பழனிச்சாமி கொடுத்த ஐடியா, ஜெனி செய்த வேலை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தாத்தா எழிலிடம் உனக்கு ஏதாவது என்கிட்ட கேளு என்று சொன்ன கண்டிப்பா தாத்தா படம் முடிகிற வரைக்கும் உங்க கட்ட தான் கேட்பேன். எந்த அப்டேட்டா இருந்தாலும் உங்ககிட்ட சொல்றேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறார்.

அதன் பிறகு பாக்கியா ஜெனி இன்னைக்கு நீ வீட்டை பார்த்துக்கோ அமிர்தா நீ என்னோட ரெஸ்டாரன்ட் வந்துடு என்று சொல்கிறார். தாத்தாவிற்கு சாப்பிடுவதற்கு முன்னாடியும் சாப்பிட்டதுக்கு பின்னாடியும் மாத்திரை கொடுக்கணும் மறந்துடாத என்று சொல்கிறார். உனக்கு துணையா அமுதா வருவா என்று சொல்ல ஜெனி அதெல்லாம் எதுக்கு ஆன்ட்டி நான் பாத்துக்குறேன் என்று சொல்ல குழந்தைகளுக்கு சமாளிக்க முடியாது அதனால அவ உதவிக்கு இருக்கட்டும் என்று சொல்கிறார். பிறகு அமிர்தா நிலா பாப்பாவை கூட்டிட்டு வரேன் என்று சொல்ல ஜெனி நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார். அமிர்தா ஒரு குழந்தையை சமாளிக்கிறது கஷ்டம் இதுல நிலா வேறயா? பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார்.

அடுத்ததாக ஜெனி வீட்டில் இருக்க குழந்தை அழுது கொண்டே இருக்க தூங்கிக் கொண்டிருந்த ராமமூர்த்தி என்னம்மா ஆச்சு நான் மேல வரவா என்று கேட்க வேணாம் தாத்தா நான் பார்த்துக்கிறேன். குழந்தையை தூங்க வைத்து விட்டு உங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு குழந்தையை தூங்க வைத்து அவரும் படுத்து தூங்கி விடுகிறார்.

மறுபக்கம் பழனிச்சாமி ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். செல்வி பார் விஷயம் பயிற்சி சொல்ல சொல்லி பேச்சு கொடுக்க பழனிச்சாமி என்னங்க என்ன விஷயம் என்று கேட்க பாக்கியா பக்கத்துல ஒரு பார் வருது சார் என்று சொன்னதும் ஓ அப்படியா அதுக்கான வேலைகள் தான் போயிட்டு இருக்கா என்று கேட்கிறார். பார் வரதுனால எல்லாரும் கொஞ்சம் பயப்படுறாங்க. நானும் போனது கிட்ட பாரை வேற எங்காவது வைக்க முடியாதா என்று கேட்டேன். அவ வேணும்னா ரெஸ்டாரன்ட் என்கிட்ட கொடுத்து இருந்தா நான் பாத்துக்கிறேனு சொல்றாரு என்று சொல்ல பழனிச்சாமி அப்படித்தான் சொல்லுவாங்க என்று சொல்கிறார். ஓனர் கிட்ட பேசி பிரண்ட் ஆக வேண்டியதுதானே.. அக்கம் பக்கத்து கடைக்காரங்க கிட்ட நல்லா பேசி பழகுங்க என்று சொல்லி பாக்கியாவை அழைத்துச் சென்று அவரிடம் பேசுகிறார்.

பழனிச்சாமி நான் பாக்கியாவோட ஃப்ரெண்ட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டே கடை திறப்பு வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று கேட்க அவர் ஒரு சமையல் ஆர்டர் கொடுத்திருந்தோம். என் மச்சான் தான் ஏற்பாடு பண்ணுனா ஆனா இப்போ அந்த ஆளு வெளியூர் போறதுனால சமைக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன் என்று சொல்ல அதான் பாக்கியா மேடம் இருக்காங்களே அவங்க சமைப்பாங்க என்று பாக்யாவுடைய அருமை பெருமைகளை எடுத்து சொல்ல அவர் ஆர்டரை பாக்யாவிடமே கொடுத்து அதற்கான அட்வான்ஸ் பணத்தையும் கொடுக்கிறார்.

பாக்கியா எல்லாரும் பார் திறப்பு விழா முடிந்ததும் குடிச்சிட்டு இங்க வருவாங்க எதுவும் பிரச்சனை நடக்காதா என்று கேட்க பழனிச்சாமி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அப்படி எதுவும் நடக்காது ஒருத்தர் ரெண்டு பேர் தான் அப்படி இருப்பாங்க அதை எல்லாம் சமாளிச்சுக்கலாம் என்று சொல்ல நீங்க என் கூட இருக்கீங்களா என்று பாக்கியா கேட்க பழனிச்சாமி கண்டிப்பாக நான் நாளைக்கு உங்களோட இருக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு பாக்கியா அப்படி நடந்து சென்றதும் பழனிச்சாமி நாளைக்கு மட்டும் இல்லங்க எப்பவும் உங்க கூடவே இருப்பேன் என்று மைண்ட் வாய்ஸில் சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

1 day ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

1 day ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

1 day ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

1 day ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

1 day ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

1 day ago