BaakiyaLakshmi Serial Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் கோபியை ரெஸ்டாரண்டில் சந்திக்கிறார். ஆபீஸில் இருக்கும் பிரச்சனையை கோபியிடம் சொல்ல அவர் ஆறுதல் சொல்லுகிறார். பிறகு ஏதாவது சாப்பிடறியா என்று கேட்க முதலில் வேண்டாம் என்று சொன்ன செழியன் பிறகு கோபி வற்புறுத்தி கேட்டவுடன் சம்மதிக்கிறார். செழியனை கிச்சனுக்குள் அழைத்துச் சென்ற கோபி பிரைட் ரைஸ் நூடுல்ஸ் உனக்கு என்ன வேணும் என்று கேட்க ஏதாவது லைட்டா என்று சொன்ன வெஜ் சான்ட்விச் பண்ணவா என்று கேட்க ஓகே என்று சொல்லுகிறார்.
கோபியிடம் ஏதோ வந்துடறேன் என்று பேக்கிலிருந்து பீர் பாட்டிலை எடுக்க என்னடா இது என்று கேட்கிறார் அதற்கு குடிக்கலான்னு வாங்கிட்டு வந்தேன் குடிக்கவா என்று கோபியிடம் கேட்க ஹெல்த் ஸ்பாயில் ஆயிடும் இந்த ஒருவாட்டி மட்டும் குடிச்சுக்கோ என்று பர்மிஷன் கொடுக்கிறார். கோபி சாண்ட்விச் பண்ணி கொடுக்க செழியன் நல்லா இருக்குப்பா என்று சாப்பிடுகிறார். மீண்டும் செழியன் சோகமாகவே இருக்க, உடனே கோபி ஒரு பாட்டை போட்டு டான்ஸ் ஆடுகிறார். அதனைப் பார்த்து செழியன் சந்தோஷப்பட இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர்.
மறுபக்கம் அமிர்தா நிலாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து ஊட்ட நிலா சாப்பிட மறுக்கிறார். இதனால் எழில் ஏன் பாப்பா சாப்பிடலை என்று கேட்க சாம்பார் வேணும் என்று நிலா கேட்கிறார். உடனே நான் போய் சமைச்சு எடுத்துட்டு வரேன் என்று எழில் கிளம்ப ம அமிர்தா எவ்வளவு சொல்லியும் எழில் கேட்கவில்லை, எந்த காய்கறியும் இல்ல, சாம்பார் வைக்க பருப்பும் இல்லை என்று சொன்னவுடன் எழில் அமைதியாகிறார். அப்போ சொல்லு என்ன வேணும்னு வாங்கிட்டு வரேன் என்று சொல்ல இருக்கிற கொஞ்சம் காசுல விதவிதமா சாப்பிடணும்னு இல்ல அவளை நான் சாப்பிட வச்சுடுவேன் நீங்க வேலைய பாருங்க என்று நிலாவை வெளியே கூட்டி சென்று சாப்பாடு ஊட்டுகிறார்.
கோபி செழியனை வீட்டிற்கு கூட்டி வருகிறார். காரில் இருந்து இறங்கிய செழியன் கோபியிடம் வந்ததே தெரியலப்பா என்று சொல்லுகிறார். நீங்க ரொம்ப நல்ல அப்பா, உங்ககிட்ட வரும்போது அவ்வளவு கவலை இருந்தது ஆனா இப்போ இல்ல என்று சொல்லி ரொம்ப தேங்க்ஸ் பா என்று சொல்லுகிறார். எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ற செழியா என்று கோபி கேட்க இல்லப்பா நீங்க ரொம்ப பெஸ்ட் அப்பா என்று செழியன் சொல்ல அதற்கு கோபி என்னோட அம்மாவும் அப்பாவும் என்னை நல்ல பையன்னு சொல்லல, பாக்யா என்ன ஒரு நல்ல புருஷன்னு சொல்லல ஆனா நீ என்ன பெஸ்ட் அப்பான்னு சொல்லும்போது இந்த காயத்துக்கு எல்லாம் மருந்து போட்ட மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார். உடனே செழியன் உங்களுக்கு எதிரா இந்த வீட்ல அநியாயம் நடந்திருக்குப்பா அவங்க பண்ணது ரொம்ப தப்பு என்று சொல்ல என்னடா சொல்ற என்று கேட்க தாத்தா விஷயத்துல தான்பா என்று சொல்லுகிறார். சரி நீ உள்ள போயிடுவியா என்று கேட்க நான் போயிடுவேன் பா ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன் என்று செழியன் சொல்லியும் கோபி வலு கட்டாயம் ஆக உள்ளே கூட்டி வருகிறார். செழியன் குடித்து வந்ததை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
கோபி கொஞ்சமா தான் குடிச்சி இருப்பான் ஜெனிமா ஒன்னும் பிரச்சனை இல்ல நான் போய் மேலே படுக்க வச்சுட்டு வரேன் என்று கூட்டி செல்கிறார். உடனே இனியா அண்ணா குடிச்சி இருக்கியா என்று கேட்க பாக்யா மேல போக சொல்லுகிறார். கோபியும் செழியனை மேலே படுக்க வைத்து விட்டு கீழே இறங்கி வருகிறார்.
கோபியை ஒரு நிமிஷம் என பாக்கியா நிற்க வைக்க, கோபியிடம் எதுக்கு செழியனுக்கு குடிக்க வைக்கிறீங்க, எதுக்கு அவனை குடிக்க அடிமையாகிறீங்க என்று கேட்க அதற்கு கோபி நான் பண்றேன்னா அவனுக்கு இந்த வீட்ல நிம்மதி இல்லை அதனால குடிச்சிட்டு வந்து என்கிட்ட கஷ்டத்தை சொல்றான் என்று சொல்லுகிறார்.
அதற்கு பாக்யாவின் பதில் என்ன?கோபி என்ன சொல்லப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…
Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…
Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash