ராதிகாவால் அதிர்ச்சியான கோபி.. பிசினஸ் நிறுத்திய பாக்கியா… இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்கியா சமைக்கும் இடத்தை மனமில்லாமல் மூடிவிட்டு செல்வியை பிடித்து கண் கலங்குகிறார். பிறகு அவரை வீட்டுக்கு அனுப்பி வைப்பது பாக்கியா ரோட்டில் நடந்து வருகிறார். இந்த நேரத்தில் ராதிகா அவருக்கு போன் செய்கிறார். உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும். எங்கே வரட்டும்? நீங்கள் சமைக்கும் இடத்திற்கு வரவா என கேட்கிறார். நான் இப்போ அங்கே இல்லை கோவிலுக்கு வாங்க என பாக்கியா சொல்ல அரை மணி நேரத்தில் வரேன் என போனை வைக்கிறார் ராதிகா.

பிறகு ராதிகாவை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார் பாக்கியா. உங்களிடம் அவசரப்பட்டு தேவையில்லாத வார்த்தைகள் விட்டுட்டு நான் அப்படிப் பேசியிருக்க கூடாது என்று என்று மன்னிப்பு கேட்கிறார் ராதிகா. உடனே பாக்கியா விடுங்க அந்த நேரத்தில் அங்கு யாராக இருந்தாலும் அப்படிதான் பண்ணி இருப்பாங்க ‌‌எனக்கும் நீங்க என்ன நம்பலைனு வருத்தமா இருந்துச்சு. வீட்ல எல்லாரும் என்ன பண்றாங்க என கேட்க எல்லாரும் பயந்துட்டாங்க இப்போ பரவாயில்லை. ஆனா என்ன இனிமே பிசினசை செய்ய வேண்டாம் என்று சொல்லிட்டாங்க, ஒரே நாள்ல எல்லா கஷ்டமரும் கையைவிட்டு போய்டடாங்க. எங்க சாப்பாட்டுல தான் தப்பு நீ செய்தி போட்ட யாரும் தப்பு எங்க மேல இல்லன்னு செய்தி போடல என கூறுகிறார்.

உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசி பார்க்க வேண்டியதுதானே என ராதிகா சொல்ல இனிமே பேசுவதற்கு எதுவும் இல்லை. என் பக்கம் பேச எதுவும் இல்லை என சொல்ல ராதிகா வருத்தப்படுகிறார். பிறகு பாக்கியா சரி நான் கிளம்புகிறேன். நீங்க கண்டிப்பா உங்கள கட்டிக்க போற வர கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வரணும் உங்களுக்கு பெரிய விருந்து வைக்கிறேன் என சொல்கிறார்.

அதன் பிறகு வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது இனியா அம்மா பிசினசை நிறுத்திட்டாங்க என சொல்கிறார். செழியன் நல்ல விஷயம் என சொல்கிறார். கோபியும் நல்ல முடிவு என சொல்கிறார். எது நல்ல முடிவு? நீ ஏன் நிறுத்தின மா என கேட்க எதுவும் பேசவேண்டாம் எல்லோரும் சாப்பிடட்டும் என கூறுகிறார் பாக்கியா. இதனால் கோபியின் அப்பா கோபப்பட்டு சாப்பிடாமல் சென்று விடுகிறார்.

பிறகு மீண்டும் தனது அம்மாவிடம் பேச இதில் பற்றி பேசவேண்டாம் என அவர் மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார். என்ன சொன்னாலும் நீ கேட்க போவதில்லை, என்னமோ பண்ணு என வருத்தப்பட்டு விட்டுச் செல்கிறார் எழில். மறு நாள் எல்லோரும் செழியன் சாப்பாடு வேண்டாம் என சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பி விடுகிறார். இனியாவை ஸ்கூலில் விட்டுவிட்டு கோபி ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

அப்போது ராதிகா டீசரை பார்த்து பேசினேன் என சொல்ல எங்கே அவங்க வீட்டுக்கு வந்தார்களா என அதிர்ச்சி அடைகிறார் கோபி. இல்லை வெளியில் பார்த்து பேசினேன் என கூறுகிறார். எதுக்கு இப்படி பண்ண தள்ளி இருக்கறதுதான் நல்லது என கோபி கூறுகிறார். நீங்க ஏன் டீச்சர் பத்தி பேசுனா டென்ஷன் ஆகறீங்க என ராதிகா கேட்க எனக்கு அவங்க யாருன்னு தெரியாது அப்படி இருக்கும்போது நான் ஏன் டென்ஷன் ஆக போறேன் என கூறுகிறார். அவங்க அஸ்பெண்ட் பிஸினஸ் நடத்த வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நாம ரெண்டு பேரும் போய் அவங்கள சந்தித்துப் பேசலாம் என கூறுகிறார். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார்.

Baakiyalakshmi Serial Episode Update 26.04.22
jothika lakshu

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

5 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

6 hours ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

7 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

7 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

7 hours ago