ராதிகா மீது கடும் கோபத்தில் கோபி, ஈஸ்வரி சொன்ன வார்த்தை இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நைட்டு ராதிகா படுத்து தூங்கிக் கொண்டிருக்க கோபி ஃபோனை வைத்துக் கொண்டு இனியா பேசியதை பார்த்துக் கொண்டிருக்க ராதிகா இதை எடுத்து பார்க்க கோபி லைட் போட்டதும் தூங்குவது போல நடிக்கிறார்.

பிறகு கோபி மீண்டும் வீடியோவை பார்ப்பதை தொடர மீண்டும் ராதிகா இது போல் செய்ய அதன் பிறகு ராதிகா எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்க கோபி அதையும் கண்டு கொள்ளாமல் வீடியோ பார்க்க இதனால் கடுப்பாகும் ராதிகா ஃபோனை தூக்கி போட்டு உடைக்கிறார்.

இதனால் கோபமடைந்த கோபி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதனால இனியா என் பொண்ணு இல்லன்னு ஆகிடாது பாக்கியாவை விவாகரத்து பண்ணதுனால எனக்கும் இனியாவுக்கும் இடையில் எதுவும் இல்லைனு ஆகிடாது. எனக்கும் இனியாவுக்கும் இடையில நீ வரணும்னு நினைக்காதே என கோபப்பட்டு வெளியே கிளம்பி செல்கிறார்.

மறுநாள் காலையில் இனியா படித்துக் கொண்டிருக்க அங்கு வரும் கோபி உனக்காக காபி போட்டு கொண்டு வரேன் என சொல்லி கிச்சனுக்கு வந்து பாக்கியா மற்றும் செல்வியை நகர சொல்லிவிட்டு காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தார். காப்பி பிடிக்காத இனியா உங்களுக்காக குடிக்கிறேன் என சொல்லி குடித்து காபி நல்லா இருக்கு என சொல்கிறார்.

பிறகு ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் சோபாவில் வந்து உட்கார பாக்கியா கிச்சனில் இருக்க கீழே இறங்கி வந்த ராதிகா இதை பார்த்து கடுப்பாகி மேலே சென்று விடுகிறார்.

அதன் பிறகு ஈஸ்வரி இனியாவிடம் கோபிக்கு உன் மேல பாசம் அதிகம் இந்த பாசத்தை வச்சு நீயும் அவனிடம் பாசமாய் இருந்து உன்னுடைய கண்ட்ரோல்ல அவன கொண்டு வரணும். அப்புறம் அவன் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு இங்கேயே இருப்பான் என சொல்லிக் கொடுத்துவிட்டு மாத்திரை போட ரூமுக்கு செல்ல பாக்யா நீ எதுவும் பண்ணாம உன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என அறிவுரை வழங்குகிறார்.

அதற்கடுத்ததாக ஆபீசுக்கு கிளம்ப கோபி ரூமுக்கு வர ராதிகா கோபமாக உட்கார்ந்து இருக்க கோபியின் முக்கியமான பைல் ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு நான் கோபமாக இருக்கேன் என சொல்ல கோபமாக இருக்க வேண்டியது நான் தான். என் போனையும் உடைச்சிட்டு இப்ப கோபமா இருக்க மாதிரி நடிக்கிறியா என்று கோபப்படுகிறார்.

நீங்க என்னையும் மயூமையும் கண்டுக்க மாட்டறீங்க என சண்டை போட இப்படி அபாண்டமாக பேசாத என கோபி வாக்குவாதம் செய்கிறார். நீங்கள் முன்ன மாதிரி இல்ல என ராதிகா சொல்ல நீ மட்டும் என்ன அப்படியேவா இருக்க என கோபி பதில் கொடுக்க என்னை மாத்துனது நீதான் என ஒருவரை ஒருவர் மாற்றி குற்றம் சொல்லிக் கொள்கின்றனர்.

உங்க பொண்ணுக்காக என்னையும் மயூவையும் சீட் பண்ணிட்டு போனவர் தானே நீங்க என ராதிகா ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 19-05-23
jothika lakshu

Recent Posts

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

1 day ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

1 day ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

1 day ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

1 day ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

1 day ago

‘தமிழ் படம் 3’ குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த சிவா!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…

1 day ago