baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி மற்றும் இனியா என இருவரும் ராதிகா வீட்டிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதை மறைமுகமாக சொல்ல முயற்சி செய்கிறார். வீட்ல பேசுறவங்க மாதிரி ராதிகா கிடையாது, அவ ரொம்ப நல்லவ. ஒரு பத்து நிமிஷம் அவளோட பேசினா அது உனக்கே புரிஞ்சிடும் என கோபி கூறுகிறார்.
இதனால் குழம்பும் இனியா அதெல்லாம் என்கிட்ட எதுக்கு டாடி சொல்றீங்க? அவங்கள பத்தி நான் எதுக்கு யோசிக்க போறேன் என சொல்ல கோபி நமக்குள்ள யார் வந்தாலும் என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் என் உயிர் உள்ளவரை உன்னோடு இருப்பேன் என கூறுகிறார். பிறகு டிரெஸ்ஸை எடுத்துக் கொடுத்து என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான முடிவு எடுத்து இருக்கேன் அதோட நினைவாக தான் இந்த டிரஸ் என கூறுகிறார். டிரஸ்சை பார்த்த இனியா மகிழ்ச்சி அடைகிறார்.
இந்தப் பக்கம் எழில் தயாரிப்பாளரிடம் ஆபீஸை காலி பண்ண போவதாக சொல்ல அவர் சூட்டிங்கிற்கு எப்போது போகப் போறீங்க என கேட்க எழில் குழம்ப பிறகு படத்தை தொடர்ந்து பண்ணலாம் என கூறுகிறார். எழில் சந்தோஷத்தில் நன்றி சொல்ல இந்த நன்றியை வர்ஷினிக்கு சொல்லுங்க என கூறுகிறார். அவள் தான் உங்க மேல நம்பிக்கை வச்சு என்னுடைய முடிவை மாற்றியதாக கூறுகிறார்.
பிறகு இனியா வீட்டுக்கு வந்து இறங்கியதும் கோபியும் பாக்கியாவும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்கின்றனர். அடுத்ததாக ஆபீஸில் எழில் வேலை செய்து கொண்டிருக்க அங்கு வந்த வர்ஷினி பேச்சு கொடுக்க அந்த நேரத்தில் அமிர்தா போன் பண்ண பிறகு இருவருக்கும் என்ன லவ்வா என கேட்க எழில் ஆமாம் என சொல்கிறார். எழில் போன் பேச போன நேரத்தில் வர்ஷினி கார் டிரைவருக்கு போன் போட்டு வர வேண்டாம் என சொல்லி பிறகு எழிலிடம் பைக்கில் கூட்டிச் செல்லுமாறு உதவி கேட்க அவனும் சரியென சொல்கிறான்.
பிறகு வீட்டில் ஈஸ்வரி செழியனிடம் கோபி போன் பண்ணானா என கேட்க அவன் இல்லை என கூறுகிறான். பின்னர் இனியாவை கூப்பிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்க என கேட்க ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்ததாக பொய் சொல்ல ஜெனி இல்ல அவ ஏதோ டிரஸ் போட்டு பார்த்துட்டு இருந்தா என கூற என்ன ட்ரஸ் என கேட்கிறார். உடனே இனியா அப்பா வாங்கி கொடுத்ததாக சொல்கிறார். அப்பாவோட வெளியில போயிருந்தேன் அப்போ ராதிகா வீட்டுக்கு கூட்டிட்டு போனதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…