BaakiyaLakshmi Serial Episode Update 17-04-25
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை நித்திஷ் வீட்டிற்கு அழைத்து வந்த செழியனும் ஜெனியும் கிளம்பறேன் என்று சொல்ல அதுக்குள்ள எதுக்கு போகணும் கொஞ்ச நேரம் இருங்க அக்கா என்று சொல்லி அழுகிறார் எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல முதல்ல அப்படித்தான் இருக்கும் இனியா அப்புறம் பழகிடும் என்று சொல்லுகிறார் எனக்கு முதல்ல உங்க வீட்டுக்கு வரும்போது அப்படி தான் இருந்தது எங்க அம்மா அப்பாவை மிஸ் பண்ண ஆனா அதுக்கு அப்புறம் பழகிருச்சு நீ பயப்படாத உனக்கு எதனா ஒன்னுனா போன் பண்ண இல்லன்னா வீட்டுக்கு வா நாங்க உன்ன பாக்கணும்னு தோணுச்சுன்னா இங்க வருவோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.
மறுபக்கம் செல்வி ஆகாஷிடம் பேசி கோச்சிங் கிளாஸ் சேர்த்து விட அழைத்துச் செல்கிறார் ஆனால் ஆகாஷ் வேணாமா நான் வீட்டில் இருந்தே படிக்கிறேன் கோச்சிங் கிளாஸ் சேர்த்து விட உன்கிட்ட காசு இருக்கா என்று கேட்க இல்லதா இப்போ தங்கச்சிங்களோட நகையும் என்னோட நகையை வைத்து தான் பணம் ரெடி பண்ணி வச்சிருக்கேன் என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் வேணாம் வீட்ல படிச்சு பாஸ் பண்ணுவேன் என்று சொல்ல பழசை பேச வேண்டாம் என்று தான் நினைக்கிற ஆகாஷ் ஆனா பேசாம இருக்க முடியல நீ ஏனில ஏரி நட்சத்திரத்தை புடிக்கலான்னு ஆசைப்பட்ட ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சினையாச்சு இனிய பாப்பாக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு தூக்கி வளர்த்த பொண்ணு அவ கல்யாணத்துக்கு கூட என்னால போக முடியல அவ நல்லா இருக்கட்டும் நீ வந்து ஒரு வேலைக்காரனோட பையன்னு சொல்லி அசிங்கப்படுத்தினவங்க முன்னாடி கலெக்டரோட அம்மா என்று சொல்ல வைக்கணும் அதுதான் என்னோட ஆசை எனக்காக இதை மட்டும் செய் என்று சொல்லி அழைத்துச் செல்கிறார்.
இனியா நிதிஷ் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்க முதலில் எழில் போன் பண்ணி நலம் விசாரிக்கிறார் பிறகு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை சொல்லு சரின்னு சாப்பிடு நீ அப்புறம் பண்றேன்னு போனை வைத்து விடுகின்றனர். சந்திரிகா சமைக்க தெரியுமா இனியா என்று கேட்க பேசிக் தெரியும் புல்லா தெரியாது என்று சொல்ல உங்க அம்மா அவ்வளவு பெரிய ரெஸ்டாரன்ட் வச்சு மேனேஜ் பண்றாங்க இன்னைக்கு சமைக்க தெரியாதுன்னு சொல்றேன் என்று கேட்டேன் சுதாகர் இவ்வளவு வேலைக்காரங்க இருக்காங்க அப்படின்னு சமைக்கவா போற விடு என்று கேட்க சும்மாதாங்க கேட்டேன் என்று சொல்லுகிறார். உடனே செழியன் மற்றும் கோபி போன் பன்னி நலம் விசாரிக்க இனியா சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக சொல்ல சரி சாப்பிடுமா அப்புறம் பண்றோம் என சொல்லுகின்றனர். உடனே ஈஸ்வரி முழுசா ஒரு நாள் அவ்ளோ அதுக்குள்ள இத்தனை வாட்டி இனியாவுக்கு போன் பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க ஏதோ மிஸ் பண்ற மாதிரி இருக்குமா என்று சொன்னேன் உங்களை விட அவ கூட இருந்தது அதிகமா நான் தான் எனக்கு தான் அதிகமா கவலை இருக்காது போன் பண்ணிக்கிட்டு இருக்க முடியுமா பொண்ணா பொண்ணா எல்லாத்தையும் அனுபவிச்சு தான் ஆக வேண்டும் என்று சொல்லுகிறார். சுதாகர் உன் மேல எல்லாருக்கும் அவ்வளவு பாசம் மாமா என்று கேட்க ஆமாம் என்று இனியா சொல்ல நாளைக்கு தெரியும் உன் மேல இவ்ளோ பாசம் இருக்குன்னு என்று நினைக்கிறார்.
மறுநாள் காலையில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வர செல்வி வரலையா என்று கேட்கிறார் இன்னும் வரல என்று சொல்ல பார்ட்டி ஆர்டர் யார் எடுக்குறாங்க என்பதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் பிறகு உங்க சம்பந்தி ரெஸ்டாரன்ட் கேட்டாரே என்ன ஆச்சுக்கா என்று சொல்ல அதெல்லாம் அப்படி கொடுத்துற முடியும் நான் பேசுறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுதாகர் என்ட்ரி கொடுக்கிறார். அவர் நேராக உள்ளே சென்று உட்கார்ந்து ஒரு வாட்டர் மெலன் ஜூஸ் வித்தவுட் ஐஸ் போட்டோ எடுத்துட்டு வாங்க என்று சொல்லுகிறார் உடனே பாக்கியவை கூப்பிட்டு உட்கார வைத்து அவர் ஜூஸ் வந்தவுடன் குடித்துவிட்டு சக்கர போட்டு இருக்கீங்களா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகின்றனர் ஒருத்தர் ஜூஸ் சொல்லும் போது சக்கர போட்டா போடாம என கேட்க மாட்டீங்களா என்று ரூல்ஸ் போட பாக்யா அவரை போகச் சொல்லுகிறார். உடனே சுதாகரிடம் வித்தவுட் ஐஸ்ன்னு சொன்ன நீங்க சர்க்கரையும் போட வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம் என்று சொல்ல சரி நீங்க அப்படி வரிங்களா நம்ம நேரா விஷயத்துக்கு வருவோம் என்று சொல்லுகிறார்.
உடனே பத்திரத்தில் கையெழுத்து போட்ட விஷயத்தை சொல்ல,நான் சொன்ன விஷயத்தை என்னோட வக்கீல் எழுதி எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார் படிச்சு பாருங்க என்று சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார். அதில் ரெஸ்டாரன்ட் இனியாவிற்கு கிஃப்ட்டாக கொடுப்பதாக எழுதி இருப்பதை பார்த்து இது மாதிரி நம்ம பேசவே இல்லையே நீங்க சீட்டிங் பண்றீங்க என்று சொல்லுகிறார். பிறகு சுதாகர் என்ன சொல்லுகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…