baakiyalakshmi serial episode-update
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை நிற்க வைத்து மூன்றாவது நாளாக கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். 25 வருஷமா நானும் எதிர்பார்க்கிற மாதிரி வாழ்க்கை இல்லாமல் எல்லாத்தையும் அனுசரிச்சுக்கிட்டு இந்த குடும்பத்துக்காக தான் வாழ்ந்துகிட்டு இருந்தேன் என கூறுகிறார்.
ஈஸ்வரி ஒரு பக்கம் கோபி பண்ணது பெரிய தப்புதான் ஆனால் எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கலாம். உன்னை விட்டுட்டு அவன போக விட்டுவிடுவோமா நாங்கலாம் எதுக்கு இருக்கோம்? கோபி பாக்கியா கிட்ட மன்னிப்பு கேளு, இனிமே இந்த மாதிரி தப்பு எதுவும் பண்ண மாட்டேன்னு சொல்லு. நான் உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு போய் சத்தியம் பண்ணுவேன் இனிமேல் ராதிகாவை நீ பார்க்க கூடாது, நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடனும். பசங்க வெளியில கூப்பிட்டா போகணும் என கூறுகிறார்.
பிறகு பாக்கியா இந்த குடும்பத்துக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு வாழ்வதற்கு நான் ரெடி ஆனா இந்த அத்தை மாமா மூணு பிள்ளைங்க என எல்லா உறவும் எங்கிருந்து வந்தது அவர் மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்ததினால் தானே வந்தது. ஒரு இடத்துல எத்தனை அடுக்கு வேணாலும் கட்டலாம் ஆனால் அதற்கு அடித்தளம் சரியாக இருக்க வேண்டும். அந்த அஸ்திவாரமே இல்லன்னு அதுக்கப்புறம் எப்படி நான் இந்த வீட்ல இருப்பேன் என கூறுகிறார்.
இதைக் கேட்ட ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்து நீ எங்க போவ? நீ எங்கேயும் போகக்கூடாது ஜெனி பாக்யாவை உள்ள கூட்டிட்டு போ என சொல்ல ஜெனி அவரை உன்னை அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். நீ என்ன முடிவு எடுக்குறியோ எடுமா, உன்னோட நான் இருப்பேன் என கூறுகிறார். இன்னொரு பக்கம் அப்பா நல்லவர் இல்ல என இனியாவும் செழியன் என்னப்பா இதெல்லாம் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலாம் எல்லாமே தப்பா இருக்கு என கேள்வி கேட்கின்றனர்.
அதன் பிறகு பாக்யா போலீஸ் ஸ்டேஷனில் நான் இருந்தபோது என்னுடைய மனசு உங்களைத்தான் தேடிச்சி ஆனால் உங்களுடைய நாடகம் வெளியே தெரிந்திட கூடாதுன்னு நீங்க வெளியூர்ல இருக்கிறதா நாடகம் போட்டிங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை நான் இந்த வீட்டை விட்டு போயிடவா என்று நான் எத்தனை முறை கேட்டு இருக்கேன் ஆனா நீங்க சொன்ன பதில் எல்லாம் அப்படி நடந்தால் சந்தோஷம் என்ற மாதிரி தான் இருந்தது ஆனால் எனக்கு எதுவும் அப்போ புரியல. நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமா வாழுங்க ஆனால் அதை எல்லாம் பார்க்க ஒரு முட்டாளா பைத்தியக்காரியா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் என வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார்.
பாக்கியா வெளிய இருக்க முடியாது என எல்லோரும் அம்மா என அழுது கொண்டே வெளியே ஓடுகின்றனர். ஈஸ்வரியும் அவருடைய கணவரும் உடைந்து போகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…