ராதிகாவின் அம்மா சொன்ன வார்த்தை. கடும் கோபத்தில் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் செல்வி அக்கா பண்றதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லை என பேசிக்கொண்டு இருக்க பாக்யா கிச்சனுக்கு வந்து மயூவுக்காக ஸ்வீட் செய்ய தயாராக அங்கு வந்த ஈஸ்வரி நீ வேக வேகமாக வரும்போதே நினைச்சேன் இப்படி ஏதாவது பண்ணுவேன்னு என்று திட்டுகிறார். பாக்கியா மயூகாக செய்வது தப்பு கிடையாது என எடுத்து சொல்கிறார்.

மறுபக்கம் ராதிகா வீட்டில் கோபியிடம் உங்க அம்மா அப்பா வருவாங்களா என்று கேட்டுக் கொண்டிருக்க கூப்பிட்டு இருக்கேன் வருவாங்களான்னு உறுதியா சொல்ல முடியாது என சொல்லிக் கொண்டிருக்க அப்போது இருவரும் வீட்டிற்குள் நுழைய ராதிகா வாங்க மாமா வாங்க அத்தை என வரவேற்று உட்கார வைக்கிறார். இருவரையும் பார்த்து மயூ சந்தோஷப்பட ஈஸ்வரி பணத்தை எடுத்து கையில் கொடுத்து உனக்கு பிடிச்சதை வாங்கிக்க என கூறுகிறார்.

அடுத்ததாக ராதிகா காபி கொண்டு வந்து கொடுக்க ஈஸ்வரி எனக்கு வேண்டாம் என சொல்ல எனக்காக எடுத்துக்கங்க என்று திரும்பவும் ராதிகா சொல்ல காபியை எடுத்து குடிக்காமல் வைத்து விடுகிறார். பிறகு பாக்கியா செய்து கொடுத்த ஸ்வீட்டை எடுத்து ஊட்ட அதை சாப்பிட்ட மயூ இது பாக்கியா ஆன்ட்டி செய்தது தானே என்று கேட்டு அவங்களுக்கு தேங்க்ஸ் சொன்னதாக சொல்லிடுங்க என்று ராமமூர்த்தியிடம் கூறுகிறார்.

மேலும் ஆன்ட்டிக்கு போன் பண்ணி தாங்க நானே சொல்லிடுறேன் என்று சொல்ல ராமமூர்த்தியும் போன் பண்ணி கொடுக்க மயூ பாக்கியாவிடம் பேச ராதிகாவின் அம்மா போனை வை என சைகையில் சொல்லிக் கொண்டே இருக்க மயூவும் வைத்து விடுகிறார். அதன் பிறகு ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கிளம்பிய பிறகு ராதிகாவின் அம்மா இந்த பாக்கியா எதுக்கு ஸ்வீட் எல்லாம் செஞ்சு கொடுத்தா? அதுல விஷம் ஏதாவது கலந்து இருக்கிறாளோ என்னவோ என்று சொல்ல இதைக் கேட்ட கோபி சண்டைக்கு வருகிறார்.

நீங்க என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க எங்க அம்மா அப்பாவை கூப்பிடலைன்னு ஒரு பிரச்சனை பண்ணீங்க, கூப்பிட்ட பிறகு வருவார்களா வரவில்லையா என்று ஒரு பிரச்சனை பண்ணீங்க, வந்த பிறகு அதுல விஷம் வைத்திருப்பார்கள் என்று பிரச்சனை பண்றீங்க. எங்க குடும்பத்தை பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது என கேட்க அப்படி இல்லை மாப்பிள்ளை அந்த பாக்கியா ஏதாவது என்று இழுக்க பாக்கியா மட்டும் என்ன கொலை காரியா என்று கோபப்படுகிறார்.

உடனே ராதிகாவின் அம்மா பார்த்தியா இன்னும் அவ மேல இவருக்கு பாசம் இருக்கு, அதான் இவ்வளவு கோபம் வருது என்று சொல்ல நீ சொன்னது எனக்கே கோபம் வந்தது என்று ராதிகா அம்மாவை திட்டி தீர்க்கிறார். சந்துருவும் நீ வாயை மூடிட்டு இரு என திட்டுகிறார்.

அடுத்து பாக்கியா வீட்டில் ஜெனியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது செழியன் பேசினானா என்று கேட்க இன்னும் பேசல பேசணும் என கூறுகிறார். அவன் பாதி நேரம் வீட்லதான் இருக்கான் அவனை அங்க வந்து இருக்க சொல்லலாம்ல என்று பாக்கியா சொல்ல அவன் குழந்தை பெத்த பிறகு நேரா ஹாஸ்பிடல் வந்து தான் பார்ப்பான் என்று கூறுகிறார் ஜெனி.

ஜெனி ஃபோனை வைத்ததும் செழியன் வீட்டுக்கு வர நைட்டு எங்க போயிருந்த என ஈஸ்வரியும் பாக்யாவும் கேட்க சீக்கிரம் வேலை முடிஞ்சிடுச்சு அதனால ஜெனியை பார்க்க போயிட்டேன் என செழியன் பொய் சொல்கிறார். பிறகு மேலே போன செழியனை தடுத்து நிறுத்திய பாக்கியா ஜெனி நீ வரத்துக்கு முன்னாடி தான் என்கிட்ட பேசினா நீ அங்க போகல ஏதாவது தப்பு பண்றியா என்று கேள்வி கேட்க செழியன் அதிர்ச்சி அடைகிறார். எனக்கு என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு தெரியும் மா, சும்மா வந்து கேள்வி கேட்டுட்டு இருக்காத என்று கோபப்பட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

அடுத்ததாக எல்லோரும் கேரளாவுக்கு கிளம்ப அங்கு வரும் கோபி கார் டிரைவரிடம் லைசென்ஸ் இருக்கா எவ்வளவு நாளா கார் ஓட்டுறீங்க? ஐவே-ல ஓட்டி பழக்கம் இருக்கா என அடுக்கடுக்கா கேள்வி கேட்டு எல்லோரையும் கடுப்பாக்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-episode-update
jothika lakshu

Recent Posts

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

4 hours ago

சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்

கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…

4 hours ago

குழந்தை பிறப்பை முன்கூட்டியே திட்டமிட்ட சமந்தா… வைரலாகும் பழைய பேட்டி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…

5 hours ago

‘தலைவர் 173’ படப்பிடிப்பு தொடக்கம்… அஸ்வத் மாரிமுத்துவுடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…

5 hours ago

‘கருப்பு’ படத்திற்கு விஜய் தான் முதல் காரணம்… சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஆர்ஜே பாலாஜி!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…

5 hours ago

மீண்டும் இணையும் ‘பிரேமம்’ கூட்டணி… நிவின் பாலியின் 50வது படத்தை இயக்கும் அல்போன்ஸ் புத்திரன்!

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…

5 hours ago