கோபி எடுத்த முடிவு. ஷாக்கான இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் கோபி இனியாவிடம் பேசுவதற்காக வாசலில் நின்று கொண்டு வெளியே கூப்பிட இனியா வீட்டுக்குள் வாங்க டாடி என உள்ளே கூப்பிடுகிறார்.

உள்ளே வந்த கோபி நைட்டு எல்லாம் உனக்காக கண் முயற்சி தூங்காமல் யோசிச்சு உன்ன பிபிஎம் படிக்க வைக்கலாம்னு முடிவெடுத்து இருக்கேன் என சொல்கிறார். இதனால் இனியா ஷாக்காக பாக்கியா அவ விஸ்காம் படிக்க போறதா சொல்லி இருக்கா என்று சொல்ல கோபி விஸ்காம் எல்லாம் வேண்டாம் டா நீ பிபிஎம் படி அதை முடித்ததும் எம்பிஏ படி உனக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கும் என்று சொல்ல இனிமையாகவும் இல்ல டாடி எனக்கு விஸ்காம் படிக்கத்தான் ஆசையா இருக்கு என்று சொல்ல கோபி டாடி உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன், நான் உனக்கு நல்ல காலேஜை தேடி மெயில் பண்றேன் உனக்கு எந்த காலேஜ் புடிச்சி இருக்குன்னு சொல்லு அதே காலேஜ்ல சீட் வாங்கி உன்ன சேர்த்து விட்டேன் என சொல்லி கிளம்புகிறார்.

இதனால் இனியா குழப்பத்தில் உட்கார்ந்திருக்க எல்லோரும் சுற்றி உட்கார்ந்து கொண்டு உனக்கு என்ன படிக்கணும்னு ஆசையா இருக்கு அதை படி, டாடி சொல்றாரு என்பதற்காக பிபிஎம் படிக்காத உன்னுடைய முழு மனசுக்கு பிடிச்ச கோஸ் எடுத்து படி அப்பதான் உன்னால நல்லா படிக்க முடியும் என சொல்கின்றனர். யோசிச்சு முடிவெடு என சொல்ல இனியா நான் விஸ்காம் தான் படிக்கப் போகிறேன் முடிவெடுத்துட்டேன் என சொல்கிறார்.

அடுத்ததாக கேண்டினில் பாக்யா செல்விவிடம் கோபி வந்து போன விஷயத்தை சொல்ல அவருக்கு உன்ன மட்டம் தட்டுவது வேலையா போச்சு நீ காலேஜுக்கு போய் ஒரு ரெண்டு மூணு டிகிரி படிச்சு அவர்கிட்ட போய் பேசு அக்கா எனக்கு சொல்ல இந்த வயசுல காலேஜுக்கு போகட்டுமா என பாக்கியா செல்வியை திட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் எழில் ஒரு பெரிய காலேஜ்ல இருந்து விஸ்காம் படிக்க அப்ளிகேஷன் வாங்கி வந்து கொடுக்க வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். செழியன் அந்த அப்ளிகேஷன் ஃபார்ம்-ஐ ஃபில் பண்ண போகும் சமயத்தில் அங்கு கையில் வேறொரு அப்ளிகேஷன் உடன் கோபி வருகிறார்.

உனக்கு ஒரு பெரிய காலத்தில பிபிஎம் படிக்கிறதுக்காக அப்ளிகேஷன் வாங்கி வந்திருக்கேன் உன் மார்க்கை கேட்டதும் அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க நாளைக்கே அப்ளிகேஷன் போட்டு ஃபீஸ் கட்டி காலேஜ்ல சேர்ந்திடலாம் என சொல்ல எல்லாரும் இனியா விஸ்காம் தான் படிக்கப் போறா அதற்கான அப்ளிகேஷன் கூட வாங்கி வந்தாச்சு என்று சொல்ல யாரை கேட்டு இதெல்லாம் பண்ணீங்க என்று கோபி கோபப்படுகிறார்.

அவ விருப்பப்பட்ட படிப்பை படிக்கட்டுமே இதுல என்ன தப்பு இருக்கு என்ன பாக்கியா கேள்வி கேட்க நீ என்ன படிச்சிருக்க படிச்ச டிகிரி எல்லாம் லிஸ்ட் போடுவா என்று பாக்கியாவை ஏளனமாக பேச செழியன் கோபப்படுகிறார். இனியா சின்ன பொண்ணு அவளுடைய பியூச்சருக்கு எது நல்லதுன்னு நாம தான் எடுத்து சொல்லணும், நான் தான் எடுத்து சொல்லணும் அவ பிபிஎம் தான் படிப்பா பிபிஎம் தான் படிக்கணும் என ஆர்டர் போட பாக்யாவும் இனியாவும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்கள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

1 day ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

1 day ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

1 day ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

1 day ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

1 day ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

1 day ago