கேள்வி மேல் கேள்வி கேட்கும் ஜோசப், அதிர்ச்சியில் ஜெனி,செழியன், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா மற்றும் எழில் என இருவரும் செழியனை கூட்டிக்கொண்டு வெளியே கிளம்ப சோபாவில் உட்கார்ந்து இருந்த ஈஸ்வரி எங்க போறீங்க என்று கேட்டது ஆளுக்கு ஒரு பதிலாக சொல்லி சிக்கிக் கொள்கின்றனர்.

பிறகு பாக்கியா ரெஸ்டாரன்ட் போயிட்டு அதுக்கப்புறம் ஒரு இடத்துக்கு போவதாக சொல்ல செழியன் இதுக்கு கூட்டிட்டு போறீங்க என்று கேட்க எழில் ஆட் ஏஜென்சிக்கு போக போறோம். செடியின் ஐடியா கொடுக்கிறதா சொன்னா அதுக்காக கூட்டிட்டு போறோம் என்று சொல்ல கோபி செழியனிடம் உனக்கு வேலை இல்லையா என்று கேள்வி கேட்க எழில் லீவு போட்டுட்டான் என்று செழியனை பேசவிடாமல் சமாளிக்கிறார்.

பிறகு ராமமூர்த்தி அதான் சொல்றாங்கல.. போயிட்டு வரட்டும் என்று சொல்ல இவர்கள் வெளியே கிளம்பி வருகின்றனர். பிறகு இவர்கள் கிளம்பி வெளியே வர செழியன் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்.

மறுபக்கம் மரியம் ஜெனியை சர்ச்சுக்கு போகலாம் என்று சொல்லி ரெடியாக இருவரும் கிளம்பி வரும்போது ஜோசப் எங்க போறீங்க என்று கேட்க மரியம் சர்ச்சுக்கு போயிட்டு வரோம் என்று சொல்ல ஜோசப் திடீர்னு என்ன என்று கேள்வி மேல் கேள்வி கேட்க மரியம் அவரிடம் எல்லாத்துக்கும் உங்க கிட்ட சொல்லி அனுமதி வாங்கிட்டு தான் போகணுமா என கோபப்படுகிறார். பிறகு ஜோசப் நான் வேணும்னா டிராப் பண்ணட்டுமா என்று கேட்க வேண்டாம் என்று சொல்லி கிளம்புகின்றனர்.

பிறகு இவர்கள் ஒரு வீட்டுக்கு வந்து இறங்க ஜெனி சர்ச்சுக்குன்னு தானே சொன்னிங்க இங்க எதுக்கு வந்திருக்கும் என்று கேட்க கவிதா வீட்டுல ஒரு சின்ன பிரச்சனை அதை பத்தி பேசிட்டு போகலாம் என்று சொல்லி சமாளிக்கிறார். அடுத்து பாக்யாவுக்கு போன் போட்டு எங்க இருக்கீங்க என்று கேட்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துருவோம் என்று சொல்கின்றனர்.

இவர்களும் இங்கு வர செழியன் ஆட் ஏஜென்சினு சொன்னீங்க ஒரு போர்டு இல்ல ஒன்னும் இல்ல என்று கேள்வி மேல் கேள்வி கேட்க இருவரும் செழியனை பிடித்து திட்டுகின்றனர். அதன் பிறகு ஜெனி பீட் பண்ண ரூமுக்கு சென்ற நிலையில் செழியன் உள்ளே கூட்டி வந்து ஜெனி இருக்கும் ரூமுக்குள் தள்ளி கதவை பூட்டி விடுகின்றனர்.

மரியம் எல்லாம் நல்லபடியா நடக்குமா என்று கேட்க எல்லாமே நல்லபடியா நடக்கும் என்று பேசிக்கொள்ள இவர்கள் ஒருவர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

14 hours ago

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்.??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…

17 hours ago

ஸ்ருதிக்கு வந்த ஐடியா, பிரச்சனையில் சிக்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…

17 hours ago

சபரி மற்றும் பார்வதி இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

18 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, சுந்தரவள்ளி முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

20 hours ago

கனி கேட்ட கேள்வி, பார்வதி சொன்ன பதில், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

20 hours ago