ராதிகாவிற்கு மயூ கொடுத்த கொடுத்த ஷாக்.. ராதிகாவிற்கு போன் செய்த பாக்கியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா டல்லாவே இருக்க அவருடைய மாமனார் என்னாச்சு என கேட்க ஒன்றும் இல்லை மாமா என சொல்ல செல்வி கோபி சார் கொஞ்ச நாளா சரியாகவே இல்லை அதனால தான் பாக்கியா அக்கா வருத்தமா இருக்கு என்று உண்மையை போட்டு உடைத்து விடுகிறார். உடனே அவருடைய மாமனார் கவலப்படாதே எந்த பிரச்சனையும் இருக்காது, எல்லாம் நல்லதாகவே நடக்கும் என கூறுகிறார்.

பிறகு ஈஸ்வரி மற்றும் ஜெனிக்கு பாக்கியா காபி போட்டு கொடுக்க காபியில் சர்க்கரை போட மறந்து விடுகிறார். இவர் இப்படி டல்லாக இருக்க ஜெனி இவருக்கு அறிவுரை வழங்குகிறார். உங்களுக்கு பிரச்சனை இருந்தால் அதை அவர் சமாளித்துக் கொள்வார். உங்களால் தீர்க்க முடியுமென்றால் அந்த பிரச்சினை பற்றி உங்களிடம் சொல்லி இருப்பார். நீங்க தேவையில்லாமல் கவலைப் படாதீங்க என்று அறிவுரை கூறுகிறார்.

இந்தப் பக்கம் ராதிகா கோபிக்கு விவாகரத்து வாங்கிக் கொடுக்கப் போகும் வக்கீலை சந்தித்து அவர் உண்மையாகவே விவாகரத்துக்கு விண்ணப்பித்தாரா? வழக்கின் நிலை என்ன? அவருடைய மனைவி முழு சம்மதத்துடன்தான் இதற்கு ஒப்புக் கொண்டாரா என கேள்வி கேட்க அவரும் ஆமாம் என்று கூறிவிடுகிறார்.

பிறகு பாக்கியா ராதிகாவிற்கு போன் செய்து எப்படி இருக்கீங்க பிரச்சனை சரி ஆயிடுச்சா என்ன ஏது என விசாரிக்க அது சரியாகும்னு தோனல என கூறி வருத்தப்படுகிறார். பதிலுக்கு ராதிகா உங்க வீட்டில் பிரச்சனை சரியாகி விட்டதா என சொல்ல என்ன சொல்றது ராதிகா என் கையை விட்டு ஏதோ போகிற மாதிரி இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என கூறி வருத்தப்பட ரெண்டு பேரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம் என ராதிகா கண்கலங்கி போனை வைத்து விடுகிறார்.

பிறகு மயூ சரியாக சாப்பிடாததால் அவருக்கு பால் கொடுத்து என்னாச்சு என ராதிகா கேட்கிறார். கோபி அங்கிளை ஏன் வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டீங்க, அவர் ரொம்ப நல்லவர் தானே நான் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் நம்மகிட்ட ஜாலியா இருக்கா என கூறுகிறார். அவரைப் பற்றி பேசாதே என ராதிகா கோபப்படுகிறார்.

பிறகு கோபி அங்கிள் தன்னை பார்க்க ஸ்கூலுக்கு வந்த இருந்ததாகக் கூற ராதிகா அதிர்ச்சி அடைய இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

4 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

4 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

4 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

5 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

6 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

6 days ago