கோபி போட்ட பிளான், இனியா கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி ரூமில் இனியா குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க செழியன் இங்கு வந்து விடுகிறார். பிறகு இனியா பாப்பாவை நான் கொஞ்ச நேரம் என் ரூமில் வச்சுட்டு இருக்கேன் என்று தூக்கிச் செல்கிறார்.

பிறகு செழியன் whatsapp குரூப்பில் ஆபீஸ் நண்பர்கள் எல்லோரும் பாண்டிச்சேரி செல்ல ப்ளான் போட்டு இருக்கேன் விஷயத்தை பற்றி பேச ஜெனி நீயும் போறியா என்கிட்ட சொல்லவே இல்லை என்று கேட்க செழியன் என்கிட்ட சொல்லலையா சாரி மறந்துட்டேன் எழில் கிட்ட சொன்னேன் அதை உன்கிட்ட சொன்ன ஞாபகத்துல இருந்துட்டேன் என்று சொல்கிறார். ஜெனி நீ இந்த ட்ரிப்புக்கு போக வேண்டாம் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். செழியன் நான் உங்ககிட்ட வரேன்னு சொல்லிட்டேன் என்று சொல்ல ஜெனி இல்ல நீ போகக்கூடாது நானும் பாப்பாவும் இங்க தனியா இருக்கும் நீ மட்டும் ஜாலியா ட்ரிப்புக்கு போவியா என்று சொல்கிறார். நீ வேணா யார் யார் வராங்கன்னு குரூப்ல பாரு என்று சொல்லி போன கொடுக்க நீ இப்படியெல்லாம் பண்ணும்போது தான் எனக்கு சந்தேகம் அதிகமாகுது, நான் வரலைன்னு சொல்லிடு என்று ஜெனி உறுதியாக சொல்ல செழியன் வேறு வழி இல்லாமல் சரி என்று சொல்கிறார்.

அடுத்ததாக கீழே இறங்கி வரும் கோபி இந்த முறையாவது அம்மாவிடம் விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று அந்த சோபாவில் உட்காருகிறார். இந்த நேரத்தில் ராமமூர்த்தி மற்றும் இனியா அங்கே இருக்க கோபி கால் வலி எப்படி இருக்கு என்று கேட்டு ஈஸ்வரியை வாங்க காரில் வெளியே போயிட்டு வரலாம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூப்பிடுகிறார்.

இந்த நேரம் பார்த்து ஈஸ்வரிக்கு ஒரு போன் கால் வரேன் அப்போது நாளைக்கு செழியன் ஓட குழந்தைக்கு பேர் வைக்கணும் நீங்க கண்டிப்பா வரணும் என்று அழைப்பு கொடுக்க கோபி செழியன் குழந்தை இருக்கு பேர் வைக்கப் போறோமா எப்போ என்ன என்று கேட்க நாளைக்கு தான், நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பொறுப்பான தாத்தாவா வந்து முன்னாடி நில்லு என்று சொல்கிறார். இனியா டாடியை தாத்தா என்று சொல்வது கூட க்யூட்டா தான் இருக்கு என்று சொன்னதும் கோபி விஷயத்தை சொல்ல முடியாமல் எழுந்து செல்கிறார்.

பிறகு பாக்கியா கீழே வர இனியா வெளியே போனேன்னு சொல்லி இருந்தேன் எப்ப போகலாம் என்று கேட்க ஈவினிங் போகலாம் என்று சொல்கிறார். கோபி எங்க போகணும் வா நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்லி இனியாவை கடைக்கு அழைத்துச் செல்கிறார். போகும்போது காலேஜ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று கேட்கும் கோபி வீட்ல உனக்கு எப்படி டைம் போகுது என்று கேட்கிறார்.

அதான் இல்ல பாப்பா இருக்காளே அதுவும் இல்லாம இப்ப செழியன் அண்ணாவோட பாப்பா வேற இருக்கு அதெல்லாம் ஜாலியா போகுது என்று சொல்கிறார். நான் சும்மா கேட்கிறேன் உனக்கு என்று ஒரு தம்பி பாப்பாவோ இல்ல தங்கச்சி பாப்பாவோ இருந்தா எப்படி இருக்கும் என்று கோபி நைஸாக காய் நகர்த்த அது எப்படி டாடி முடியும்? ஏதாச்சும் குழந்தையை தத்தெடுக்க போகிறீர்களா? இல்ல மயூவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர போறீங்களா என்று கேட்கிறார். வேணா அவளை கூட்டிட்டு வராதீங்க. ராதிகா ஆன்ட்டி இங்கே இருக்கிறது எனக்கு பிடிக்கல என்று சொல்கிறார்.

ஏன் இனியா உங்க காலேஜ்ல யாருக்கும் சின்னதா தம்பி பாப்பாவோ இல்ல தங்கச்சி பாப்பாவோ இல்லையா என்று கேட்க அப்படியெல்லாம் இருந்த கன்றாவியா இருக்கும் என்று இனியா ஷாக் கொடுக்கிறார். என் காலேஜ்ல படிக்கிற ஒரு பையனுக்கு 10 வயசு வித்தியாசத்தில் ஒரு தம்பி இருக்கான் அதை எல்லாரும் கிண்டல் அடிச்சுட்டு தான் இருப்பாங்க. இதுல குட்டியா தம்பி பாப்பா தங்கச்சி பாப்பா இருந்தா எப்படி என்று சொல்கிறார்.

உடனே கோபி சரி ஆம்பள பாத்தவங்க கிட்ட கொஞ்சம் பார்த்து நடந்துக்க ரொம்ப பேசாத என்று சொல்கிறார். அவங்கள நல்லவங்க கிடையாது என்று சொல்கிறார். நீங்க மட்டும் என்ன நல்லா ஜாலியா என்று அதிர்ச்சி கொடுக்கிறார். ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டது மட்டுமல்லாமல் அவங்கள கூட்டிட்டு வந்து அம்மா இருக்கிற வீட்டிலேயே இருப்பீங்க அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க. அம்மாவ கஷ்டப்படுத்திட்டு நாங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்க முடியும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் கோபி இனியாவிடமும் விஷயத்தில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

அதைத்தொடர்ந்து பாக்யாவும் செல்வியும் கிச்சனில் இருக்க பாக்யா ஜெனிக்காக ஜூஸ் போட்டுக் கொண்டிருக்க ராதிகா அவருக்காக ஜூஸ் போட கிச்சனுக்கு வருகிறார். பாக்கியா ஜூஸ் போட்டு முடித்ததும் ஜெனிக்கு எடுத்துச் செல்ல ராதிகா ஜூஸ் போட போகும்போது கரண்ட் கட் ஆகி விடுகிறது. இதனால் ராதிகா நான் அப்புறம் ஜூஸ் போட்டுக்குறேன் என்று சொல்லி வெளியே போக பாக்யா ஒரு நிமிஷம் என்று ஜெனிக்காக போட்ட ஜூஸை அவருக்கு கொடுக்கிறார். சரி நல்லவங்களா இருக்கலாம் ஆனா இவ்வளவு நல்லவங்களா இருக்க கூடாது அப்புறம் எல்லாரும் என் தலை மேல ஏறி தாளம் தட்டுவாங்க என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 02-05-24
jothika lakshu

Recent Posts

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

9 hours ago

Gadi Mela Dheko Lyric Video

Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…

9 hours ago

Muttayi Vandi Lyrical Video

Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

9 hours ago

Sakkaraiye Video Song

Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan

9 hours ago

Pandi Muni Kekkudhu Lyrical Video

Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran

9 hours ago

அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…

12 hours ago