நடுத்தெருவில் நின்ற கோபி ராதிகா. ஈஸ்வரி சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி பணத்தையும் வாங்கி கொண்டு இங்கேயே தாரா போடலாமென்று நினைக்கிறாயா உனக்கு வெக்கமா இல்லையா என்று அவமானப்படுத்த கோபி நீங்க எப்பவும் உங்க மருமக பாக்யாவுக்கு தான் சப்போர்ட் பண்ணி பேசுங்க எனக்காக பேச எங்க அம்மா இருக்காங்க என்று சொல்லி ஈஸ்வரியிடம் சென்று பேசுகிறார்.

ஆனால் ஈஸ்வரி உன் பொண்டாட்டி என்ன வீட்டை விட்டு வெளியே போனு சொல்லும்போது நீ அமைதியா தானே இருந்த? அவங்க அம்மா போலீச கூட்டிட்டு வந்து என்னை ஜெயில்ல போடுங்கன்னு சொல்லும்போது அமைதியா தானே நின்னுகிட்டு இருந்த அப்போ என் கூட நின்னுது என் மருமக பாக்கியா மட்டும் தான், நான் எதுக்கு உனக்காக கவலைப்படணும் என சொல்லி அதிர்ச்சி கொடுக்க நீங்க ஏதோ கோபத்துல பேசுறீங்க என்று சொல்லி எனக்கு என் பிள்ளைங்க ஆதரவா இருப்பாங்க என்று சொல்கிறார்.

உடனே எழில் என்னையும் சேர்த்து சொல்லாதீங்க என்னைக்கு நீங்க பண்ற தப்பு எனக்கு தெரிய வந்ததோ அன்னைக்கே உங்க முகத்தில் முழிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் என்று சொல்ல நீ என்னைக்கும் உங்க அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ, எனக்கு என் பையன் செழியன் இருக்கான் என்று சொல்ல நான் பண்ண பெரிய தப்பு அன்னைக்கு நீங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கும் போது உங்களை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுதான் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

நீயும் எனக்கு சப்போர்ட் பண்ணலையா என் பொண்ணு என் உயிர் இனியா இருக்கா என்று சொல்லி இனியாவிடம் போக அவர் பாக்கியா பின்னாடி நின்னுகிட்டு உங்களால நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன் பிறகு பாக்யா எப்பவும் சுயமரியாதை ரொம்ப முக்கியம் என்று பேச கோபி நீ என்னதான் சொன்னாலும் என பேச வர ராதிகா அவரை தடுத்து நிறுத்தி இனியும் இங்கே இருக்கிறது சரி இருக்காது என்று சொல்லி மேலே கூட்டிச் செல்ல பாக்யா நீங்க போக வேண்டியது மேலே இல்ல வெளியே என்று சொல்கிறார்.

பிறகு மேலே சென்ற கோபி ராதிகாவிடம் அப்பா அம்மா கிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டுரை என சொல்ல நீங்க கேட்ட மாதிரி அவங்க 18 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துட்டாங்க இதுக்கு மேலயும் இங்க இருந்தா எனக்கு மரியாதை இருக்காது என்னால இங்க இருக்க முடியாது நாம போயிடலாம் என்று சொல்கிறார்.

இருவரும் பேக்குடன் கீழே இறங்கி வர பாக்கியா ஒரு நிமிஷம் நீங்க கேட்ட பணத்தை கொடுத்தாச்சு வீடு இன்னும் உங்க பேர்ல தான் இருக்கு அதை எங்க பேருக்கு மாத்தி கொடுக்கணும் எப்ப மாத்தி தரீங்க என்று கேட்க கோபி அதெல்லாம் மாற்றி தர முடியாது என்று சொல்கிறார். எல்லோருடைய உழைப்பையும் உங்ககிட்ட தூக்கி கொடுத்துட்டு ஏமாற நாங்க யாரும் தயாரா இல்லை என பாக்கியா சொல்கிறார்.

பிறகு ராமமூர்த்தி நாளைக்கு நான் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல எல்லா வேலையும் செஞ்சு வச்சுட்டு சொல்றேன், வந்து கையெழுத்து போட்டுட்டு போ என்று சொல்ல, சொல்லிட்டாரு இல்ல வந்து கையெழுத்து போடுங்க என்று பாக்கியா ஆர்டர் போட்டு ஆங்கிலத்தில் இப்போ வீட்டை விட்டு வெளியே போங்க என பேசி மாஸ் காட்டுகிறார்.

கோபியின் ராதிகாவும் வெளியே போக கதவை இழுத்து மூடுடா என சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். அதன் பிறகு ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கண் கலங்கி பாக்யாவுக்கு நன்றி சொல்ல பாக்கியா அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். எல்லோரும் பாக்யாவை பாராட்டுகின்றனர்.

பிறகு அவர் ரெஜிஸ்ட்ரேஷன் வேலையெல்லாம் நீங்க பார்த்துக்கோங்க மாமா, வீட்ட உங்க பேர்ல எழுதிக்கங்க என்று சொல்ல என் பேர்ல எழுதுனா அப்பன் சொத்துல பங்கு இருக்குன்னு வந்து நிற்பான் என்று சொல்ல அப்போ அத்தை பேர்ல எழுதுங்க என்று சொல்கிறார். அப்பவும் பங்குக்கு வந்து நிற்பான் என்று ஈஸ்வரி சொல்ல அப்போ யார் பெயரில் தான் இந்த வீட்டை மாற்றுவது என்று கேட்கிறார். உன் பேர்ல எழுதிக்க என்று சொல்ல என் பேர்லையா என பாக்யா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 12-07-23
jothika lakshu

Recent Posts

Muthumani Music Video

Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj

10 hours ago

Kalaivaniye Lyrical Video

Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan

10 hours ago

Jio Jiyale Lyrical Video

Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…

11 hours ago

En Samy Vettaiyadum Lyric Video

En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…

11 hours ago

ஹாய் திரைவிமர்சனம்

பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…

1 day ago

Loser Song Lyric Video

Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…

2 days ago