Baakiyalakshmi Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா, ஜெனி, அமிர்தா, இனியா, எழில் மற்றும் செழியன் என எல்லோரும் ஒன்றாக கிச்சனில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பாக்கியா ஒரு பெண் சோப்பு வாங்கிக்கங்கன்னு இங்கிலீஷ்லயே பேசுனா என விஷயத்தை பற்றி சொல்லிக் கொண்டிருக்க அதை கேட்டு எல்லோரும் சிரிக்க அந்த வழியாக வரும்போது என்னடா காலையிலேயே கிச்சன்ல ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு, ரொம்ப சந்தோஷமா இருக்காங்க நானும் ஜாயின் பண்றேன் இது என்னுடைய ஃபேமிலி என சொல்லி கோபி வந்து உட்காருகிறார்.
பிறகு என்ன காமெடின்னு சொன்னா நானும் சிரிப்பேன்ல என்று கேட்க இனியா அம்மா இங்கிலீஷ் கிளாஸ் போறாங்கல என ஆரம்பிக்க கோபி இப்ப கிளாஸ் போனா ப்ளூயண்ட்டா இங்கிலீஷ் பேச முடியாது அதெல்லாம் சின்ன வயசுல இருந்தே கத்துக்கணும் என்று சொல்ல பாக்கியா எல்லாமே சின்ன வயதிலேயே கத்துக்குறாங்களா? நடுவுல கெட்ட விஷயங்களையும் கற்றுக் கொள்ளும் போது நல்ல விஷயங்களை கத்துக்க முடியாதா என்ன என பதிலடி கொடுக்கிறார். செழியன் புரியலையா நீங்க குடிக்கிறத பத்தி நான் அம்மா சொல்றாங்க என ஷாக் கொடுக்கிறார்.
அதன் பிறகு எழில் ஏதோ சைகையில் சொல்ல கோபி என்ன என்று கேட்க பிறகு ராதிகா என்று சொன்னதும் நான் ஒன்னும் பண்ணல காபி குடிக்கல சும்மாதான் உட்கார்ந்து இருக்கேன் என பயந்து அலறுகிறார். இதைப் பார்த்து எல்லோரும் சிரிக்க கோபி இடியட் என திட்டி விட்டு மேல சென்று விடுகிறார்.
அதன் பிறகு ஈஸ்வரி மற்றும் ராம மூர்த்தி பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது ராதிகாவின் அம்மா கையில் சூட்கேசுடன் வீட்டுக்கு வர இதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி நீ எதுக்கு இப்ப வந்த என கேட்க அவர் பதில் ஏதும் சொல்லாமல் ராதிகா ராதிகா என ராதிகாவை கூப்பிடுகிறார்.
என்ன நீயும் இங்க தங்கலாம்னு வந்துட்டியா என்று சொல்ல நான் எதுக்கு இங்க தங்க போறேன் என்று சொல்லி மயூவை கூப்பிட மயூ வீட்டுக்குள் நுழைகிறார். மயூ உங்களோட இருக்கத்தான் கூட்டிட்டு வந்தேன் என சொல்ல இவ எதுக்கு இங்கு இருக்கணும் என ஈஸ்வரி கேள்வி எழுப்ப அப்பா அம்மா இருக்கிற இடத்துல தான் பொண்ணு இருப்பா என்று சொல்ல யாருக்கு யார் பொண்ணு அவ ராதிகாவோட பொண்ணு கோபியோட பொண்ணு கிடையாதுனு சொல்ல ராதிகாவின் அம்மா என்ன மாப்ள அமைதியா இருக்கீங்க அவ என் பொண்ணு தானு சொல்லுங்க என்று சொல்ல ராதிகாவும் பதில் சொல்லுங்க கோபி என கேட்க கோபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.பிறகு கடுப்பாகும் ராதிகா அம்மாவையும் மயூவையையும் கூட்டிக்கொண்டு மேலே ரூமுக்கு சென்று விட ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கோபியை திட்டுகின்றனர்.
பிறகு கோபி மேலே வந்ததும் ராதிகாவின் அம்மா வெளியே சென்று விட ராதிகா கோபியிடம் கோபப்பட கோபி உங்கம்மா தான் ப்ளே பண்றாங்க என்று சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகின்றது. ஒரு கட்டத்தில் கோபி இனியா என்னுடைய பொண்ணு அவளுக்கு நீ அம்மாவா நடந்துக்கனு நான் உன்னை எப்பயாவது கட்டாயப்படுத்தறேனா? நான் உன்கிட்ட எதையும் எதிர்பார்க்காத போது நீ எதுக்கு என்கிட்ட எதிர்பார்க்கிற? உன்னுடைய எதிர்பார்ப்புகளை ஏன் என் மேல திணிக்கிற என ஷாக் கொடுக்கிறார்.
இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…