baakiyalakshmi serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி வீட்டில் இருக்க அப்போது வர்ஷினி வீட்டுக்கு வர அவரை உள்ளே அழைத்து உட்கார வைக்கிறார். வர்ஷினி பாட்டி இல்லையா என கேட்க அதற்குள் ஈஸ்வரி வெளியே வந்துவிட பிறகு ஜெனியிடம் செழியனை கூப்பிடு என சொல்கிறார்.
அடுத்து எல்லோரும் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி ஜெனியை மேலே அனுப்ப முயற்சி செய்ய பிறகு செழியனை வைத்து ஜெனியை மேலே போக சொல்ல ஜெனிக்கு சந்தேகம் வருகிறது.
அடுத்து வர்ஷினி எழிலை கல்யாணம் பண்ணிக்க ஒரு வழி இருக்கு என சொல்லி எழிலுக்கு தேவையான மொத்த பணத்தையும் அப்பாவ கொடுக்க சொல்றேன் அவர் என்னை கல்யாணம் பண்ணிக்குவாரா என கேட்கிறார். பணத்துக்காக தான் உன்ன அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று நினைக்கிறாயா என்ன ஈஸ்வரி கேட்க ஐயோ அப்படி இல்ல பார்ட்டி எனக்கு எப்படியாவது எழில கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வரணும் என சொல்ல செழியனும் இது நல்லா ஐடியா தான் என கூறுகிறான்.
அதன் பிறகு இரவு நேரம் ஆனது எழில் போனில் அமிர்தாவிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது அனைவரும் செழியன் அதை ஒட்டி கேட்கிறான். அடுத்ததாக அமிர்தாவை விட்டுடு, நீ நினைக்கிறது கண்டிப்பா நடக்காது வீட்டில் யாருக்கும் அமிர்தாவை பிடிக்கல என சொல்கிறான். ஆனா எழில் எனக்கு பிடிச்சிருக்கு என்னைக்கா இருந்தாலும் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்குவேன் என ஷாக் கொடுக்கிறான்.
அதன் பிறகு செழியன் நான் மட்டும் உன்னுடைய இடத்துல இருந்திருந்தால் வர்ஷினி கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பணத்தை வாங்கிட்டு வந்து வீட்டு பிரச்சனையை சால்வ் பண்ணி இருப்பேன் என சொல்ல பணத்தை வாங்கிட்டு வந்து இருப்பேன்னு சொல்லு ஆனா வீட்டு பிரச்சனையை தீர்த்து இருப்பேன் மட்டும் சொல்லாத அதனால் நம்ப மாட்டேன் என எழில் பதிலடி கொடுக்கிறார்.
மறுநாள் விடிந்தது செழியன் இந்த விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். நாம ஏன் இந்த வீட்டு பிரச்சனையை வைத்து எழிலுக்கும் வர்ஷினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது என சொல்கிறான். இந்த வாய்ப்பு விட்டா அவன் கண்டிப்பா அமிர்தாவை கல்யாணம் பண்ணிப்பான் என சொல்கிறான்.
மறுபக்கம் ராமமூர்த்தி ஒருவரை சந்தித்து வீடு 40 லட்சம் நிலம் ஏக்கருக்கு 10 லட்சம் என சொல்லி பிறகு 9 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கிறார். இந்த பக்கம் செழியனும் ஈஸ்வரியும் வர்ஷினியின் அப்பாவை சந்தித்து பேசுகின்றனர். ஈஸ்வரி எழில் கண்டிப்பா வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான் என வாக்கு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…