baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி தனியாக உட்கார்ந்து இருக்க என்ன எல்லோரும் தூக்கிட்டாங்களா? ஆமா நான் என்ன புது மாப்பிள்ளையா? பழைய மாப்பிள்ளை தானே என புலம்புகிறார்.
பிறகு ராதிகாவின் அம்மா, அண்ணனும் வந்து கோபியிடம் பேச்சு கொடுக்கின்றனர். உங்க வீட்ல இருக்காங்க வந்து மண்டபத்துல அப்படி பிரச்சினை பண்ணுது கொஞ்சம் கூட சரியில்லை என சொல்ல கோபி அதற்கு மன்னிப்பு கேட்கிறார். எங்க வீட்டு சைட்ல உங்கள பத்தி ஒரு வார்த்தை பேசணுமா ஆனா உங்க வீட்ல இருக்கவங்க எல்லாரும் எப்படி பேசினாங்க இனிமே இப்படி நடக்க கூடாது என கூறுகிறார்.
மயூவை உங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கணும், இனிமே நீங்க ராதிகா மயூரா மட்டும்தான் குடும்பம் வேற யாரும் கிடையாது. உங்களுக்கு இரண்டு குடும்பம் எல்லாம் இல்ல ஒரே குடும்பம் தான். ஒரே ஒரு குழந்தை மட்டும் தான் அது மயூ மட்டும்தான் வேற யாரைப் பற்றியும் நினைக்க கூடாது என சொல்ல கோபி அதிர்ச்சி அடைந்து எதுவும் சொல்ல முடியாமல் தலையாட்டிக் கொள்கிறார்.
பிறகு கோபி முதலிரவு அறையில் உற்சாகமாக பாட்டு பாடிக்கொண்டு தயாராக இருக்க இந்த பக்கம் ராதிகாவின் அண்ணி அவளை ரெடி செய்து கொண்டிருக்கிறார். பிறகு ராதிகாவின் அம்மா வந்து நடந்ததெல்லாம் நடந்து போச்சு இனிமேல் நீ வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கணும். அது மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ என சொல்லி அனுப்புகிறார். இதற்கு இடையே மயூ வேற நான் அம்மாவோட தான் தூங்குவேன் என அழைக்க ராதிகாவின் அம்மா அவளை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார்.
பிறகு ராதிகா ரூமுக்கு போனதும் கோபி உற்சாகமாக அவளை உள்ளே வரவேண்டும் உட்கார வைத்து எவ்வளவு அழகா இருக்க தெரியுமா கல்யாணம் ரிசப்ஷன் என எல்லா இடத்திலும் ரொம்ப அழகா இருந்த ஆனா அதை சொல்ல கூச்சமா இருந்துச்சு என சொல்லிக்கிட்டு நெருங்கி போக ராதிகா ஓ என அழுகிறார்.
உடனே என்ன ஆச்சு என கோபி கேட்க ராதிகா கல்யாணத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் வந்திருச்சு என சொல்கிறார். இந்த பக்கம் பாக்கியா எழிலிடம் கொடைக்கானலில் பள்ளி படிப்பை படித்து விஷயத்தை அப்போது அப்பா இறந்து விட எல்லாம் தலைகீழான மாறிய கதையையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பிறகு தூங்குவதற்காக இனியா ரூமுக்கு செல்ல இனியா இங்கே தூங்குமாறு சொல்கிறார். பாக்யாவிடம் ஒரு நிமிஷம் என் பிரண்டு கிட்ட பேசிட்டு வந்துருறேன் என சொல்லி போனை எடுத்துக் கொண்டு கீழே வருகிறார் இனியா. இந்த பக்கம் கோபி ராதிகாவை சமாதானப்படுத்தி முதல் இரவுக்காக நெருங்கி செல்ல அந்த நேரத்தில் சரியாக இனியா போன் பண்ண உடனே கோபி போன் எடுத்து கொண்டு கீழே வந்து பேசுகிறார். இனியா நீங்க இப்படி பண்ணுவிங்கனு நான் எதிர்பார்க்கல, இனிமே நீங்க எனக்கு வேண்டாம் ஐ ஹேட் யூ என்று சொல்லி ஃபோனை வைக்க கோபி அதிர்ச்சி அடைகிறார். கோபி இனியாவிடம் போனில் பேசுவதை பார்த்த ராதிகாவின் அம்மா இனிமே இதெல்லாம் இருக்கக்கூடாது. அவரை கண்ட்ரோல் பண்ற வழிய பாரு என ராதிகாவை எச்சரிக்கிறார்.
அடுத்து ரூமுக்கு போன கோபி இனியா தான் போன் பண்ணா என்ன ரொம்ப மிஸ் பண்றேன் பல அழுதுகிட்டு இருக்கா என சொல்லி ஒரு பைவ் மினிட்ஸ் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன் என பாத்ரூம் செல்ல அதற்குள் மயூ எனக்கு தூக்கம் வரவில்லை என வந்து ராதிகாவின் பக்கத்தில் படுத்து கொள்கிறார். பாத்ரூமில் இருந்து வந்து பார்த்து கோபி ராதிகாவுடன் மயூ இருப்பதை பார்த்து பல்பு வாங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…