வருத்தத்தில் எழில். வர்ஷினி அப்பாவை சந்தித்த ஈஸ்வரி. ராமமூர்த்தி .. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி முக்கியமான விஷயம் சொல்லப் போவதாக எல்லோரையும் கூப்பிட்டு உட்கார வைக்க எழில் மட்டும் இல்லாமல் இருக்க ஈஸ்வரி ஜெனியை அனுப்பி எழிலை கூப்பிட சொல்கிறார்.

பிறகு எழிலும் கீழே வந்து விட அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்த பிறகு ராமமூர்த்தி எழிலுக்கு கல்யாணம் பண்ண முடிவு எடுத்து இருப்பதாக சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பாக்கியா இப்போ என்ன மாமா அவசரம் என கேட்க ஈஸ்வரி அவனுக்கு கல்யாண வயசு ஆகுது இல்ல என கூறுகிறார். மேலும் ஈஸ்வரி சீக்கிரம் அவனுக்கும் வர்ஷினிக்கும் கல்யாணம் என சொல்ல இன்னும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு எழிலிடம் சம்மதம் கேட்க அவரும் சம்மதம் என சொல்லி கண்ணீருடன் எழுந்து செல்கிறார்.

பாக்கியா எழிலை கையை பிடித்து நிறுத்த எழில் வெளியே சென்று விடுகிறார். பிறகு ராமமூர்த்தி எது பண்ணாலும் நல்லதுக்காக தான் இருக்கும், என் மேல நம்பிக்கை வை இத பத்தி எதுவும் பேசாத என சொல்ல பாக்கியம் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார். அடுத்து ஈஸ்வரி ராமமூர்த்தி செழியன் என மூவரும் வர்ஷினியின் அப்பாவை சென்று சந்திக்கின்றனர்.கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்ல அவர் பணத்துக்காக சம்மதம் சொல்லலையே என கேட்க ராமமூர்த்தி எங்களுக்கு பணம் தேவை இருக்கிறது உண்மைதான், எழில் வேறு ஒரு பெண்ணை விரும்புனததும் உண்மைதான் அது எந்த மாற்றமும் இல்லை. ஆனா அவன் என்னைக்கும் பையன், பேரன் என்ற கடமையிலிருந்து பின் வாங்கியது இல்லை அதே மாதிரி ஒரு புருஷன் ஆகவும் நல்லபடியா நடந்துக்குவான் என வாக்கு கொடுக்கிறார்.

இதனால் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் வைக்க பேசி முடிக்கின்றனர். இந்த பக்கம் கேள்வி அமிர்தாவை சந்திக்க வந்திருக்க அவரைப் பார்த்ததும் கண் கலங்கி அழ பாட்டி என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களா என கேட்க எழில் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் அசத்தும் லிஜோமோல் ஜோஸ்!

இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின்…

1 day ago

‘தலைவர் 173’ படத்தில் இணையும் பிரபல இயக்குநர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே…

1 day ago

அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை – கேள்விக்கு மீண்டும் விளக்கம் அளித்த நடிகர் பாலா

சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப்…

1 day ago

“விஜயை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தேன்…” – அர்ச்சனா கல்பாத்தி மனம் திறந்த பேட்டி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா…

1 day ago

“நூறு சாமி”-ல் கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார் விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் 'நூறு சாமி'. மாபெரும் வெற்றி பெற்ற…

2 days ago

NIZHAL OFFICIAL TRAILER

NIZHAL OFFICIAL TRAILER | TAMIL | JANANY KJ | VISHAKAN | ABUBAKKAR | AK KUMAR…

2 days ago