கோபி விஷயத்தில் பாக்கியா எடுத்த முடிவு, கோபத்தில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் எழில் அமர்தாவிடம் நான் இன்னும் செட்டிலாகவே இல்லை குழந்தை பெத்துக்கிட்டா நிறைய பிரச்சனை இருக்கு என்று எடுத்து சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து கோபி வீட்டுக்கு வர ராதிகாவிடம் சாப்டியா என்று கேட்க இன்னும் இல்ல இன்று சொல்ல ராதிகா நீங்க சாப்டீங்களா என்று திருப்பி கேட்க நான் நல்லா சாப்பிட்டேன் என்று சொன்னதும் ராதிகா அதானே உங்களுக்கு உங்களை பத்தி மட்டும் தான் கவலை என்று கோபப்படுகிறார். சரி நான் சாப்பாடு கொண்டு வரவா என்று கேட்க ராதிகா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்கிறார். குழந்தைக்கு கிப்ட் வாங்கிட்டீங்களா என்று கேட்க நீ சொன்னா மாதிரியே செயிணும் வளையலும் வாங்கிட்டேன் என்று சொல்கிறார்.

அடுத்து கோபி நாளைக்கு மட்டும் ஃபங்ஷன்ல நீ வாந்தி எடுக்காம இருக்கணும் என்று சொல்ல நான் என்ன வேணும் நான் எடுக்கிறேன் நான் வேணும்னா என் அம்மா வீட்டுக்கு போயிட்டு வா என்று கேட்க கோபி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறார். நாளைக்கு ஃபங்ஷன் முடிந்ததும் நம்ம விஷயத்தைப் பற்றி பேசுறீங்க என்று ஆர்டர் போடுகிறார்.

மறுபக்கம் எல்லோரையும் தூங்க அனுப்பி வைத்துவிட்டு பாக்கியா மறுநாள் சமையலுக்கு தேவையான காய்கறிகளை கட் பண்ணிக் கொண்டிருக்க எழிலும் அமிர்தாவும் இங்கு வந்து பாக்யாவுக்கு உதவி செய்ய பாக்கியா உங்க அப்பா எதுக்கு இன்னும் இந்த வீட்ல இருக்காரு என்று கேள்வி கேட்கிறார். எழில் வீட்டை வித்த பிறகும் ஹவுஸ் ஓனர் அதே வீட்ல இருக்கிறது இந்த வீட்டில் மட்டும் தான் பார்க்கிறேன் என்று சொல்கிறார். நாளைக்கு பங்க்ஷன் முடிந்ததும் இதை பத்தி பேசி அவரை அனுப்பி வைக்கணும் என்று முடிவு எடுக்கின்றனர்.

மறுநாள் பங்க்ஷன் தொடங்க எல்லாரையும் கூப்பிட்டு வைத்து இனியா ஃபேமிலி போட்டோ எடுக்கிறார். அதன் பிறகு ஜோசப் குடும்பத்தினர் வீட்டுக்கு வர பாக்யாவின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்க ஜோசப்பை பார்த்து ஈஸ்வரி முகத்தை திருப்பிக் கொள்கிறார். மரியம் மேல இருக்கும் ஜெனியை பார்க்க ரூமுக்கு சென்று விடுகிறார்.

அதைத்தொடர்ந்து குழந்தையை தொட்டியலில் போட்டு விடலாம் என்று சொன்னதும் ஜெனி குழந்தையை தூக்கிக் கொண்டு கீழே வருகிறார். ஜோசப் குழந்தையை வாங்கி கொஞ்சிய பிறகு தொட்டியில் போட்டு பெயர் வைக்கலாம் என்று முடிவெடுக்க அப்போது திரும்பத் திரும்ப திரும்ப எதுக்கு குழந்தைக்கு பெயர் வைக்கணும். அதான் ஏற்கனவே வச்சாச்சுல என்று பழையதை பேச ஈஸ்வரி செழியன் ஓட குழந்தை இந்த வீட்டோட வாரிசு அதுக்கு என்ன பெயர் வைக்கணும் எப்ப பேர் வைக்கணும்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம் என்று பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 04-05-24
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

2 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

2 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

3 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

4 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

4 days ago