இனியா சொன்ன வார்த்தை, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகருக்கு இனியா வார்னிங் கொடுக்க, பாக்யா பிரச்சனையில் சிக்க இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் நித்திஷிடம் பேசிக் கொண்டிருக்க இனியா வருகிறார். சந்திரிகா வெத்தல பாக்கு வச்சு கூப்பிடலாம் வரல இப்ப மட்டும் எதுக்கு வந்திருக்க என்று கேட்க இந்த வீட்டு வாசப்படி மதிக்க கூடாதுன்னு தான் நினைச்சேன் ஆனா வர வச்சிட்டீங்க எங்க அண்ணனுக்கு மேல எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க என்று கேட்க அவன் நித்திஷ் எப்படி அடிச்சிருக்கானுங்கன்னு பாரு என்று சொல்லுகிறார் இவர் என்கிட்ட ரோட்ல தகராறு பண்ணல நான் அவங்க ஏன் அடிக்க போறாங்க என்று கேட்கிறார்.

அது மட்டும் இல்லாம வாய் கூசாம உங்க பையன பத்தி ஏற்கனவே உண்மைய சொல்லிட்டேன்னு பொய் சொல்லி இருக்கீங்க என்று கேட்க அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். உடனே சுதாகர் போலீஸ் ஸ்டேஷன்ல உங்க அண்ணங்க எப்படி எங்க விஷயத்துல தலையிட மாட்டேன்னு சொன்னாங்களோ அதே மாதிரி நித்திசம் தலையிட மாட்டான் என்று சொல்ல தலையிடக்கூடாது அப்படி ஏதாவது பண்ணா நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என்று சொல்ல சுதாகர் அதிர்ச்சி அடைகிறார்.

உடனே சந்திரிகா எங்களுக்கு போலீஸ்ல நிறைய பேர் தெரிஞ்சவங்க இருக்காங்க நீ என்ன வேணா பண்ணிக்கோ போ போ என்று சொல்ல ஓ அப்படியா நான் மீடியால உங்க குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடுவேன் என சொல்ல சுதாகர் சந்திரிகாவை அமைதியாக இருக்க சொல்லுகிறார் உடனே சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். சந்திரிகா சுதாகரிடம் இந்த திமிரு புடிச்ச குடும்பத்துல பொண்ணு எடுத்து அதுல வந்து பிரச்சனையாக இருக்கு நீங்க ஏதாவது பண்றதெல்லாம் பண்ணுங்க இல்லனா நானே ஏதாவது பாத்துக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க சுதாகர் ஏற்பாடு செய்த ஒரு ஆள் வருகிறார்

அவரிடம் பாக்யா ஹோட்டல் பத்தியும் அவங்க முன்னாடி செஞ்சுட்டு இருந்த வேலையை பற்றியும் விசாரிச்சியா என்று கேட்க அவங்க மசாலா கம்பெனிகளில் இருந்து ஆரம்பிச்சு இருக்காங்க எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன் என்று சொல்லுகிறார் சரி நீ அவங்ககிட்ட போய் ஒரு பங்க்ஷன்க்கு ஆயிரம் பேருக்கு சமைக்கணும் என்று சொல்லிட்டு ஒரு சின்ன அட்வான்ஸ் கொடு அவர்கள் இடத்திலேயே சமைத்து எடுத்துட்டு வரணும்னு சொல்லு கடைசி நேரத்துல வேற ஏதாவது ஒரு பொய்யான அட்ரஸ் கொடுத்துடு அவங்களுக்கு அட்வான்ஸ் தவிர சமைச்சது எல்லாமே நஷ்டம் ஆகணும் என்று சொல்ல அவரும் சரி என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். எதுக்கு இது மாதிரி பண்ணனும் என்று சந்திரிகா கேட்க இப்போ இனியாவோட குடும்பத்துல இருக்குறவங்க எல்லாருக்கும் நம்ம மேல ஒரு கண்ணு இருக்கு இந்த பிரச்சனை வந்தா அவங்க கொஞ்சம் திசை திருப்ப முடியும் நம்ம அதுக்குள்ள என்ன பண்றதுன்னு யோசிக்கலாம் என்று சொல்லுகிறார்

மறுபக்கம் இனியா வீட்டுக்கு வர தலை வலிக்குது என்று சொன்னவுடன் கோபி நான் காபி போட்டு தருகிறேன் என்று சொல்லி கொடுக்க என்ன இனியா டல்லா இருக்க என்று கேட்க சுதாகர் வீட்டுக்கு சென்று மிரட்டி விஷயத்தை கோபியிடம் சொல்லுகிறார். நீ அத பத்தி எந்த விஷயத்தையும் பேசிக்காதமா எதுவா இருந்தாலும் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் பாக்கியா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கவுன்சிலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். சுதாகர் ரெடி பண்ண ஆள் வந்து பாக்யாவிடம் சமையல் ஆர்டரை கொடுக்க பாக்யா என்ன சொல்லுகிறார்? அட்வான்ஸ் வாங்கினாரா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 15-07-25
jothika lakshu

Recent Posts

மாப்ள சம்பா அரிசியில் கிடைக்கும் நன்மைகள்..!

மாப்ள சம்பா அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

4 hours ago

ரவி மோகன் வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி…

7 hours ago

சர்க்கார் 2 படம் குறித்து வெளியான செம அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்…

9 hours ago

ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த உதவி,குவியும் பாராட்டு..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத்…

9 hours ago

விஜயா சொன்ன வார்த்தை, அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய…

12 hours ago

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினியின் கேள்விக்கு விஜியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு…

12 hours ago