ராமமூர்த்தி எடுத்த முடிவு. கோபத்தில் பேசிய கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் இனியா வெளியே வந்து வீட்டை பார்த்துக் கொண்டிருக்க அப்போது எழில் பால்கனியில் இருந்து பார்த்துவிட்டு கீழே வந்து இனியாவிடம் பேசுகிறார். இனியா டாடி இந்த வீட்டை வைக்கப் போறதா சொன்னது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என அழுகிறார்.

எழில் அதெல்லாம் ஒன்றும் இல்லை இந்த வீட்டை கண்டிப்பாக நாம் வாங்கத்தான் போறோம் எல்லாரும் ஒண்ணா இந்த வீட்ல இருக்கலாம் என சொல்லி சமாதானம் செய்ய தாத்தா இதை பார்த்து விடுகிறார்.

மறுநாள் காலையில் வீட்டுக்கு வரும் ராமமூர்த்தி முக்கிய முடிவெடுத்து இருப்பதாக சொல்ல ஈஸ்வரி என்னவென்று கேட்கிறார். ஊரில் இருக்கும் சொத்தை எல்லாம் விற்று இந்த வீட்டை வாங்கப் போவதாக சொல்ல ஈஸ்வரி உட்பட எல்லோரும் மறுப்பு தெரிவிக்க ராமமூர்த்தி உறுதியாக இருக்கிறார். பாக்கியா வேண்டாம் என சொல்லி கேட்காமல் பாக்கியவை அழைத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பி செல்கிறார்.

அடுத்து ஈஸ்வரி கோபியை வீட்டுக்கு வரவைத்து நீ செய்யறது எல்லாம் நல்லா இருக்கா என கேட்க கோபி நான் மனம் மாறி வாழ ஓகே சொன்னா போதும் பாக்கியா தான் என்ன கூட்டிட்டு போயிட்டு விவாகரத்து கொடுத்தா, பிளான் பண்ணி என்ன இது வீட்டை விட்டு வெளியே அனுப்புனா, அப்புறம் நான் என்ன பண்ண முடியும் எனக்கான வாழ்க்கையை நான் தேடிக்கிட்டேன், அப்பவும் என்னை நிம்மதியா இருக்க விடலாமா என்ன செய்வது எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு, உங்கள நான் கஷ்டப்பட விடமாட்டேன்.

எக்காரணம் கொண்டும் இந்த வீடு பாக்யா கைக்கு போக நான் அனுமதிக்கவே மாட்டேன், என சொல்லி கிளம்பி செல்கிறார். அடுத்து எழில் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக சந்தித்து கதையை விற்க முயற்சி செய்ய எல்லோரும் தட்டிக் கழிக்க என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். சதீஷ் வர்ஷினியோட அப்பா பெரிய ஆளு அவரை எதிர்த்து யாரும் கதையை வாங்க மாட்டாங்க என சொல்ல எழில் யோசிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago