பாக்கியா மீது கோபத்தில் குடும்பத்தினர்.. என்ன செய்யப் போகிறார் ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியிடம் பேசியதை எடுத்து அவர் நில்லு என்ன திமிர் காட்டுறியா? என கேட்க சந்தோஷம் இல்லாத இந்த வாழ்க்கையில் இருந்து விலகி போக முடிவு பண்ணிட்டேன் என கூறுகிறார். பிறகு செழியன் நீங்க கோர்ட்டுக்கு போனா இனிமே உங்க கூட பேச மாட்டேன் உங்க முகத்திலேயே முழிக்க மாட்டேன் என கூறுகிறார்.

அதன் பிறகு இனியா நீ விவாகரத்துக் கொடுத்து வீட்டை விட்டு வெளியே போனால் நான் உன் கூட வரமாட்டேன் என கூறுகிறார். எனக்கு டாடியும் வேணும். இந்த வீட்ல இருக்க எல்லோரும் வேணும் என கூறுகிறார். ஈஸ்வரி கோபி பண்ண தப்பு தானே திரும்பி பண்ணுற என் மேல கொஞ்சம் ஆச்சு மரியாதை இருந்தா நீ கோர்ட்டுக்கு போகக்கூடாது. இந்த விஷயத்துல உன் பக்கம் என்னால நிக்க முடியாது என கூறுகிறார். பாக்கியா உங்க மேல மதிப்பு மரியாதையும் இன்னும் அப்படியே தான் இருக்கு என்னுடைய பிள்ளைகளுக்காக தான் நான் வாழ நினைக்கிறேன். இந்த விஷயத்துல உங்க பேச்சைக் கேட்காததற்கு என்னை மன்னிச்சிடுங்க என சொல்லி காலில் விழ ஈஸ்வரி தள்ளி சென்று விடுகிறார்.

அதன் பிறகு தன்னுடைய மாமனாரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு எழிலை அழைத்துக் கொண்டு கோட்டிற்கு கிளம்புகிறார். இந்த பக்கம் செல்வியும் ஜெனியும் பாக்கியா எடுத்தது நல்ல முடிவு என பேசிக்கொள்கிறனர். கோபி ரூமுக்கு போய் நீ எனக்கு டிவோஸ் கொடுக்கிறியா நான் உனக்கு தரேன் என வேக வேகமாக கோர்ட்டுக்கு கிளம்புகிறார்.

கீழே ஈஸ்வரி என்னங்க நீங்க அமைதியாவே பாத்துட்டு இருக்கீங்க என கேட்க இதுக்கெல்லாம் காரணம் கோபி தான் அவன் தான் போய் பாக்யாவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரணும் அவன் வரட்டும் என கூறுகிறார். இந்த நேரத்தில் சரியாக கோபி கீழே இறங்கி வர அவரை ஈஸ்வரி தடுத்து நிறுத்துகிறார். எங்க போற எனக்கு கோர்ட்டுக்கு அதான் கொடுத்துட்டு வரேன் என சொல்கிறார். அவளுக்கே அவ்வளவு திமிர் இருக்கும் போது எனக்கு எவ்வளவு இருக்கும் என கோபி திமிராக பேசுகிறார். நீ எங்க வேணா போ ஆனா பாக்கியா கால்ல விழுந்து அவளை சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு போ என வேணுகோபால் கூறுகிறார்.

நீங்கள் நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது நாளுக்கு டிவைஸ் கொடுத்துட்டு தான் வரப்போகிறேன். என சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அதிர்ச்சியாக இனியா வேண்டாம் டாடி என கெஞ்ச யார் வந்தாலும் போனாலும் நான் உன்னோட இருப்பேன் நீ என்னோட இரு அது போதும் என சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.

இந்த பக்கம் ராதிகா மயூராவிற்கு ஒரு அளவிற்கு உடல் நலம் தெரிய நிலையில் போனில் எப்போது மும்பை வரீங்க என கேட்க நாளைக்கு கிளம்பி விடுகிறேன் என வாக்கு கொடுக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் ஒரு வாரம் இருந்துட்டு போய் என சொல்ல இனியும் இங்கு இருந்தால் என்னால வர பிரச்சனைகளை தாங்கிக்க முடியாது என கூறுகிறார். பிறகு பைக்கில் சென்று கொண்டிருக்கும் பாக்கியா கோபி சத்தியம் செய்யும்போது என்னுடைய வாழ்க்கை நீ தான் ராதிகா என சொன்னதை நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

15 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

15 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

15 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

15 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

15 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

18 hours ago