கணவரின் உடல் நிலையை கண்டு வேதனைப்படும் ஈஸ்வரி.. தாத்தாவை வெளியே கூட்டிச்செல்ல பிளான் போட்ட எழில்.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. தன்னுடைய மாமியார் ஈஸ்வரியை கூட்டி வந்து உட்கார வைத்து சாப்பிடச் சொல்கிறார் பாக்கியா. பக்கத்தில் செல்வி நின்று கொண்டு சாப்பிட அவரை உட்கார்ந்து சாப்பிடுமாறு சொல்கிறார். பிறகு பாக்கியாவிடம் சாப்பிட்டியா இல்லையா என விசாரித்து அவரை உட்கார வைத்து அவர்கள் சாப்பாடு பரிமாறி சாப்பிட சொல்கிறார்.

மேலும் செல்வியிடம் பாக்கியா மட்டும் இல்லேன்னா நாங்க என்ன ஆக இருப்போம்னு தெரியாது. அவளுடைய இடத்துல வேற யாராச்சும் இருந்தா இப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க என சொல்ல பாக்கியா என்னத்த நீங்க அத பத்தி நான் எதுவும் கவலைப் படாம இருங்க என சொல்கிறார். பணம் பெற நிறைய செலவாகும் கோபி கொடுக்கிறானோ இல்லையா ஏதாவது தேவைன்னா என்கிட்ட கேளு என சொல்ல அதெல்லாம் பார்த்துக்கலாம் அத்தை மாமா சீக்கிரம் குணமாகிவிடும் என்று நீங்க மாமாவ மட்டும் நினைங்க, வேற எதை பத்தியும் யோசிக்காதீங்க என சொல்கிறார்.

பிறகு கோபியின் அப்பாவை ஹாலில் கூட்டி வந்து உட்கார வைத்து அவரை டிவி பார்க்க வைக்கின்றனர். ஜெனி எழில் மற்றும் இனியா ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க தாத்தாவுக்கு போரடிக்குது போல உள்ள கூட்டிட்டு போலாம் என சொல்கிறார் ஈஸ்வரி. பிறகு வெளியே போகலாம் என எனில் சொல்ல அதெல்லாம் தாத்தாவை கூட்டிட்டு எப்படி போறது வேண்டாம் என கூறுகிறார்.

அது எல்லாம் கூட்டிட்டு போகலாம் என எழில் சொல்ல பாக்கியா கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம் என்று சொல்லிவிட்டு ஆகியவை கூப்பிட்டு விஷயத்தை சொல்கிறார் ஈஸ்வரி. பிறகு எதிலும் பாக்கியாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி பீச்சுக்கு அழைத்துச் செல்கிறார்.

இந்த பக்கம் சமைக்கும் இடத்தில் தீயாக வேலை செய்துகொண்டிருக்கிறார் பாக்கியா. வீடு ஆபீஸ் எனது இரண்டு இடத்திலும் கடுமையாக உழைப்பதால் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்படுகிறது. இருப்பினும் அது எல்லாம் சமாளித்துக் கொண்டு எடுத்த ஆர்டரை செய்கிறார்.

பீச்சுக்கு போன இடத்தில் ஜெனி மற்றும் இனியா ஆகியோர் அலையில் கால் நனைத்து விளையாடுகின்றனர். பிறகு ஈஸ்வரியையும் அழைத்துச் சென்று விளையாடுகின்றனர். இதையெல்லாம் பார்க்க கோபி அப்பா கண் கலங்குகிறார். பார்த்து ரசித்து மகிழ்ச்சி அடைகிறார்.

பிறகு வீட்டில் பாக்கியா எல்லோருக்கும் சாப்பாடு பரிமாற அப்போது வந்த எழில் பாட்டி சாப்பிட்டாங்களா என கேட்க இன்னும் இல்லை என சொல்ல அவங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு கொடுக்க மாட்டாயா என கூறுகிறார். இல்ல அவங்க கொஞ்சம் நேரம் ஆகட்டும் என்று சொன்னாங்க என பாக்கியா சொல்ல இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 17.02.22
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago