பாக்கியாவிற்காக பேசிய செழியன். கோபத்தில் ஈஸ்வரி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி ஈஸ்வரி இடம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிச்சாமி வர வைத்து இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சொல்ல எழில் எங்க அம்மாவ பத்தி என்ன சொன்னீங்க என்று சண்டைக்கு போக பாக்கியா என்ன கேள்வி கேட்க இவர் யாரு இவருக்கு என்ன உரிமை இருக்கு என பதிலடி கொடுக்கிறார்.

உடனே ஈஸ்வரி அவன் கேள்வி கேட்கக் கூடாது நான் கேள்வி கேட்கலாம்ல என்று சொல்லி அந்த பழனிச்சாமியால் தான் எல்லா பிரச்சனையும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அவன் எதுக்கு யாரும் இல்லாத நேரத்துல வீட்டுக்கு வரணும்? அக்கம் பக்கத்தில் பார்த்தால் என்ன சொல்லுவாங்க அதெல்லாம் யோசிச்சு தான் கோபி கேள்வி கேட்டிருக்கான் அதுல என்ன தப்பு இருக்கு என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி கேட்கும் கேள்விகளை கேட்டு கோபி மனம் குளிர்கிறார்.

அதனைத் தொடர்ந்து பாக்கியா அக்கம் பக்கத்துல இருக்க எல்லாருக்கும் என்ன பத்தி தெரியும் இவருக்கு மட்டும் தான் என்ன பத்தி இப்படி பேசிகிட்டு இருப்பார் என்று சொல்கிறார். திரும்பவும் நான் அப்படித்தான் கேட்பேன் என கோபி பாக்யாவை அவமானப்படுத்த எழில் அடிக்கப்பட்ட செழியன் தடுத்து நிறுத்தி என்ட்ரி கொடுக்கிறார்.

நீங்க சொல்ற மாதிரி இங்க எதுவுமே இல்ல அப்ப நான் வீட்லதான் இருந்தேன். முதல்ல நானும் பழனிச்சாமி சாறும் தான் பேசினோம் அவர் வந்ததுமே சொல்லாம வந்ததுக்கு சாரி கேட்டுட்டு தான் பேச தொடங்கினார். ஆபீஸ் கால் வரவே நான் மேல் விழுந்து போயிட்டேன்.

இவர் பேசுனது எல்லாத்தையும் நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன் காது கொடுத்து கேட்க முடியல எங்க அம்மாவை அவ்வளவு அவமானப்படுத்தி பேசினார். பழனிச்சாமியை அவமானப்படுத்தி வெளிய அனுப்பினார். பாவம் அந்த மனுஷன் தல குனிஞ்சு போனாரு என்று சொல்ல ஈஸ்வரி உனக்கு அது தான் கவலையா என்று கேட்க இவர் பேசின வார்த்தைகள் அப்படி என்ன செழியன் பதிலடி கொடுக்கிறார்.

இவ நினைச்சிருந்தா உன்னையும் ஜெனியையும் எப்பயோ சேர்த்து வச்சு இருக்கலாம். அவ அத பண்ணல ஆனா நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணி உங்க அப்பாவை எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க என்று சொல்ல அது நான் பண்ண தப்பு முழுக்க முழுக்க தப்பு என் பேர்ல இருக்கு அதுக்கான தண்டனையை நான் அனுபவிச்சிட்டு இருக்கேன் என்று சொல்கிறார். அதோடு அதுக்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி கேட்டு ஈஸ்வரியை ஆஃப் ஆக்குகிறார்.

முதல்ல நீங்க பேசுனதை அம்மா பாதி கூட சொல்லல, முழுசா சொல்லி இருந்தா அவ்வளவு தான் என்று சொல்ல எழில் என்ன பேசினார் என்று கேட்க செழியன் அதெல்லாம் சொல்ல முடியல வாய் கூசுது என சொல்லி விடுகிறார். கோபி செழியா நீயும் உன் அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவியா என்று கேட்க கண்டிப்பா என பதிலடி கொடுக்கிறார்.

நீங்க பேசுனத பார்த்திருந்தா யாரா இருந்தாலும் அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க என சொல்கிறார். இந்த நேரம் ராதிகாவும் இனியாவும் வீட்டிற்கு வர கோபி ராதிகா நல்ல நேரத்தில் வந்த நீயே வா வந்து நியாயத்தை கேளு என கூப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 28-11-23
jothika lakshu

Recent Posts

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

2 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

10 hours ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

11 hours ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

11 hours ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

1 day ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

1 day ago