Baakiyalakshmi Serial Episode Update 25.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் சாப்பாட்டு பையோடு வீட்டிற்கு வருகிறார் பாக்கியம். இந்த நேரத்தில் எழிலும் வந்துவிட அம்மாவைப் பார்த்துவிட்டு போக வந்தேன் என்று கூறுகிறார். பிசினஸ் எப்படி போச்சு என கேட்க பாக்கியா போச்சு என கூறுகிறார்.
பிறகு செல்வி கையில் மசாலாக்களை எடுத்து வந்து இதையும் யாரும் வாங்கல என வைக்கிறார். பிறகு பாக்கியா சாப்பாடு யாரும் வேணாம் சொல்லிட்டாங்க மசாலாவும் யாரும் வாங்கல என்ன பண்றதுனே தெரியல என கண் கலங்குகிறார். நம்ம மேல தப்புன்னு செய்தி போட்டவங்க யாரும் நம்ப மேல தப்பு இல்லன்னு திரும்பவும் செய்தி போடல என கூறுகிறார். சரி விடும்மா பார்த்துக்கலாம் என கூறுகிறார். எல்லாம் சரியாகிவிடும் என ஈஸ்வரி கூறுகிறார்.
அதற்கு அடுத்ததாக எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது செல்வி நாளைக்கு வீட்டுக்கு வரவா இல்ல ஆபீஸ்க்கு வரவா என்று கேட்க பாக்கியா வீட்டுக்கு வா அப்புறம் ஆபீஸ்க்கு போகலாம் என கூறுகிறார். இதைக் கேட்ட கோபி நான் சமையல் பிஸினஸ் வேண்டாம் என சொல்லியும் நீ இன்னும் அதை பண்ணிக்கிட்டு இருக்கியா. இனிமே என்கிட்ட பேசாத உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீ என்ன பண்ணனும்னு நினைக்கிறாயோ அதை பண்ணிக்கோ என சத்தம் போட்டு விட்டு மேலே சென்று விடுகிறார்.
இனியா அப்பாதான் பிஸினஸ் வேண்டாம் என்று சொல்கிறாரே விட்டுடுமா என்ன சொல்ல செழியன் அவங்களுக்கு நம்மள பத்தி எல்லாம் கவலை இல்லை, அங்கே அவங்கள பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க என கூறிவிட்டு அவரும் மேலே சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் பாக்கியா கோபிக்கு காப்பி எடுத்துக்கொண்டு சென்று கொடுத்த மீண்டும் அவர் என்னிடம் பேசாதே என சத்தம் போட்டுவிட்டு சென்று விடுகிறார். இதனால் வேறு வழியில்லாமல் பாக்யா தன்னுடைய பிசினஸை நிறுத்த முடிவு செய்து சமைக்கும் இடத்தில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு கண்ணீரோடு வீட்டிற்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் கோவிலில் ராதிகா பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்க அப்போது பாக்கியா வீட்டில் சமையல் பிசினஸ் செய்ய வேண்டாமென சொல்லிட்டாங்க என கூறுகிறார். இதைக்கேட்டு ராதிகா ஷாக் ஆகிறார். இந்த காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…