இருந்துச்சு அதைவிட உன்னுடைய அசைன்மென்ட் ரொம்ப முக்கியம்னு தோணுச்சு அதனாலதான் ஓட்டி வந்தேன் என சொல்ல இனியா சந்தோஷப்படுகிறார்.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…