baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் செல்வி யாரோ ஒருவருக்கு மிளகாய் தூள் டெலிவரி செய்ய செல்ல அப்போது கோபி அந்த ஏரியா செக்ரட்டரியிடம் பேசிக்கொண்டு இருக்க அவர் தேர்தலில் பாக்கியா நிற்பது பற்றி கூற கோபி பாக்கியாவை ஏளனமாக பேசுகிறார்.
இதைக் கேட்டு வீட்டில் வந்து செல்வி சொல்ல கோபியின் அப்பா அம்மா அவரை திட்டுகின்றனர். அடுத்து பாக்கியாவிடம் இரண்டு பெண்மணிகள் வந்து நிச்சயதார்த்த ஆர்டர் பற்றி பேசுகின்றனர். பாக்கியா பண்ணி கொடுக்கிறேன் என்ன சொல்ல அதன் பிறகு அவர்கள் கோபி பிரிந்து சென்றதையும் இனியா அப்பாவோட சென்றது பற்றியும் பேசி நோகடிக்கின்றனர். இந்த நேரத்தில் இனியா கோபியுடன் காரில் வந்து இறங்க பாக்யா இனியாவை பார்த்து சைகையில் பேச கோபி பேச விடாமல் கூட்டிச் சென்று விடுகிறார்.
பின்னர் எழில் அமிர்தாவின் போட்டோவை பார்த்து உட்கார்ந்திருக்க அதை பார்த்த செழியன் அப்படியே விட்டுடு அதுதான் உனக்கு நல்லது என பேச தொடங்கி அமிர்தா எங்கேயோ ஓடிப்போயிட்டதாக சொல்ல எழில் கோபப்படுகிறார். யாருக்கு பிடிச்சாலும் பிடிக்கவில்லை என்றாலும் நான் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என உறுதியாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.
பின்னர் இனியா வெளியே சென்று இருக்க மயூ தூங்கிக் கொண்டிருக்க கோபி ராதிகாவிடம் ரொமான்ஸ் செய்ய நெருங்கி போக அந்த நேரத்தில் கரெக்டாக இனியா வந்து விடுகிறார். இதை பார்த்த ராதிகா கோபியை தள்ளிவிட அவர் சோபாவில் இருந்து கீழே விழுகிறார். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…