பொய் சொல்லி ஏமாற்றும் கோபி.. பாக்கியாவிற்காக ஈஸ்வரி எடுத்த முடிவு.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில், கோபி உடம்பு சரியில்லாத போல் நடிக்க பதறி போன பாக்கியா அவருக்கு பணிவிடை செய்கிறார். பிறகு அவர் பெட்ரூமுக்கு போன பிறகு ஹாயாக போனை நோண்டிக்கொண்டு இருக்க அப்போது பாக்கியா உள்ளே வருகிறார். சமைக்கிற இடத்தில வேலை இருக்கு நான் போகவா என கேட்க புருஷன் இங்க உடம்பு சரி இல்லாம படுத்துட்டு இருக்கேன் உனக்கு வேலை தான் முக்கியமா என்ன கேட்கிறார். இல்லங்க பெரிய கல்யாண ஆர்டர் என பாக்கியா சொல்ல கோபி போ போ என நக்கலாக பதில் கூறுகிறார். தொடர்ச்சியாக போன் மேல போன் அடித்துக்கொண்டே இருக்க பாக்கியா கீழே வந்தபோது ஈஸ்வரி நீ போ நான் பாத்துக்கறேன். பெரிய ஆர்டர் அது, செய்யாமல் விட்டால் பிரச்சனை வரும் என கூறி அனுப்பி வைத்தார்.

பிறகு பாக்கியா சமைக்கும் இடத்திற்கும் கிளம்பியதும் கோபிக்கு ராதிகாவிடம் இருந்து போன் வருகிறது. ராதிகாவிடம் கோபி உடம்பு சரி இல்லாமல் தனியாக படுத்து கொண்டிருப்பதாகக் கூறி புலம்புகிறார். சரி இருங்க நான் வீடியோ கால் வருகிறேன் என ராதிகா சொல்ல கோபி தலைமுடியை கலைத்து விட்டு நோயாளி போலவே பேசுகிறார். ரூம்லயும் யாரும் இல்ல, வீட்லயும் யாரும் இல்ல, நான் தனியா அனாதை மாதிரி இருக்கேன் என கூறுகிறார்.

அதன் பிறகு இங்கே எதுக்கு தனியா இருக்கீங்க இங்கு வந்து விட வேண்டியது தானே? நானே வந்து கூட்டிட்டு வரட்டுமா? எனக் கேட்க வேண்டாம் வேண்டாம் உனக்கு எதுக்கு சிரமம் நானே பொறுமையா வந்துவிடுகிறேன் என கூறுகிறார். சரியான ராதிகா போனை வைத்ததும் கோபி ஜாலியாக எழுந்து விசிலடித்துக் கொண்டே படிக்கட்டில் இறங்க இனியா மற்றும் ஜெனி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து திரும்பவும் நாடகத்தை தொடங்குகிறார்.

அதற்கு அடுத்ததாக இந்தப் பக்கம் ராதிகா கூப்பிட்டு கஷாயம் போட்டுக் கொடுத்து அவரை பார்த்துக் கொள்கிறார். அவரை ரெஸ்ட் எடுக்க சொல்ல கோபி படுத்து தூங்குவது போல நடிக்கிறார். அடிக்கடி ராதிகா உள்ளே வந்து ஜுரம் இருக்கா என செக் செய்து விட்டு செல்கிறார். பிறகு கோபியை எழுப்பி சாப்பிடுறீங்களா நேரமாயிடுச்சு என கேட்க இப்போது வேண்டாம் பசி இல்லை என சொல்கிறார் கோபி. அதன் பிறகு ராதிகா மற்றும் கோபி இருவருக்குமிடையே ரொமான்ஸ் நடக்கிறது.

இந்த பக்கம் பாக்கியா சமையல் செய்யும் இடத்திற்கு ஈஸ்வரியும் அவருடைய கணவரும் வருகை தருவதை பார்த்து பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி பாக்யாவுக்கு உதவி செய்கிறார். ‌

Baakiyalakshmi Serial Episode Update 18.03.22

‌

jothika lakshu

Recent Posts

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 hours ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 hours ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

4 hours ago

சிவகார்த்திகேயனின் 27-வது படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

4 hours ago

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

1 day ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

1 day ago