baakiyalakshmi serial episode update 06-11-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு மாலினி வந்த நிலையை பாக்யா இங்கே எதுக்கு வந்த ஆபீஸ் வேலை எதுவாக இருந்தாலும் ஆபீஸ்ல பார்த்துக்க சொன்னல என்று சத்தம் போட மாலினி நான் ஆபீஸ் விஷயமா வரல பர்சனல் விஷயமா வந்து இருக்கேன் நான் செழியன் என்கிட்ட பேசணும் என சொல்லி எல்லாரையும் வெளியே வர வைக்க மொத்த குடும்பமும் ஒன்று சேர்கிறது.
பிறகு செழியன் எனக்கும் தொடர்பு இருந்தது என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதே சமயம் செழியன் அப்படி எல்லாம் தப்பு பண்ற ஆளு கிடையாது என ஈஸ்வரி தாத்தா ராமமூர்த்தி என எல்லோரும் பேச மாலினி செழியன் என்ன நம்ப வச்சு ஏமாத்திட்டான் எனக்கு கல்யாணமே ஆகல என்று சொல்லி என்கிட்ட பழகினான் என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்.
எனக்கு ஜெனியை பிடிக்கவே பிடிக்காது. அவ கூட வாழவே பிடிக்கல டிவைஸ் பண்ண போறேன் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றெல்லாம் சொன்னான் என ஷாக் கொடுக்கிறார். என்ன மாலினி கட்டுக் கதைகளை அடுக்கிக் கொண்டே போக செழியன் நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்ல இவ பொய் சொல்றா என்று சொல்கிறார்.
ஈஸ்வரி ராமமூர்த்தி அதெல்லாம் இதெல்லாம் பொய் எங்க செழியனை பத்தி எங்களுக்கு தெரியும் என்று சொல்ல ஆதாரத்தை பாத்தா நம்புவீங்களா என போட்டோ வீடியோ என அனைத்தையும் காட்ட மொத்த பேரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.
எனக்கு ஒரு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் இங்க இருந்து போக மாட்டேன் இந்த வீட்லதான் இருப்பேன் என மாலினி ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…