பாக்கியாவை திட்டிய ராதிகா.. கோபியால் காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியாவிடம் போலீஸ் விசாரணை நடத்த நான் எந்த தப்பும் பண்ணல, இது எப்படி நடந்தது என எனக்கே குழப்பமாக இருக்கும், என்னை நம்புங்க என கூறுகிறார். ராதிகா சொல்லுங்க என சொல்ல பதில் சொல்லாமல் அவர் அமைதியாக இருக்க பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த எழிலிடம் பாக்கியா பயமா இருக்கு என்று சொல்லி கண் கலங்க எழில் நான் உன்னை எப்படியாச்சும் வெளியே கூட்டிட்டு போய் விடுவேன் என ஆறுதல் கூறுகிறார். ஈஸ்வரி, இனியா என இருவரும் மாறி மாறி கோபிக்கு போன் செய்ய அவர் போனை எடுக்காமல் இருக்க அதிர்ச்சி அடைகிறார்கள்.

அதன் பின்னர் வீட்டுக்கு வந்த எழில் நடந்தது என்ன என செல்வியிடம் விசாரிக்க அவர் நம்ம பக்கம் தப்பு நடக்க வாய்ப்பு இல்லை என கூறுகிறார். கூட வேலை செய்த இருவர் வந்து எங்கள் பெயரை சொல்ல வேண்டாம்னு சொல்லுங்க என கூற செல்வி அவர்களை திட்டி அனுப்பி வைத்து விடுகிறார்.

எழில் ஆசிரமத்தில் சென்று எங்கயோ தப்பு நடந்திருக்கு. அதை கண்டுபிடிக்க உதவி பண்ணுங்க என கேட்க அவர்கள் எழிலை திட்டி வெளியே அனுப்பி விடுகின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில் பாக்கியா மீண்டும் ராதிகாவிடம் பேசி வருத்தப்பட பேசாதீங்க. நான் என் வாழ்க்கையில் நிம்மதியை தேடி தான் இருக்கேன். உங்களால பண்ண முடியாதுனா முடியாதுனு சொல்லி இருக்கலாம். உங்களுக்கு நல்லது மட்டுமே நினைச்ச என்னை எங்க கொண்டு வந்து உட்கார வச்சுட்டீங்க பாருங்க, பேசாதீங்க நான் எதாவது சொல்லிட போறேன் என கூற பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

Baakiyalakshmi Serial Episode Update 16.04.22
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

1 day ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

1 day ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago