வருத்தத்தில் எழில், ஆறுதல் சொன்ன பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா வேலை பார்த்துக் கொண்டிருக்க வெளியிலிருந்து ராதிகாவின் அம்மா வர நீ மயு கூட இருப்பேன்னு நினைச்சா வெளியே இருந்து வர என்று சொல்ல காம்பவுண்ட்ல நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார். உடனே காலிங் பெல் சத்தம் கேட்க மாப்பிள தான் என்று சொல்ல உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க நான் பார்த்துட்டு தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு நானே போய் கதவை திறக்கிறேன் என்று திறக்கிறார். கோபி உள்ளே வந்தவுடன் காபி போட்டுமா மாப்பிள்ளை என்று கேட்க வேண்டாம் என்று கோபி சொன்னவுடன் ஏன் அந்த வீட்டிலேயே குடிச்சிட்டீங்களா என்று கேட்டு பிரச்சனையை ஆரம்பிக்கிறார். உடனே கோபி நான் அந்த வீட்டுக்கு போனது உண்மைதான் செழியன் குடிச்சிருந்தான் விட்டுட்டு வந்தேன் என்று சொல்ல அன்னைக்கு நீங்க கொல்லி போடக்கூடாதுன்னு சொன்ன அப்போ உங்க பையன் உங்க கூடவா நின்னா என்று மீண்டும் பேச கோபி கடுப்பாகி ட்ரீட்மென்ட் வந்தா ட்ரீட்மென்ட் வந்தா வேலைய மட்டும் பாருங்க தேவையில்லாம பேசி பிரச்சனைய உண்டு பண்ணாதீங்க என்று பேச அதற்கு உடனே ராதிகாவும் பாக்கியா வீட்டிற்கு போன விஷயத்தை சொல்லி விடுகிறார் கோபி நீ எதுக்கு ராதிகா அங்க போன என்று சொல்ல அவங்க வேணா இவன் மேல அக்கற இல்லாம இருக்கலாம் ஆனா இவ அப்படி இருக்க முடியாதுல்ல என்று சொல்ல கோபி அவங்களுக்கு தான் பாக்கியா இருக்கா இல்ல நீ எதுக்கு போற தேவையில்லாம அக்கறைப்பட தேவை கிடையாது என்று சொல்லிவிட்டு கோபி கிளம்புகிறார். உடனே ராதிகாவின் அம்மாவிடம் நான் எதுக்கு அந்த வீட்டுக்கு போனேன்னு கோபிக்கு தெரியாது ஆனால் உனக்கு தெரியும்ல என்று சொல்லிவிட்டு கோபி சொன்னதே தான் நானும் சொல்றேன் ட்ரீட்மெண்ட் வந்தமா அந்த வேலையை மட்டும் பாரு தேவையில்லாம பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காத என்று சொல்லிவிடுகிறார்.

அமிர்தாவும் நிலாவும் தூங்கிக் கொண்டிருக்க எழில் சாரீ நிலா சாரி அமிர்தா இது எல்லாமே கொஞ்ச நாளைக்கு தான் நான் நல்ல நிலைமைக்கு போயிட்டு அதுக்கப்புறம் நம்ம சந்தோஷமா இருக்கலாம் உங்களை கஷ்டப்படுத்துறதுக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று யோசிக்கிறார். அம்மா கிட்ட பேசினா நல்லா இருக்கும்னு தோணுது என்று போனை எடுத்து பண்ணி உடனே கட் பண்ணுகிறார் ஏற்கனவே அம்மாதான் நம்மளை இவ்வளவு நாளா சுமந்துகிட்டு இருந்தாங்க திரும்பவும் அவங்களுக்கு போன் பண்ணி கஷ்டப்படுத்த விரும்பல என்று யோசித்து விட்டு படுக்கிறார். உடனே பாக்யா எழிலிடம் வந்து போன் வந்ததை பார்த்து விட்டு திரும்பவும் பண்ண சாரி எழில் நான் போன் வந்தத கவனிக்கல என்று சொல்ல இல்லம்மா நான் உடனே கட் பண்ணிட்டேன் என்று சொல்லுகிறார். பிறகு நலம் விசாரித்து விட்டு ஏதாவது பிரச்சனையா எழில் என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா என்று சொல்லுகிறார். நீ என்னோட பையன்டா நீ முதல் வார்த்தை பேசும்போதே எனக்கு தெரியும் சொல்லு என்று கேட்க அதற்கு ஏழில் பிரச்சனை இல்லம்மா ஆனா ஒரு கேள்வி இருக்கு என்று கேட்க சொல்லுடா என்று பாக்யா கேட்கிறார். நான் டைரக்ட்ராவன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா அம்மா என்று கேட்க, என்னடா இப்படி கேக்குற ஏ பி சி டி கூட தெரியாம இருந்தா இந்த பாக்யா எனக்கு ரெஸ்டாரன்ட் சக்சஸ் ஃபுல்லா நடத்தின அதுக்கு காரணம் உழைப்புதான் இந்த டைரக்டர் ஆகணுன்றதுக்காக நீ நிறைய உழைச்சிருக்கிற கண்டிப்பா நீ டைரக்டர் ஆகும் என்று உறுதியாக சொல்ல எழில் கண்கலங்குகிறார். டைம் ஆயிடுச்சு நீ போய் தூங்கு என்று ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.

மறுநாள் காலையில் ஜெனி கிச்சனுக்கு வர பாக்யா காபி கொடுக்கிறார். செழியன் பற்றி விசாரிக்க ஜாகிங் போக கிளம்பிக்கிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார். நீ கவலைப்படாதம்மா இனிமே செழியன் குடிக்க மாட்டான் என்று சொல்லிவிட்டு நான் பேசுகிறேன் என்று சொல்லுகிறார். ஆனா ஆபீஸ்ல இருக்குற பிரச்சனை கூட எனக்கு தெரியும் ஆன்ட்டி இருந்தாலும் செழியனுக்கு ஏதோ ஒரு பொண்ணு கூட அப்பெர் இருக்கும்போது தோணுது என்று சந்தேகப்படுகிறார். அப்படியெல்லாம் கண்டிப்பா இருக்காது ஜெனி என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து செழியன் வருகிறார்.

பாக்யா தனியாக பேச வேண்டும் என்று செழியனை ஈஸ்வரி ரூமுக்கு அழைத்து செல்கிறார். ஈஸ்வரி குடித்து வந்ததற்கு செழியனை திட்டுகிறார். உடனே அதுக்கு கூட உங்க அப்பா வந்து எதுக்கு என்னையும் என் பையனையும் பிரிக்கிறீர்களா என்று கேட்பான் என்று சொல்லிவிட்டு அமைதி ஆகிறார். உடனே பாக்யா நீ குடிச்சிட்டு வந்தது எங்க போய் நிக்குது தெரியுமா ஜெனி திரும்பவும் உனக்கு ஒரு ஒன்னு கூட அஃபர் இருக்குமோன்னு நினைக்கிறா. என்று சொன்னவுடன் செழியன் அதிர்ச்சி அடைகிறார். ஜெனி இடம் வந்து சாரி கேட்டுவிட்டேன் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க இனியா ரிகர்சல் பத்தி பேசிக் கொண்டிருக்க குடும்பத்தினர் என்ன சொல்லுகிறார்கள்? அதற்கு இனியாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update
jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

18 hours ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

18 hours ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

19 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

19 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

2 days ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

2 days ago