போட்டுக் கொடுத்த பாக்கியா.‌. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

விமலா பழனிச்சாமியிடம் போட்டு கொடுத்துள்ளார் பாக்கியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா மற்றும் ஜெனி என இருவரும் வாக்கின் வந்திருக்க ஈஸ்வரி உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஷாக்காகின்றனர்.

இருவரும் ஈஸ்வரி கண்ணில் படாமல் எஸ்கேப் ஆக முயற்சி செய்ய ஈஸ்வரி இவர்களை பார்த்து விடுகிறார். பிறகு ஜெனியை பார்த்து என்ன ட்ரெஸ் இது என்று கேட்க வர கோபி அங்கு வந்து ஜெனி இடம் நலம் விசாரிக்கிறார். பிறகு பாக்கியா கோபி சென்ற பிறகு என்ன அத்தை நைட் எல்லாம் தூங்கலையா? உங்க கண்ணு செவந்து போய் இருக்கு என்று ஈஸ்வரியை பேச விடாமல் பேச நீ பேச்ச மாத்தாத என்ன டிரஸ் இது என்று கேட்க இதில் என்னத்த இருக்கு நாம புடவை கட்டிய பழகிட்டும் அவ ஃப்ரீயா டிரஸ் போடட்டுமே என்று சொல்ல இதெல்லாம் உன் வேலை தான் என்று ஈஸ்வரி கேள்வி கேட்க ஆமாம் என்று சொல்கிறார்.

நான் இல்லைனதும் உன் இஷ்டத்துக்கு ஆடுறியா என்று கேட்க ஆமா அப்படித்தான் ஆடுவேன் உங்களுக்கு பொறாமையா இருந்தா நீங்க வீட்டுக்கு வந்துருங்க என்று சொல்ல நான் என் பையனோட தான் இருப்பேன் என்று ஈஸ்வரி பதில் கூறுகிறார். பிறகு உனக்கு ரெஸ்டாரண்டுக்கு டைம் ஆகலையா கலந்து என்று சொல்கிறார் குழந்தைக்கு பால் கொடுக்க வேணாமா கிளம்பு என்று ஜெனியையும் அனுப்பி விடுகிறார்.

அதன் பிறகு கோபி வந்ததும் ஈஸ்வரி கமலா பேசி அனைத்தையும் சொல்ல கோபி நீங்க வாங்கமா இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று வீட்டுக்கு அழைத்து வந்து கமலாவை கூட்டி வைத்து மயூவிடம் பேசும்போது எங்க அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி நீங்க பேசினீங்களா என்று கேள்வி கேட்க கமலா நான் அப்படி எதுவும் பேசல என்று பொய் சொல்ல ஈஸ்வரி சத்தியமா இவ பேசினா என்று சொல்கிறார். எங்க அம்மா பொய் சொல்ல மாட்டாங்க என்று கோபி ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக பேசி கமலாவை திட்டிவிட்டு உள்ளே செல்கிறார்.

பிறகு ராதிகா நீ அப்படி சொன்னியாமா என்று கேட்க கமலா இல்லை என்று சொல்ல மயூவை கூப்பிட்டு விசாரிக்க மயூ உண்மையை சொல்லிவிட ராதிகா அம்மாவை பிடித்து திட்டுகிறார். அடுத்ததாக பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது பாரை வைத்தவர் கடையை காலி செய்து கொண்டிருக்க பாக்யா கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு அவர் கொடுக்க முடியாது என்று சொல்கிறார்.

அது எப்படி சார் தர முடியாதுன்னு சொல்லலாம் என்று பாக்கியா சத்தம் போட்டு சண்டையிட அவர் உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்க நான் பணத்தை தரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க பழனிச்சாமி என்ட்ரி தருகிறார். என்னங்க என்ன பிரச்சனை என்று கேட்டு பாக்கியாவை உள்ள அனுப்பிவிட்டு பார் கடைக்காரரிடம் எதையோ பேச அவர் பணத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு என் கடையை காலி பண்ணிட்டீங்களா சந்தோஷமா இருங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.

பழனிச்சாமி யாரோ கம்ப்ளைன்ட் கொடுத்து காலி பண்ண வச்சிருக்காங்க என்று சொல்ல பாக்கியா சார் உங்களுக்கு இதுல எதுவும் தொடர்பில்லையே என்று கேட்கிறார். பழனிச்சாமி நான் எதுவும் செய்யல என்று சொல்கிறார். பிறகு வீட்ல இருக்கறவங்கள நலம் விசாரித்து விட்டு விமலை இனியாவோட காலேஜ்ல பார்த்தேன் என்று போட்டுக் கொடுக்கிறார். பழனிச்சாமி நான் அவன் கிட்ட இத பத்தி பேசுறேன் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Suresh

Recent Posts

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு!

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…

27 minutes ago

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல்

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’…

32 minutes ago

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை… ரசிகர்களுடன் ‘கொம்பு சீவி’ படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…

39 minutes ago

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…

44 minutes ago

‘வா வாத்தியார்’ எப்போது ரிலீஸ்?

'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…

55 minutes ago

காஞ்சனா பட நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து..வெளியான தகவல்.!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…

4 hours ago