baakiyalakshmi serial episode update 11-03-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோடில் கடைசி நேரத்தில் அமைச்சர் வந்துவிட கோபி உச்சகட்ட அதிர்ச்சியாகி கடுப்பாகி அங்கிருந்து வெளியே வருகிறார்.
இதைத்தொடர்ந்து எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது செழியன் திரும்பத் திரும்ப ஜெனியின் முகத்தை பார்த்தவாறு இருக்க இனியா இதோடு 72 முறை ஆச்சு என செழியனை கலாய்க்கிறார். பிறகு ஜெனி அக்கா அண்ணா அத்தனை முறை பார்க்கிறார்ல ஒரு முறையாச்சு நீங்க திரும்பி பாருங்க என்று சொல்ல அமிர்தா அமைதியா சாப்பிடு என சொல்கிறார்.
பிறகு வந்தவர்கள் எல்லோரும் சாப்பாடு சூப்பர் என சொல்லி ஒவ்வொருத்தராக கிளம்ப இனியா அமைச்சர் நம்ப ரெஸ்டாரன்ட் பற்றி சோசியல் மீடியால போஸ்ட் போட்டு இருக்காங்க என்று எல்லோரிடமும் காட்ட அதைப் பார்க்க வரும்போது ஜெனி மற்றும் செழியன் மோதிக் கொள்கின்றனர். இருந்தாலும் இருவரும் பேசாமல் அமைதியாக இருக்க செழியின் குழந்தையின் முகத்தை பார்க்க ஏங்கித் தவிக்கிறார்.
அடுத்து ஜெனி வீட்டுக்கு கிளம்புவதாக சொல்ல எல்லோரோட முகமும் மாற ஈஸ்வரி என் பேத்தியை என்னால ஆசை தீர கொஞ்சக் கூட முடியல என வருத்தப்படுகிறார். அதைத்தொடர்ந்து வீட்டுக்கு கிளம்புவதாக சொல்ல எழில் கேப் புக் பண்ண முயற்சி செய்ய கேப் கிடைக்காததால் தாத்தா செழியனை கூட்டி சென்று விட்டு வர சொல்ல ஜெனி வேண்டாம் என சொல்கிறார்.
சண்டை எல்லாம் அப்புறம் இருக்கட்டும் நீ நம்ம வீட்டு பொண்ணு எப்படியோ போகட்டும்னு விட முடியாது என செழியனை அனுப்பி வைக்கிறார். ஜெனி எல்லோரிடமிருந்து பிரியாவிடை பெற்று வீட்டிற்கு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…