ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி.. அதிர்ச்சியில் ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோர்ட்டுக்கு போன பாக்கியா இன்னும் விவாகரத்தில் உறுதியாக இருக்கிறாரா அல்லது உணர்ச்சிவசத்தில் எடுத்த முடிவு என எழில் சோதிக்க பாக்யா விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருக்கிறார்.

இந்த பக்கம் ராதிகா வீட்டுக்கு போன ஈஸ்வரி ராதிகாவை பார்த்து பாக்கியா ராதிகாவின் மீது மதிப்பும் மரியாதையும் பாசமும் வைத்திருந்ததை பற்றி பேசி அவளுக்கு எப்படி நான் துரோகம் செய்ய முடிந்தது என கேட்கிறார். என் குடும்பமே சின்னா பின்னமா போய் நிக்குது இதுக்கு நீ தான் காரணம். உன்னை எல்லோரும் எங்க வீட்டுல குடும்பத்துல ஒருத்தியா தான் பார்த்தோம் ஆனா நீ எங்க எல்லோருக்கும் இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா? நீ நல்லாவே இருக்க மாட்ட. வயிரெறிந்து சொல்றேன் நாங்க வீட்டுல கண்ணீரும் வேதனையும் உன்ன சும்மா விடாது என திட்டுகிறார்.

ராதிகாவை திட்டியதால் அவருடைய அம்மா குறிப்பிட அவரையும் நீ எல்லாம் ஒரு அம்மாவா என கடுஞ்சொல்லால் திட்டியிருக்கிறார். பிறகு ராதிகா எவ்வளவு பேச முயற்சி செய்தும் பேச விடாத ஈஸ்வரி சாபத்திற்கு மேல் சாபம் விட்டு மயூவையும் திட்டுகிறார்.

பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த ஈஸ்வரி நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிடுவே உன் பொண்ணும் நீயும் சந்தோஷமா வாழவே முடியாது. ரெண்டு பேரும் வாழ்க்கை முழுக்க கண்ணீரோடு தான் இருப்பீங்க என மண்ணை வாரி தூவி சாபம் விடுகிறார். இதனால் ராதிகா அதிர்ச்சி அடைந்து அப்படியே நிற்கிறார். பிறகு ராதிகாவை உள்ளே அழைத்துச் சென்ற அவருடைய அம்மா அந்த குடும்பத்துக்கு நல்லது பார்த்தா உனக்கு என்ன தியாகி பட்டமா கொடுத்தாங்க? பேசாம அந்த கோபியை கல்யாணம் பண்ணிக்க என கூறுகிறார். ராதிகாவும் ஈஸ்வரி பேசிய பேச்சாள் அதிரடி முடிவை எடுக்கப் போகிறார் என்பது போலவே இன்றைய எபிசோடு முடிவடைகிறது.


baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

துரியன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

துரியன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்காக ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

17 hours ago

விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா.? சாந்தனு ஓபன் டாக்.!!

80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ…

19 hours ago

OG: 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும்…

20 hours ago

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜு..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி 5 சீசன் முடிந்த…

20 hours ago

மனோஜ் சொன்ன உண்மை, சந்தோஷப்பட்ட பார்வதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…

1 day ago

விஜி சொன்ன வார்த்தை, நந்தினி முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

1 day ago