baakiyalakshmi-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா வீட்டுக்கு வர செழியன் என்னை வரவில்லை என்ற விஷயம் தெரிந்தது அதிர்ச்சி அடைந்து விடாமல் அவனுக்கு போன் செய்ய கோபி அவன் வேலையா இருப்பான் எதுக்கு இப்படி பண்ற என கோபப்படுகிறார்.
பிறகு ஈஸ்வரி இதை வச்சு ஒரு பிரச்சனை வேண்டாம் என சொல்லி அவரை அழைத்துச் சென்று விட பாக்யா எழிலை கூட்டிக்கொண்டு செழியன் ஆபீஸ்க்கு வர அங்கே மாலினி ப்ராஜெக்ட் முடிந்து ரொம்ப நாளாச்சு இப்போ மாலினிக்கும் இந்த ஆபீஸ்க்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அது மட்டுமல்லாமல் செழியன் ஜெனிக்கு பிரசவமானதும் ஆபீஸே வருவதில்லை என வந்து சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
பிறகு மறுநாள் பாக்கியா கோவிலுக்கு அன்னதானம் செய்ய வர அப்போது மாலினியும் அங்கு வர பாக்யாவை பார்த்து செழியனுக்கு போன் போட்டு நீங்க வரணும் இல்ல நான் உங்க அம்மாகிட்ட எல்லாமே சொல்லிவிடுவேன் என மிரட்ட செழியன் பதறி அடித்து ஓடி வருகிறார்.
மாலினியை தனியாக சந்தித்து பேசும்போது செல்வி அதை பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிட பாக்கியா மாலினி கிளம்பியதும் செழியன் பின்னாடி வந்து நின்று அதிர்ச்சி கொடுக்கிறார்.இங்கு என்னதான் நடக்குது என்ன உனக்கு பிரச்சனை என்று கேட்க செழியன் மாலினி என்னை மிரட்டுறா அவ மேல பரிதாபப்பட்டு தான் அவகிட்ட பேச ஆரம்பிச்சேன். ஆனா இப்போ உங்க அம்மா கிட்ட சொல்லிடுவேன் ஜெனி கிட்ட சொல்லிடுவேன்னு சைக்கோ மாதிரி மிரட்டுறா.. இப்ப கூட என்னை மிரட்டி தான் இங்க வர வச்சா என்று எல்லா உண்மையும் உடைக்கிறார்.
மேலும் நீ ஏதாவது தப்பு பண்ணியா என்று கேட்க நான் எதுவும் தப்பு பண்ணல கடவுள் சத்தியமா நான் தப்பு எதுவும் பண்ணல என சொல்ல பாக்கியா நீ வீட்டுக்கு கிளம்பி நான் பார்த்துக்குறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…