கமலா கொடுத்த ஷாக்,ராதிகா போட்ட கண்டிஷன்,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை சாப்பிட கூட டைனிங் டேபிள் வந்து உட்கார்ந்து ஒரு நிமிஷம் அம்மா யாருக்கு போன்ல பேசிட்டு இருக்காங்க அவங்களையும் கூப்பிட்டு வந்து எழுந்து சென்று ஈஸ்வரியை சாப்பிட கூட்டி வந்து உட்கார வைக்கிறார்.

வந்து உட்கார்ந்தது ஈஸ்வரி என்ன சாப்பாடு என்று கேட்க அவல் உப்புமா என்று எடுத்துக் கொடுக்க கோபி என் கையால பரிமாறுறேன் என்று சொல்லி பரிமாற என்னது அவல் உப்புமாவா இதெல்லாமா சாப்பிடுவீங்க? எங்க வீட்ல சாப்பிடுவோம் என்று கமலா பதில் சொல்கிறார். ஈஸ்வரி நாங்க சாப்பிட மாட்டோம் என்று சொல்ல கோபி இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிங்கமா.. நாளையில் இருந்து உங்களுக்கு சப்பாத்தி போட சொல்றேன் என்று சொல்கிறார். கமலா எல்லாருக்கும் யார் சப்பாத்திய தேய்க்கிறது என கேள்வி கேட்கிறார்.

அதன் பிறகு தொட்டுக்க என்ன இருக்கு என்று கேட்க அவள் உப்புமாவுக்கு யாராவது தொட்டுக்க செய்வாங்களா என்று கமலா கேள்வி கேட்க நாங்க செய்வோம் என்று ஈஸ்வரி பதில் சொல்கிறார். அவல் வேகவே இல்ல விரை விரையா இருக்கு என்று சொல்கிறார்.

மறுபக்கம் ராமமூர்த்தி வருத்தப்படுவார் என்று தெரிந்து எழில் அமிர்தா ஆகியோர் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருக்க பாக்கியா சுடுதண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார். பிறகு ராமமூர்த்திக்கு ஆறுதல் சொல்ல அவர் ஈஸ்வரி புள்ள பாசத்துல இருக்கா அவன் அந்த பாசத்தை வச்சு அவளை ஏமாத்திக்கிட்டு திரிகிறான். பட்டு வரட்டும், அப்பதான் அவளுக்கும் புத்தி வரும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக இங்கே கமலா ராதிகாவிடம் இருக்கிறது இரண்டு ரூம் அந்த அம்மா எங்க தூண்டும் என்று கேள்வி கேட்க ராதிகா கோபியிடம் இதைப் பற்றி பேச வர கோபியை தனியாக கூப்பிட ஈஸ்வரி கோபியை சத்தம் போட்டு உட்கார வைத்து எதா இருந்தாலும் இங்கேயே சொல்லு என்று கேட்க ராதிகா இருக்கிறது இரண்டும் ஒரு ரூம்ல நாம தூங்குகிறோம் இன்னொரு ரூம்ல என் அம்மாவும் மயூவும் தூங்குவாங்க எங்க அம்மா எங்க தூங்குவாங்க என்று கேட்கிறார்.

ஈஸ்வரி ஒரு ரூம்ல நீங்க தூங்குங்க இன்னொரு ரூம்ல நான் தூங்குவேன் என்று சொல்ல ராதிகா அப்ப எங்க அம்மா எங்க தூங்குவாங்க என்று கேட்க ஹால்ல தூங்க சொல்லு சூட்கேஸை தூக்கிக்கொண்டு ரூமுக்குள் சென்று விடுவது மட்டுமல்லாமல் கமலாவின் துணிகளை எடுத்து வந்து ஹாலில் வைத்து உங்களுக்கு ஏத்த இடத்துல வச்சுக்கோங்க என்று சொல்கிறார். கோபி ராதிகாவிடம் சிக்கிக் கொள்ள ராதிகா கோபி கூட்டிச்சென்று இன்னும் இரண்டு நாள் தான் டைம் உங்க அம்மாவை உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறீங்க என கண்டிஷன் போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 20-05-24
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

4 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

4 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

4 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

5 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

6 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

6 days ago