மயூ சொன்ன வார்த்தை, பாக்யாவிற்கு தெரிந்த உண்மை,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா காபியை ரசித்து ருசித்து குடித்து தனியாக பேசிக் கொண்டிருக்க ராதிகாவிற்கு சாப்பாடு கொண்டு வரும் இதை பார்த்து சிரிக்கிறார்.

மயூவை பார்த்த பாக்கியா வா மயூ என்று கூப்பிட்டு உட்கார உட்கார வைத்து சாப்பிட ஸ்னாக்ஸ் கொடுக்கிறார். மயூ அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன் என்று சொல்கிறார். அம்மா பாவம் வாந்தி எடுத்துகிட்டே இருக்காங்க‌. ஆனா எனக்கு சந்தோஷம்தான். என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லார்கிட்டயும் சொன்னேன் அவங்களும் சந்தோஷப்பட்டாங்க என்று கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பற்றி சொல்ல வர ராதிகா ஓடி வந்து தடுத்து வருகிறார்.

நீங்க ஏன் புளிப்பாவே சாப்பிடுறீங்க உங்களுக்கு சமைச்சதையே எனக்கும் கொடுத்துட்டாங்க பிடிக்கவே இல்லை என்று சொல்கிறார். ஏன் புளிப்பாவே சாப்பிடுறீங்க என்று கேட்க பாட்டி புளி அதிகம் சேர்த்து சமைச்சிட்டு இருப்பாங்க என்று சமாளிக்கிறார்.

அதன் பிறகு எழில் கல்யாண பங்க்ஷன் ஒன்றுக்கு கிளம்ப ஈஸ்வரியையும் வரிங்களா என்று அவர் பேசாமல் அமைதியாக இருக்கிறார். நிலா ஓடி வந்து பாட்டி என் டிரஸ் எப்படி இருக்கு என்று கேட்க உனக்கு என்ன அழகா இருக்க என்று ஈஸ்வரி சொல்ல அதைக் கேட்டு எழில் அமிர்தா சந்தோஷப்படுகின்றனர்.

திரும்பவும் ஈஸ்வரியை கல்யாணத்துக்கு கூப்பிட நான் உன்கிட்ட பேசறதே கிடையாது இதுல நீ கூப்பிடுற இடத்துக்கு வரணுமா என்று கோபப்படுகிறார். நீ நிலாவை வளர்த்து நல்லா படிக்க வைத்து கட்டுக்கொடி அதுல எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது ஆனால் என்னதான் இருந்தாலும் இவ உன் பொண்ணு கிடையாது வளர்ந்த பிறகு இவனுக்கு விஷயம் தெரிந்தால் உன்னை அப்பா என்று கூட கூப்பிட மாட்டா என்று பேசி காயப்படுத்துகிறார்.

அதன் பிறகு ராதிகா அம்மாவிடம் எதுக்கு மயூ கிட்ட சாப்பாடு கொடுத்து அனுப்பிச்ச என்று கோபப்படுகிறார். அவ எல்லார்கிட்டயும் உண்மைய சொல்ல இருந்தா என்று சொல்ல கமலா இன்னும் சொல்லலையா என்று கேட்கிறார். உடனே கோபியை வீட்டுக்கு வரவைத்து இருங்க மைக் கிட்ட சொல்லிட்டு வரேன் உங்க வீட்டுக்கு போய் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லிடலாம் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

நீங்க எதுக்கு அத்தை நானே சொல்றேன் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க கேட்க அதுவரைக்கும் மறைந்து வாந்தி எடுத்து மாத்திரை சாப்பிட்டு கொண்டு இருப்பாளா கேள்வி கேட்க கோபி கூடிய சீக்கிரம் சொல்லுறேன் என்று கூறுகிறார்.

பிறகு ராதிகா மொட்டை மாடியில் நின்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க துணியை காய போட வந்த பாக்கியா பட்டும் படாமல் இதை கேட்டு விடுகிறார். பிறகு கீழே இறங்க வந்த ராதிகா தலை சுத்தி கீழே விழ போக பாக்கியா பிடித்துக் கொள்கிறார். உங்களுக்கு என்ன பிரச்சனை ஏன் இப்படி நடந்துக்கிறீங்க என்று கேட்க ராதிகா ஒன்னும் இல்லை என்று சமாளிக்க பாக்கிய நீங்க நடந்துக்கறது எல்லாம் பார்த்தா கர்ப்பமாக இருப்பவர்கள் நடந்துக்கிற மாதிரியே இருக்கு என சொல்கிறார். உண்மைய சொல்லுங்க நீங்க கர்ப்பமா இருக்கீங்களா என்று கேட்க ராதிகா டேட் தள்ளிப் போச்சு வாந்தி எடுக்கும் போது தான் அதையே கவனிச்சேன் டாக்டர் கிட்ட போய் செக் பண்ண போது கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க என்று சொல்கிறார். நாங்க ரெண்டு பேருமே இதை எதிர்பார்க்கல என்று சொல்ல பாக்யா நல்ல விஷயம் தானே என்று பேச ராதிகா கீழே இறங்கி வந்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

12 hours ago

Rathatha Thaa Lyrical Video

Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…

12 hours ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…

13 hours ago

சூர்ப்பனகையாக நடித்தது ஏன்?… ரசிகையின் கேள்விக்கு மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்!

இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…

13 hours ago

‘வாரணாசி’ படத்தில் டைம் டிராவல்… ராஜமௌலி பகிர்ந்த மிரட்டல் அப்டேட்!

'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது நடிகர்…

13 hours ago

அஜித்தின் 64வது படத்திற்கு ‘டேர் டெவில்’ என தலைப்பு… தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி!

நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்…

13 hours ago