பாக்கியாவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. கடைசியில் காத்திருக்கும் டுவிஸ்ட்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பாக்கியாவால் எல்லோரும் உற்சாகமடைகின்றனர். குளிக்கப் போன பாக்கியாவை பார்த்து கோபி அதிர்ச்சடைகிறார். உள்ளே போனதும் பாக்யா கோபியை வெளியே போக சொல்கிறார். குளிச்சிட்டு டிரஸ் மாத்தணும் என சொல்ல கோபி வெளியே வந்து விடுகிறார்.

இந்தப் பக்கம் ஈஸ்வரி பாக்கியா வந்த சந்தோசத்தில் இனி கோபியை ஒழுங்கா நடந்துக்க சொல்லணும் வேற நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடணும் என சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஈஸ்வரி பேச்சை எல்லாம் கேட்டு கோபியின் அப்பா கடுப்பாகிறார். எல்லாம் சரியாகிற நேரம் என கூறுகிறார். ஜெனி நீ எப்பவும் பாக்கியா கூடவே இருக்கணும் அவ மனசை பேசி பேசி நாம தான் மாத்தணும் என ஈஸ்வரி கூறுகிறார்.

இந்தப் பக்கம் கிச்சனில் செல்வி பாக்கியா அக்கா இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கக் கூடாது. தப்பு பண்ணிடுச்சு என சொல்லிக் கொண்டிருக்கிறார். நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் போய் இருக்கணும். இதுக்கு அப்புறம் என்ன பண்ணும் கிச்சனுக்கு வந்து சட்னி செய்யலாமா சாம்பார் செய்யலாமானு பேசிட்டு இருக்கும். மத்தவங்க எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்க்க போயிட்டு வாங்க பாக்கியா அக்காவோட மனசுல இருக்க கஷ்டம் யாருக்கும் தெரியாது. அக்கா மட்டும் வந்து பழையபடி இருந்தா நான் இந்த வீட்டுக்கு வரமாட்டேன் கிளம்பி போயிடுவேன் என கூறுகிறார்.

பிறகு குளித்துவிட்டு வெளியே வந்த பாக்கியா பட்டுப் புடவை கட்டிக்கொண்டு மேக்கப் எல்லாம் போட்டு டிப் டாப்பாகக ரெடியாகி கீழே வருகிறார். பாக்யாவை பார்த்து கோபி அதிர்ச்சி அடைந்து நிற்க ஈஸ்வரி எங்க கோவிலுக்கு போறியா கோபி நீயும் கூட போயிட்டு வா என கூறுகிறார். நேராக வெளியே போன பாக்கியா பைக்கில் இருந்து வக்கீல் நோட்டீஸ் எடுத்துக்கொண்டு உள்ளே வந்து கோர்ட்டில் இருந்து வந்துச்சு. இன்னைக்கு கோர்ட்டுக்கு போகணும்ல என கூறுகிறார். இதனால் குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 01-08-22

jothika lakshu

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

13 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

13 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

20 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

21 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

21 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

21 hours ago