கோபி பாக்கியாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை.. கோபிக்கு உதவி செய்த ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. செழியன் சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த கோபி பேப்பரை வைத்து விட்டு விட்டு வருகிறேன். இதையெல்லாம் கிச்சனில் நின்றுகொண்டு பார்த்த ஜெனி நல்லா நடிக்கிறான் என செழியனை திட்டுகிறார். இதைக் கேட்ட பாக்கியா யாரை திட்டுற என கேட்க எல்லாம் உங்க பையனா தான் ஆன்ட்டி என சொல்கிறார். பிறகு செழியன் பிரேக் ஃபாஸ்ட் குறித்து பாக்கியாவிடம் சொல்லி விட்டு மேலே செல்கிறார். ‌

பிறகு ஜெனி அவனுக்கு எதுவுமே செய்து கொடுக்காதீங்க ஆன்ட்டி என கூறுகிறார். என்ன உனக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை என பாக்கியா கேட்கிறார். அப்போது ஜெனி நேற்று அங்கிள் செழியனிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டார். ஆனால் செழியன் கையில் பணத்தை வைத்துக்கொண்டு இல்லை என சொல்லி விட்டான். அங்கிள் முகமே மாறிடுச்சு. செழியன் பணம் கொடுத்து இருக்கலாம் என ஜெனி கூறுகிறார். பாக்கியாவும் அங்கிளுக்கு பணப்பிரச்சனை ஏதோ இருக்கு, அவர் அவருடைய பிரண்டுடன் பேசுவதை நானும் கேட்டேன் என சொல்கிறார். என்கிட்ட பணம் இருந்திருந்தால் நானே கொடுத்து இருப்பேன். அவர் யார் கிட்டயும் பணம் கேட்கிறார் ஆள் கிடையாது எல்லோருக்கும் கொடுக்கிற மனுஷன். நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத மா என பாக்கியா சொல்ல ஆண்ட்டி நான் எதுவும் தப்பா நினைக்கல செழியன் பணம் கொடுத்து இருக்கலாம் என்றுதான் சொல்கிறேன்.

பிறகு கோபி வாக்கிங் சென்றுவிட்டு உள்ளே வர அப்போது அவரிடம் சென்ற பாக்கியா நீங்க எதுக்கு செழியனிடம் பணம் கேட்டீங்க? அவனை பத்தி தான் உங்களுக்கு தெரியாதா? மாமாவுக்கு செலவு பண்ண பணத்தை திருப்பி கேட்டான் ஜெனி எல்லா விஷயத்தையும் சொன்னார் என பாக்கியா சொல்கிறார். என்ன வேற என்ன பண்ண சொல்ற அப்பாவோடு ஹாஸ்பிடலுக்கு செலவுக்காக கையில் பணம் இல்லாமல் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்க முடியல. நாளைக்கு பணம் வேணும்னு அவன் கேட்கிறான் வேறுவழியில்லாமல் தான் செழியனிடம் கேட்டேன். அவன் இப்படி சொல்லுவானு நான் எதிர்பார்க்கல. அவன்கிட்ட கேட்டதும் கௌரவ குறைச்சல் ஆயிருந்தா உன் கிட்ட பணம் இருந்தா நீ கொடு வாங்கிக்கிறேன் என கோபி சத்தம் போடுகிறார்.

தினமும் சமைக்கப் போறேன் சமைக்க போறேன்னு பேக்க மாட்டிகிட்டு போறல பணம் இருந்தா கொடு என சத்தம் போடுகிறார். பிறகு கோபி மேலே எழுந்து சென்று விடுகிறார். அது பின்னர் கோபி ராதிகா வீட்டிற்கு செல்ல ராதிகாவின் அம்மா ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார். ரெண்டு பேரையும் நல்லபடியா பாத்துக்கங்க என சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பி விடுகிறார்.

அதன்பிறகு கோபி சோகத்தோடு இருப்பதை பார்த்த ராதிகா என்ன ஏது என கேட்க பணப் பிரச்சினை குறித்து சொல்கிறார் கோபி. உடனே ராதிகா பேசிக் கொண்டே தன்னுடைய அக்கவுண்டில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கோபிக்கு அனுப்பி வைக்கிறார். போனை எடுத்துப் பார்த்து கோபி நீ எதுக்கு பணம் போட்ட நான் பணத்துக்காக உன்கிட்ட இத சொல்லல என கூறுகிறார். பரவால்ல இது ஒரு லட்சத்துக்கு இப்படி உடைஞ்சு போய் உட்காராதீங்க முதல்ல உங்க பிரண்டு கிட்ட கொடுத்து அந்த பிரச்சினையை முடிங்க என கூறுகிறார்.

அடுத்ததாக கோபி எங்க வீட்டுல இதைப்பத்தி யாரும் கேட்கலை என் தலையில இன்னும் செலவை ஏற்ற தான் பார்க்கிறாங்க என கண்கலங்க எல்லாத்துக்கும் அழ வேண்டியது என கண்ணை துடைத்து விடுகிறார் ராதிகா.

இந்தப் பக்கம் செழியன் ஜெனியின் அப்பாவை பார்க்க ரெஸ்டாரண்ட் இன்றைக்கு செல்கிறார். அப்போது அவர் ஜெனி கேட்டதாக கோர ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொடுக்க எதுக்கு பணம் கேட்டார் இந்த விஷயம் எனக்கு தெரியவே தெரியாது. என்ன விஷயமாக இருந்தாலும் பரவாயில்லை இந்த பணம் மட்டும் வேண்டாம் என செழியன் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் செழியன் பாக்கியம் இடம் உன்னாலதான் பிரச்சனை என சண்டை போட எழில் அவரை அடிக்க பாய்கிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. ‌‌

Baakiyalakshmi Serial Episode Update 09.03.22
jothika lakshu

Recent Posts

DC Official Trailer

DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…

10 hours ago

Vadhandhi Season 2 Official Trailer

Vadhandhi Season 2 Official Trailer | M. Sasikumar, Anagha Maruthora, Yashwanth, Aparna Das, Revathy.S, Vivek…

10 hours ago

Pachapulla Video Song

Pachapulla Video Song | Hi | Nayanthara, Kavin | Sathya Narayanan | Jen Martin |…

10 hours ago

I’M GAME Official Trailer

I'M GAME Official Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films

10 hours ago

Wedding Bells Video Song

Wedding Bells Video Song | Anbe Diana | Pari Elavazhagan | Ramya Ranganathan | Bharath…

10 hours ago

Daiva Coatingu Video Song

Daiva Coatingu Video Song | Vadhandhi Season 2 | Sasikumar | Simon K.King | Yashwanth…

10 hours ago