BaakiyaLakshmi Serial Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் டிவியை பார்த்துவிட்டு கதறி அழுகின்றனர். இனியா அம்மாவை ஏதாவது பண்ணிட போறாங்கன்னா என்று செழியன் இடம் அழ அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார். இல்ல செழியா எவ்வளவு பேர் கோபமா இருக்காங்க பயமா இருக்கு நேத்து நைட்டு கூட ஆன்ட்டி நான் வெஜ் பத்தி தான் பேசிக் கொண்டிருந்தார்கள் பிரஷா தான் வாங்கினாங்க இப்படி கெட்டுப் போறதுக்கு சான்சே இல்ல என்று சொல்ல சின்ன காய்கறி கலர் மாறியிருந்தா கூட தூக்கி போட்டுருவாங்க என்றும் பேசுகின்றனர். நீ போய் அங்க என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வா செழியா என்று அனுப்பி வைக்கிறார்.
உடனே ஈஸ்வரி ஜெனி இடம் என்னால தான் பாக்யாவுக்கு இப்படி ஆயிடுச்சு நான் எவ்வளவோ சொன்ன வீட்ல இருக்கும்போது சொன்னேன். அங்க போய் சொன்னேன் ஆனா இவ்வளவு நாளா என் பேச்சை கேட்கிற பாக்கியா இன்னைக்கு என் பேச்சை கேட்கல நான் வேணா நான் செய்ய மாட்டேன்னு சொன்ன நான் செஞ்சதால என்னோட ராசி இவ்வளவு பிரச்சனை வந்துடுச்சு என்று அவர் அழுது கொண்டே இருக்கிறார்.. அதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல பாட்டி என்று ஜெனி அவருக்கு சமாதானம் சொல்லியும் ஈஸ்வரி கேட்க மறுக்கிறார். ரெஸ்டாரண்டுக்கு சென்ற செழியன் வெளியில் கோபி நிற்பதை பார்த்து நீங்க இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க செய்தியை பார்த்து உங்க அம்மா ரெஸ்டாரண்டுக்கு பிரச்சனை வந்துருச்சுன்னு பார்க்க வந்தேன் அவ இப்படியெல்லாம் பண்ண மாட்டார் ரொம்ப நல்லவ தான் என்று செழியன் இடம் வேஷம் போடுகிறார்.
சரி நான் போய் உள்ள பாக்குறேன் என்று சொல்லிவிட்டு செழியன் கிளம்ப நம்ம இதுக்கு மேல இங்க இருக்கக்கூடாது இவை என்ன சொன்னாலும் நம்புவான் ஆனா எழில் நம்மள சுத்தமா நம்ப மாட்டான் அதனால நம்ம கிளம்பிடனும் வீட்ல போய் ஆயா கால் மேல கால் போட்டு கிட்டு டிவில பார்க்கலாம் என்று பிளான் பண்ணி போகும்போது பாப்கான் வாங்கிட்டு போனா கூட நல்லா தான் இருக்கும் என்று சொல்லிக்கொண்டு காரை எடுக்கிறார்.
மறுபக்கம் அமிர்தா காய்கறி நறுக்கி கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருக்க அதில் பாக்யாவின் ரெஸ்டாரன்ட் விஷயம் வருவதைப் பார்த்து அதிர்ச்சியாகி எழிலுக்கு போன் போடுகிறார்.
முதலில் போனை எடுக்காத எழில் பிறகு ஃபோனை எடுக்கிறார். நடந்த விஷயங்களை சொல்ல இயல் அதிர்ச்சி அடைந்து சரி நான் உடனே ரெஸ்டாரண்டுக்கு போறேன் என்று சொல்லி கிளம்பி வர, அந்த நேரம் பார்த்து பழனிச்சாமிக்கு அவர்களது அக்கா போன் போட்டு பாக்யாவோட ரெஸ்டாரண்டில் ஏதோ பிரச்சனை உனக்கு லிங்க் அனுப்பி இருக்கேன் பாரு என்று சொல்ல அவர் ஓபன் செய்து பார்த்து இந்த பிரச்சினையை பார்த்து அதிர்ச்சையாகி அங்கு கிளம்புகிறார். உடனே எழில் பைக்கில் வந்து இறங்க அர்மிதாவும் ஆட்டோவில் வந்து இறங்குகிறார் .நீ என்ன இங்கே என்று கேட்க ,என்னால் அங்கு இருக்க முடியல அதான் வந்தேன் என்று சொல்ல நிலா எங்க விட்டு இருக்க என்று கேட்கிறார் பக்கத்து வீட்ல விட்டு இருக்கேன் என்று சொல்லிவிட்டு இருவரும் உள்ளே வருகின்றனர். செழியன் சமாதானம் படுத்தி பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் ஒருவர் சேரை ஓங்கி கொண்டு வர எழில் தடுத்து நிறுத்துகிறார். இதைப் பார்த்து பாக்கி அதிர்ச்சியாக அமிர்தாவும் செல்வியும் அவரை ஓரமாக அழைத்து செல்கின்றனர். எழில் மற்றும் சிறிய நிறுவனம் அவர்களை சமாதானமாக பேச அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிறகு உணவுத் துறை அதிகாரிகள் ஒவ்வொருவராக வேலை செய்பவர்களிடம் விசாரிக்க எங்களுக்கு ஒன்னும் தெரியாது எல்லா பொருளும் அக்கா தான் வாங்கிட்டு வந்தாங்க என்று அங்கு வேலை செய்யும் இரு பெண்மணி சொல்கின்றனர். அதன் பிறகு ஆனந்திடம் கேட்க அவர் நீங்க செப்பு தானே உங்களுக்கு கெட்டுப் போன கரினு சமைக்கும் போது தெரியாதா என்று கேட்க அதற்கு நான் ஸ்மல் வருது வேண்டான்னு தான் சொன்னேன் மேடம் தான் பரவால்ல போட்டு சமையல் பண்ண சொன்னாங்க என்று சொல்லுகிறார்.
பிறகு செல்வியிடம் விசாரிக்க பொருள் வாங்கினதெல்லாம் அக்காதான் ஆனா கெட்டுப்போன பொருள் வாங்கல என்று சொல்லுகிறார். அப்படி கெட்டுப் போயிருந்தா சமைக்க மாட்டாங்க என்றும் சொல்லுகிறார். இங்கே ஆர்ப்பாட்டம் இருக்க இருக்க அதிகமாகிக்கொண்டே போக செழியனையும் எழிலையும் ஏதாவது பண்ணிடுவாங்க நான் போறேன் என்று சொல்ல அவரை தடுத்து நிறுத்தி வைத்துக் கொள்கின்றனர்.
உடனே பழனிச்சாமி வர அவர் என்னாச்சு மேடம் என்று சொல்ல நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் சார் உங்களுக்கு தெரியாதா என்று சொல்ல உங்கள பத்தி தெரியும் மேடம் இருங்க நான் போலீஸ் வர வைக்கிறேன் என்று சொல்லி போலீசுக்கு போன் போட்டு நீங்க ஒரே கலவரமா பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்லி அவர்களை உள்ளே அழைத்து வருகின்றனர்.
மற்றவர்களை வெளியே அனுப்பிய போலீஸ் இப்ப என்ன செய்வது என்று யோசிக்கின்றனர் இப்போதைக்கு மக்களை இங்க இருந்து வெளியே அனுப்பனும் அதுக்கு என்ன பண்ணனும்னா நம்ம காசு ரிட்டன் பண்ணனும்னு சொன்னா ஒத்துப்பாங்க என்று பழனிச்சாமி சொல்லுகிறார். உடனே அதைப்பற்றி பேச மீண்டும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு வழியாக பாக்கியா இரண்டு நாள் டைம் கேட்டு அவர்களை அனுப்பி வைக்கிறார்.
இரண்டு நாள்ல பணம் வரவில்லை என்றால் கடையை அடிச்சு நொறுக்கிடுவோம் என்று மிரட்டி விட்டு செல்கின்றனர். பிறகு உணவுத்துறை அதிகாரிகள் சொன்னது என்ன? பாக்கியா என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…