ராதிகாவின் நடவடிக்கையால் கோபிக்கு வரும் வெறுப்பு… குடும்பத்தினருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த கோபி இந்தியாவிடம் நாளைக்கு எத்தனை மணிக்கு எங்க போறீங்க எனக் கேட்க எழில் அண்ணா இன்னும் எதுவும் சொல்லல சஸ்பென்ஸ் வைத்து இருக்கு என கூறுகிறார். பிறகு மறுநாள் காலையில் பாக்கியா 4 மணிக்கு எழுந்து காலை உணவு மற்றும் மதிய உணவு ஆகியவற்றை சமைத்து கொண்டிருக்க காய்கறிகளுக்கும் சத்தம் கேட்டு எழுந்து சென்று அம்மாவுக்கு உதவி செய்யச் சொல்கிறார்.

பாக்கியா வேண்டாம் வேண்டாம் என சொல்லி நான் செய்வேன் என சொல்லி தட்டை தட்டிவிட்டு டபுள் வேலையாக்கி விடுகிறார். இதனால் பாக்கியா திட்டிக்கொண்டே வேலை செய்கிறார். அதன்பிறகு விடிந்ததும் எல்லோரும் பிக்னிக் செல்ல தயாராக இருக்கின்றனர். கோபி ஆபிசில் வேலை இருக்கிறது என சொல்லிவிட்டு ராதிகா வீட்டிற்கு வர இங்கு அனைவரும் தயாராக இருக்கின்றனர்.

கிளம்பலாமா என கேட்க கேட்க சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என கோபி சொல்ல பிரேக் ஃபாஸ்ட் எதுவும் சமைக்கல, சமைக்கிற மூட் இல்லை என ராதிகா கூறுகிறார். சரி அப்போ ஹோட்டலிலேயே சாப்பிட்டுக் கலாம் லஞ்சும் ஹோட்டலிலேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என சொல்கிறார். ‌ ஹோட்டல்ல சாப்பிடாம கட்டுச்சோறு கட்டிக் கொண்டு போவாங்களா எனது ராதிகா சொல்கிறார். பிறகு இருவரும் கிளம்பி விட்டு கோபியிடம் சாவியை கொடுத்து வீட்டை கூட்டிட்டு வாங்க என ராதிகா சொல்வது கேட்டு அவர் அதிர்ச்சி அடைகிறார். இதுவே பாக்கியாவாக இருந்தால் எல்லா வேலையும் அவளை பார்த்துட்டு இருப்பா, இவ என்ன இப்படி பண்றா என கோபிக்கு லைட்டாக வெறுப்பு வர தொடங்குகிறது.

அதன் பிறகு பாக்கியா குடும்பத்தோடு ரெசார்டுக்கு வந்து இறங்கி ஒரு இடத்தில் அமர்ந்து பேசுகின்றனர். அதன்பிறகு சுத்தி பார்க்க கிளம்பி விடுகின்றனர். இந்த பக்கம் கோபி ராதிகா மற்றும் மகளை அழைத்துக்கொண்டு இதே இடத்திற்கு வருகிறார்.

செழியன், ஜெனி எதுவும் பேசாமல் அமைதியாக நடந்து வருவதை பார்த்த இனியா ஜெனியை இடித்து தள்ள செழியன் தாங்கிப்பிடிக்க இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் ஸ்டார்ட் ஆகி விடுகிறது.

ஒரு பக்கம் பாக்யா செல்வி ஈஸ்வரி மற்றும் அவருடைய கணவர் ஆகியோர் நின்று கொண்டிருக்க அவரது பின்புறத்தில் கோபி, ராதிகா மற்றும் மயூ ஆகியோர் கடையில் அதை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. கோபி ராதிகாவுடன் யாருடைய கண்ணிலாவது சிக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial Episode Update 25.03.22
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

5 hours ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

5 hours ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

5 hours ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

1 day ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

1 day ago

தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா? – கஸ்தூரி ராஜா ஆவேசம்

72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…

1 day ago