கோபிக்கு ஷாக் கொடுத்த பாக்கியா.. கோபியை கிண்டல் அடித்த செழியன். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பழனிச்சாமி கோபியை மடக்கி பிடித்து ஆங்கிலத்தில் பேசிய நிலையில் வீட்டுக்குள் வர அப்போது பழனிச்சாமியின் அம்மாவிடம் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் எங்க வீட்ல பொண்ணு எடுக்க போறீங்க சம்மந்தியாக போறோம் என பேசிக்கொண்டு இருக்க இதைக் கேட்ட கோபி இன்னும் அதிர்ச்சி அடைந்து வாயில் அடித்துக் கொள்கிறார்.

இந்த வீட்ல எல்லாருக்கும் பைத்தியம் பிடிச்சு போச்சா என குழம்பி தவிக்கிறார். அதன் பிறகு ற பால்கனிக்கு சென்று பார்க்க பழனிச்சாமியின் அம்மா பழனிச்சாமி மற்றும் பாக்யாவின் கையை பிடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்க இதை பார்த்து கோபி இதெல்லாம் ரொம்ப அவசியம் என புலம்புகிறார்.

அப்போது அங்கு செழியன் வர அவனிடம் அந்த பழனிச்சாமியை பார்த்தாலே எனக்கு பிடிக்கல என பேச எங்களுக்கு பிடிச்சிருக்கு அவர் ரொம்ப நல்ல இன்ஸ்பிரேஷன், நிறைய பிசினஸ் பண்றாரு.. உங்கள மாதிரி ஒரு பிசினஸ் பண்ணிக்கிட்டு எப்ப பார்த்தாலும் நஷ்டம் நஷ்டம்னு சொல்லிக்கிட்டு இருக்கல என்று நக்கல் அடித்து விட்டு செல்ல கோபி அம்மாவுக்கு கல்யாணம் எப்படி பேசறான் பாரு என புலம்புகிறார்.

அதன் பிறகு கீழே வந்து இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்லை என சொல்ல செல்வி ஸ்வீட் நல்லா இருக்கு சார், சாப்பிடுறீங்களா என கொடுக்க கோபி அதை தட்டி விட செல்வி இப்போ எறும்பு வரும், நான் தான் பெருக்க வேண்டும் என சொல்ல கோபி நானே பெருக்கி விடுறேன், நீ கொஞ்சம் அமைதியா இரு என சொல்கிறார்.

பிறகு இந்த வயசுல பழனிசாமிக்கு கல்யாணம் தேவையா என சொல்ல நீங்களே இந்த வயசுல ரெண்டு கல்யாணம் பண்ணிட்டீங்க அவர் உங்களை விட மூணு வயசு கம்மிதான் அப்படி இருக்கும்போது ஒரு கல்யாணம் பண்ண கூடாதா என செல்வி கவுண்ட்டர் கொடுக்க கோபி காண்டாகி திட்டுகிறார்.

இப்ப உங்களுக்கு என்ன வேணும் இங்க இருந்து கிளம்புங்க எனக்கு நிறைய வேலை இருக்கு என பாக்கியா சத்தம் போட அந்த பழனிச்சாமி கிட்ட போய் பேசணுமா என கோபி கேட்க ஆமா அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என பாக்கியா அதிர்ச்சி கொடுக்கிறார். உங்க வேலைய பாருங்க சும்மா குட்டி போட்ட பூனை மாதிரி நான் என்ன பண்றேன்னு என்னையே சுத்தி சுத்தி வராதீங்க என திட்டி வெளியே அனுப்ப கோபி படிக்கட்டின் அருகே நின்று புலம்புகிறார்.

பிறகு இனியா உக்காந்து இருக்க இனியாவிடம் சென்று புலம்ப அவளை பழனிச்சாமி பற்றி பேசி கோபியை வெறுப்பேற்றி பிறகு பழனிச்சாமி மெசேஜ் செய்வதாக சொல்லி உள்ளே எழுந்து சென்று விடுகிறார். அதன் பிறகு ராமமூர்த்தி வர அவரிடம் சொல்லி கோபி என்ன வந்து குடும்பத்தோட கல்யாணம் பேசிட்டு இருக்கீங்க, உங்க எல்லாருக்கும் பைத்தியம் பிடிச்சிருச்சா என கேட்க எங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்வோம் என கோபியை திட்டிவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.

பிறகு ராதிகா வீட்ல என்ன விசேஷமா என்று கேட்க கோபி அந்த விஷயம் தெரிந்தால் நீ ஷாக் ஆயிடுவ, பாக்கியாவுக்கு கல்யாணம் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 15-06-23
jothika lakshu

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

40 minutes ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

44 minutes ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

8 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

8 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

8 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

9 hours ago