baakiyalakshmi serial episode update 01-01-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தா ரூமுக்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க அங்கு வரும் பாக்கியா அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.
எனக்கு இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரியாது மா சாரிமா என்னால இந்த மொத்த குடும்பமும் கஷ்டப்படுது என்று சொல்ல நாங்க மட்டுமா கஷ்டப்படுறோம். நீ எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன்னு எனக்கு நல்லாவே புரியுது என்று சொல்லிக் கொண்டிருக்க ராதிகாவும் அங்கு வருகிறார். நடந்த விஷயங்களுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது நீயா குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக்காத என்று ஆறுதல் கூறுகிறார்.
மறுபக்கம் எழில் உடைந்து போய் உட்கார்ந்திருக்க ஈஸ்வரி உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் இப்படி ஆயிடுச்சே என்று கலங்க கோபி எழிலுக்கு நாங்கள் இருக்கோம். நீ கவலைப்படாத என்று ஆறுதல் வார்த்தை கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து இனியா ஜெனி வீட்டிற்கு வர ஜெனி இனியாவை கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார். அண்ணா வந்த பாவம் அக்கா அழுதுட்டே இருக்கு டைவர்ஸ் எல்லாம் பண்ணிடாதீங்க திரும்பவும் வீட்டுக்கு வாங்க நாம எல்லாரும் ஜாலியா சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்ல ஜெனி அதற்கு பதில் சொல்லாமல் நீ நல்லா படிக்கிறியா காலேஜ் ஒழுங்கா போகுதா என மழுப்புகிறார்.
பிறகு ஜெனி இனியாவை பத்திரமாக ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி ஜெனி அம்மா மரியம் திரும்பவும் அந்த வீட்ல இருந்து யாராவது வந்தா வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டேன் என ஷாக் கொடுக்கிறார். வீட்டுக்கு வந்த இனியா பாக்யாவிடம் நடந்த விஷயத்தை சொல்லி ஜெனி அக்கா நம்மள விட்டுட்டு போக மாட்டாங்க என்று சொன்னதும் பாக்யா கண் கலங்கி அழ இனியா என்னம்மா ஆச்சு என்று கேட்க செல்வி எழில் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அத்தனையும் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…