ராதிகாவிடம் மாப்பிள்ளை போட்டோ கேட்ட செல்வி.. அதிர்ச்சியில் கோபி.. இன்றைய பாக்கியலஷ்மி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் தமிழ் படம் பார்க்க வராதீங்க என்று சொன்னதை நினைத்து பாக்கியாவிடம் வருத்தப்பட்டு கண்கலங்கி பேசுகிறார் கோபி. இதனால் பாக்கியம் பண்ணது பெரிய தப்பு தான் அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் மன்னிச்சிடுங்க என கண் கலங்குகிறார்.

பிறகு எல்லோரும் கிச்சனில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது எழில் வந்து பாக்கியாவிடம் பேசுகிறார். ஆனால் பாக்கியா எழிலிடம் பேச மறுக்கிறார். அவரிடம் பேசாமல் சென்று விடுகிறார். ஜெனி இனியா செல்வி என எல்லோர் சொல்லியும் பாக்கியா எழிலிடம் பேச மறுக்கிறார்.

அதன்பிறகு பாக்கியா சமைக்கும் இடத்திற்கு ராதிகா வருகை தருகிறார். அவரை வரவேற்று உட்கார வைக்கிறார் பாக்கியா. மயூரா பிறந்தநாளுக்கு அம்மா கொஞ்சம் பேருக்கு சாப்பாடு வாங்கி தரச் சொன்னாங்க, அவளோட பிறந்தநாள் முடிஞ்சு போச்சு. சரி இப்பயாச்சும் அதை பண்ணலாம்னு வந்திருக்கேன். பக்கத்துல ஒரு ஆதரவற்றோர் இல்லம் இருக்கு அங்க இருக்கிற 100 பசங்களுக்கு மதிய சாப்பாடு ரெடி பண்ணி தரணும். வியாழக்கிழமை எனும் முடியுமா எனக் கேட்க பாக்கியா பண்ணி கொடுக்கிறேன் என சொல்கிறார். பிறகு செல்வி எப்போ உங்களுக்கு கல்யாணம்? இங்கே கண்டதே காட்ட மாட்டீங்களா என கேள்வி கேட்கிறேன் நீங்கள் வந்தபோது அவர் இங்க தான் இருந்தார் ஆனால் போன்ல பேசிட்டு இருந்ததால் உங்களை பார்க்க முடியல என சொல்ல போட்டோ காட்டலாம்ல என செல்வி கேட்கிறார். இருங்க இருக்கானு பார்க்கிறேன் என ராதிகா போனில் தேட போட்டோ எதுவும் இல்லை என கூறுகிறார். போட்டோ எதுக்கு உங்களுக்கு நேர்லயே காட்டுவேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன்பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து கொண்டிருக்கும் போது எழில் வந்து இனியா ஜெனி இருவருக்கும் ஸ்வீட் கொடுத்து விட்டு பாக்கியாவிடம் பேச அவர் பேச மறுக்கிறார். யாருமே இல்லாம நீ பெரிய ஆள் ஆகிட்டியா?? அப்பா வேணாமா உனக்கு? அவர் கிட்ட மன்னிப்பு கேட்டால்தான் நான் பேசுவேன் என சொல்ல முடியாது என கூறி விடுகிறார்.

அதன்பிறகு தாத்தாவை வாக்கிங் கூட்டிச் சென்று அவரிடம் வருத்தப்பட்டு பேசுகிறார் எழில். வீட்டிற்கு அவரை கூட்டி வந்ததும் பாக்கியா கோபியிடம் மன்னிப்பு கேட்குமாறு சைகையில் கூறுகிறார். அதன்பிறகு கோபியிடம் உங்களை ஷோவுக்கு கூப்பிடாதது என்னுடைய தப்புதான். நான் எதும் கோபத்துல அப்படி பண்ணிட்டேன் தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்க என கையெடுத்து மன்னிப்பு கேட்கிறார். எதுக்கு கூப்பிடாம விடனும் எதுக்கு மன்னிப்பு கேட்கனும் என செழியன் கேட்கிறார். எல்லாம் என்னுடைய தப்புதான் என மீண்டும் எழில் மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Baakiyalakshmi Serial Episode Update 07.04.22
jothika lakshu

Recent Posts

Vishwanath and Sons Trailer

Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…

2 hours ago

The Paradise Tamil Teaser

The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander

7 hours ago

ஜி.டி.என் திரை விமர்சனம்

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…

7 hours ago

‘நடிகர் சங்க கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்’ – விஷால் அறிவிப்பு

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…

7 hours ago

‘அதிகார ஆசை இல்லை… அரசியலுக்கு வர விருப்பமில்லை!’ – விஜய் குறித்து மனம் திறந்த மாதவன்

தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…

8 hours ago

தமிழ் தெரியாதது பெருமை இல்லை… அது அவமானம்! – பள்ளி விழாவில் மாணவர்களுக்கு தனுஷ் உருக்கமான அறிவுரை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…

8 hours ago