மீண்டும் குடித்துவிட்டு வந்த செழியன். பாண்டிச்சேரிக்கு கிளம்பும் ராதிகா, கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாலினி செழியனிடம் உங்களை எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்ல அவர் நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? எனக்கு இதெல்லாம் சரியா படல என்று சொல்ல மாலினி நான் உங்களை லவ் பண்றேன்னு சொல்லல, ஜெனியை விட்டுட்டு என் கூட வந்துடுங்கன்னு சொல்லல ஆனா எனக்கு உங்கள புடிச்சிருக்கு ஐ லைக் யூ என்று சொல்கிறார்.

மறுபக்கம் ராதிகா மயூவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க அப்போது கோபி வீட்டுக்கு வருகிறார். பிறகு ராதிகாவின் அம்மா போன் செய்து கல்யாண விஷயம் பத்தி சொல்ல ராதிகா கோபியிடம் பாண்டிச்சேரியில எங்க பேமிலி ரிலேடிங் கல்யாணம் இருக்கு, மூணு நாள் அங்க கிராண்டா கல்யாணம் நடக்க போகுது நாம அங்கதான் இருக்கணும் என்று சொல்ல கோபி நீயும் அம்மாவும் போயிட்டு வாங்க என்று சொல்கிறார். பிறகு ராதிகா நீங்க வாங்க என்று சொல்ல வேறு வழியில்லாமல் கோபி சரி என்று சொல்கிறார்.

அடுத்ததாக பாக்கியா படித்துக் கொண்டிருக்கும் இனியாவிடம் கேட்டரிங் ஆர்டருக்காக பாண்டிச்சேரி போகும் விஷயத்தை சொல்ல அவர் நீங்க போயிட்டு வாங்க தினமும் காலையில் எனக்கு போன் பண்ணி விஷ் பண்ணுங்க என சொல்ல வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் இனியாவை நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்கின்றனர்.

அடுத்து செழியன் மாலினி பேசிய பேச்சை எல்லாம் கேட்டு குடித்துவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி வந்து கதவைத் தட்ட பாக்யா செழியன் போதையில் வீட்டுக்கு வந்திருப்பதை பார்த்து கோபப்படுகிறார். பதில் சொல்ல முடியாத செழியன் கண்ணீர் விட்டு அழ பாக்யா என்ன ஆச்சு எதற்காக அழற? என கேட்க எதுவும் சொல்லாமல் அமைதியாகவே அழுகிறார். பிறகு பாக்கியா இனிமே குடிக்க கூடாது என சத்தியம் வாங்குகிறார்.

மறுநாள் காலையில் கோபி மற்றும் ராதிகா பாண்டிச்சேரி கிளம்ப இன்னொரு பக்கம் பாக்யா பூஜை செய்து அத்தை மாமாவிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு பாண்டிச்சேரி செல்ல தயாராகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 28.06.23
jothika lakshu

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

23 hours ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

24 hours ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

24 hours ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

24 hours ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

1 day ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

1 day ago