Baakiyalakshmi Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் இனியா நீ காலேஜுக்கு போறத பாட்டியிடம் சொல்றேன் என்று சொல்லி பாக்யாவை மிரட்ட அதெல்லாம் ஒன்னும் பண்ணாத என்று சொல்லிக் கொண்டிருக்க பாக்கியா போடி போய் சொல்லு, இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படி அவங்களுக்கு தெரியாதா போகுது நீயே போய் சொல்றியா நல்லது தான் போய் சொல்லு என்று சொல்ல இனியா அப்ப ஏதோ பிளான் பண்ணி வச்சிருக்கீங்க என்று சொல்ல எழிலும் பாக்கியாவும் சிரிக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து அங்கே வரும் ஈஸ்வரி இனியா எதுக்கு இப்படி சத்தம் போட்டுட்டு இருக்க கோபம் நம்மளையே அடிச்சிடும் இப்படி கோபப்படக்கூடாது என்று சொல்லி எதையோ செய்து இப்ப உன்னுடைய கோபத்தை நான் எடுத்துட்டேன், இனிமே நீ கோபப்படாமல் இருக்கணும்னா தியானம் செய்யணும் என்று சொல்லி போக எழில் பாக்யா சிரித்து இனியாவை கிண்டல் அடிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து ஈஸ்வரி பழங்களை மட்டும் சாப்பிட ராமமூர்த்தி உனக்கு இது போதுமா வயிறு நரம்புமா என்று கேட்க எனக்கு இதுவே தாராளம் என்று சொல்கிறார். மதியம் என்ன சாப்பிடுவீங்க என்று ஏழில் கேட்க கொஞ்சம் ரசம் சாதம் காய்கறி மட்டும் சாப்பிடுவேன் என்று ஈஸ்வரி சொல்கிறார்.
உடனே அப்ப எங்களுக்கும் அதே தானா என்று கேட்க பாக்யா இல்லடா உங்களுக்கு சிக்கன் செய்து வச்சிருக்கேன் என்று சொல்ல எல்லாரும் சந்தோஷம் படுகின்றனர். இதைக் கேட்டதும் காதை பொத்திக் கொள்ளும் ஈஸ்வரி சிவசிவா ஒரு உயிரை கொன்று சாப்பிட எப்படி மனசு வருது? இனி யாரும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்ல எழில் செழியன் எங்களால இருக்க முடியாது என்று சொல்கின்றனர்.
பிறகு ஈஸ்வரி நீங்க சாப்பிடுங்க நான் இனிமேல் சாப்பிட மாட்டேன் என்று சொல்ல சரிங்க அத்தை உங்களுக்கு நான் தனியா சமைத்து வைக்கிறேன் என்று பாக்கியா சொல்ல வேண்டாம் அசைவம் சமைச்சிட்டு நீ சைவம் சமைக்க வேண்டாம் எனக்கானது நானே சமைச்சுக்கிறேன். எனக்கு புது பாத்திரங்கள் மட்டும் வாங்கி வந்து கொடு என்று சொல்கிறார்.
ராமமூர்த்தி ஒரே வீட்ல ரெண்டு சமையலா என்று கேட்க நான் சண்டை போட்டுட்டு சமைக்கலையே எனக்கானது நானே என்னுடைய மனதிருப்திக்காக சமைச்சுக்க போறேன் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து எல்லோரும் உட்கார்ந்து இருக்க எழில் பாக்யா பேட்டி ஒன்றில் என் மாமியார் நான் காலேஜ் போறேன்னு சொன்னா கண்டிப்பா அனுப்பி வைப்பாங்க அவங்களை காலேஜ் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போவாங்க என்று பேசிய வீடியோவை எழில் காட்ட அதை பார்த்த ஈஸ்வரி காலேஜ் என்ன இதெல்லாம் என்று கேட்க என்ன சொல்ல போகிறார் என்று எல்லோரும் பயப்படுகின்றனர்.
ஒரு கட்டத்தில் அப்படியே நீ காலேஜ் சேர்ந்துட்டியா என்று கேட்க பாக்யா ஏமாற்ற என்று சொல்ல என்கிட்ட சொல்லனும்னு உனக்கு தோணவே இல்லையா என்று கேள்வி கேட்க பாக்கியா திகைத்து நிற்கிறார். அடுத்து சரிங்க அத்தை இனிமே நான் காலேஜ் போகல உங்களுக்கு பிடிக்காததை எதுவும் செய்ய மாட்டேன் எனக்கு நீங்க தான் முக்கியம் என்று சொல்லி பாக்யா ஒரு டிராமா போட நீ போய் படிச்சு பெரிய ஆளாகு என்று ஈஸ்வரி சம்மதம் தெரிவிக்க எல்லோரும் சந்தோஷப்பட இனியா ஷாக் ஆகிறார்.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…