Baakiyalakshmi Serial Episode Update 23.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்யாவின் அம்மா சமைக்கும் வேலையை விடாதே நீ இந்த வேலையை ஆரம்பித்ததில் இருந்து தான் எனக்கு கொஞ்சம் பணம் தர, அதனால அவளும் என்னை முகம் சுளிக்காமல் பார்த்துக்கறா. பொம்பளைங்களுக்கு வேலை கண்டிப்பா வேணும் என கூறுகிறார். செல்வியும் இந்த வேலை தொடங்கிய பிறகுதான் நம்ம கிட்ட கொஞ்சம் பணம் எதுக்கு. நானும் நக நட்டு எடுத்த வச்சிருக்கேன். கொஞ்சம் கையில பணம் சேர்த்து விட்டேன் என கூறுகிறார்.
பிறகு பாக்கியா தன்னுடைய மாமனாரிடம் சென்று கோபி ஆகியோர் இந்த பிஸினஸ் வேண்டாம் என சொல்கின்றனர். இந்த தொழிலைத் தொடங்கியதிலிருந்து தான் என் அம்மாவுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முடிந்தது, ஆரம்பத்தில் இருந்து நான் எவ்வளவு பிரச்சனைகள் சந்தித்து இந்த தொழிலை நடத்திக்கிட்டு வரேனு உங்களுக்குத்தான் தெரியும். இப்போ நான் என்ன செய்யுறது நீங்களே சொல்லுங்க மாமா என கேட்க அவர் நீ தொடர்ந்து பிஸினஸ் நடத்து எனக் கூறுகிறார். ஈஸ்வரியும் உங்க மாமா சொன்னா கரெக்டா தான் இருக்கும் நீ பிசினஸ் பண்ணு என கூறுகிறார்.
அதன் பின்னர் பாக்கியா சமைக்கும் இடத்திற்குச் செல்ல அசோசியேசனில் இருந்து வந்து இன்னும் நீங்க காலி பண்ணலையா? போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்துட்டு ஏன் இங்க வந்தீங்க? எனக்கேட்க பாக்கியா நாங்க எதுவும் தப்பு பண்ணல அப்படி இருக்கும் போது நாங்க எதுக்கு காலி பண்ணனும்? உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க தைரியமாக பேசி அவர்களை அனுப்பி வைக்கிறார்.
இந்தப் பக்கம் ராதிகா டீச்சரிடம் அப்படி பேசியது ரொம்ப தப்பு, அவங்க ரொம்ப வருத்தப்பட்டு இருக்காங்க, ஜெனி என்னை கோவில்ல பார்த்து சொன்னாள் என கூறுகிறார். டீச்சர் பார்த்து அவர்களிடம் சாரி கேட்க வேண்டும் என ராதிகா சொல்ல கோபி அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நீ சாரி கேட்டா எல்லாம் முடிந்து போய்விடும் நான் அப்படியே விடு என்ன நடக்குதோ பார்த்துக்கலாம் என சொல்கிறார். இல்லைன்னா அவங்க பேச மாட்டாங்களா? பரவால்ல அவங்க என்ன உனக்கு அவ்வளவு இம்பார்டன்ட்டா என கேட்கிறார்.
பிறகு இந்த பக்கம் சமையல் செய்பவர்கள் வந்து இனிமேல் அந்த வேலைக்கு வரல எங்க வீட்டுக்கு போலீஸ் வந்தா எங்க வீட்டுக்குள்ள போய் சேர்க்க மாட்டாங்க என்று கூறி விட்டு நான்கு பெண்களும் கிளம்பி விடுகின்றனர்.
செல்வி எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்க கொண்டு போய் யாரும் அதை வாங்கிக் கொள்ளாததால் அப்படியே திருப்பிக் கொண்டுவந்து யாருமே சாப்பாடு வாங்கிக் கொள்ளவில்லை இப்போது என்ன செய்வது என பாக்கியாவிடம் கூறுகிறார். பாக்கியாவும் என்ன செய்வது என தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…