கவலையில் பாக்கியா, பாக்யாவை ரசிக்கும் பழனிச்சாமி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கர்ப்பம் என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்த நிலையில் தனக்கும் கோபிக்கும் இடையேயான விஷயங்களை நினைத்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார் பாக்யா.

துணியை காய போட்டு விட்டு கீழே வரும் போது ராதிகா அவரை தடுத்து நிறுத்தி நான் நீங்க கேட்டதும் ஆமா கர்ப்பமா இருக்கேன்னு சொல்லிட்டேன் அதனால உங்களுக்கு ஒன்னும் கவலை இல்லையே நீங்க ஹர்ட் ஆகலையே என்று கேட்க நான் எதுக்குங்க கவலைப்படணும், அவர் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு இப்ப நீங்க கர்ப்பமா இருக்கீங்க ஹெல்தியா சாப்டுங்க உடம்ப பாத்துக்கோங்க என்று சொல்ல ராதிகா உங்களுக்கு தெரிந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்கிறார்.

அதன் பிறகு பாக்கிய இந்த விஷயங்கள் எல்லாம் நினைத்து புலம்ப எழில், செழியன் ஆகியோர் நிலா பாப்பா உடன் வந்து பாக்யாவை சுற்றி சுற்றி விளையாடி அவரது கவலையை மறக்க வைக்கின்றனர். பிறகு பசங்க எல்லாம் இவ்வளவு பெருசா வளர்ந்து குழந்தையோட இருக்காங்க இந்த நேரத்துல அவர் எனக்கு குழந்தை பிறக்கப் போகுதுன்னு எப்படி சொல்லுவாரு அக்கம் பக்கத்தில் என்ன பேசுவாங்க என் பசங்கள கிண்டல் பண்ணுவாங்க என்று பல கேள்விகளை நினைத்து கவலைப்படுகிறார்.

பிறகு எழில் என்னமா யோசனையில் இருக்க என்று கேட்க ரெஸ்டாரன்ட் பத்திய சிந்தனை தான் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன் என சமாளிக்கிறார். அடுத்து பாக்யா ரெஸ்டாரன்ட வர பழனிச்சாமி பூக்கூடையுடன் முகத்தை மறைத்து வருகிறார்.

பாக்கியா யார் நீங்க என்று கேள்வி கேட்க பழனிச்சாமி முகத்தை காட்ட சார் நீங்களா என்ன இது இவ்வளவு பூ எடுத்துட்டு வந்து இருக்கீங்க என்று கேள்வி கேட்கிறார். என் பிரண்டு பூக்கடை பிசினஸ் பண்றான் நிறைய போய் இருக்குன்னு இரண்டு கூடை பூவை கொடுத்து அனுப்பினான். ஒரு கூடையை வீட்ல வச்சிட்டு உங்களுக்கு ஒரு கூடையை கொண்டு வந்தேன் என சொல்கிறார்.

சாமி போட்டோக்கெல்லாம் போடுங்க என்று சொல்லி வைக்க ஏன் சாமி போட்டோவுக்கு மட்டும்தான் போடணுமா நான் வச்சுக்க கூடாதா என்று கேட்க தாராளமா என்று பழனிச்சாமி சொன்னது மல்லிகை பூவை எடுத்து தலையில் வைக்கிறார். பாக்யாவின் அழகை பார்த்து பழனிச்சாமி ரசிக்கிறார்.

காபி குடிக்கிறீங்களா என்று கேட்க பழனிச்சாமி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி வெளியே சென்று வெளியேவும் நின்றபடி பாக்கியாவை பார்த்து ரசித்து வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு கையில் துணியுடன் வர பழனிச்சாமியின் அம்மாவும் அக்காவும் அதை வாங்கி பார்த்து இந்த மாதிரி எல்லாம் நீ போட மாட்டியே என்று கேட்க அதெல்லாம் இப்ப போடுவேன் என்று சொல்கிறார்.

பிறகு பாக்கியாவின் மேலிருக்கும் காதல் பற்றி சொல்கிறார். அவங்களுக்கும் என் மேல ஒரு இது இருக்கும்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு பாக்யாவை பார்த்து கல்யாண தேதி குறிக்கவா என்று கேட்க பழனிச்சாமி அதெல்லாம் இப்ப வேண்டாம் கொஞ்சம் நாளாகட்டும் என்று சொல்லி எடுத்து வந்த டீ சட்டை போட்டு வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 29-04-24
jothika lakshu

Recent Posts

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

5 hours ago

ஸ்டைலிஷ் உடையில் சமந்தா, போட்டோஸ் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…

12 hours ago

வடசென்னை 2: தனுஷ் சொன்ன தகவல்.!!

வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…

12 hours ago

டான்ஸ் ஆடுவது குறித்து தமன்னா சொன்ன தகவல்.!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…

12 hours ago

முத்து விரித்த வலை,சிக்கினாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…

15 hours ago

சிங்காரம் சொன்ன வார்த்தை, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

15 hours ago